இடுகைகள்

நேர்காணல்! - அஜய் சாஹ்னி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: நகர நக்சலைட் - நீதிவிசாரணைக்கு உதவாத வார்த்தை!

படம்
"நகர நக்சலைட் போன்ற வார்த்தைகளால் நீதிவிசாரணைக்கு பிரயோஜனமில்லை" அஜய் சாஹ்னி, Institute for Conflict Management.   தமிழில்:ச.அன்பரசு நக்சலைட்டுகளின் ஆதரவாளர்கள் என்று கூறி இந்திய அரசு ஐந்து மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்(UAPA) பிரிவில் வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ள ஐவரின் கைது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக.28 அன்று கைதான செயல்பாட்டாளர்கள் குறித்து அரசு சமர்ப்பித்த வாதங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?   அரசு சமர்ப்பித்த ஆதாரங்கள் அனைத்தும் நகைச்சுவை பிரதியாக தோன்றுகின்றன. விசாரணை எனும் தண்டனையை செயல்பாட்டாளர்களுக்கு வழங்கவே இந்த நாடகம் நிகழ்த்தப்படுவதாக தோன்றுகிறது. ஆமைவேக நீதித்துறையின் விசாரணை முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை கிடைக்கலாம் அல்லது மறுக்கப்பட்டு சிறை வாழ்க்கையையும் அனுபவிக்க நேரிடலாம். அதிகாரிகளின் குற்றச்சாட்டின் பின்னணியை நீதிபதி கவனிக்காதபோது குற்றம்சாட்டப்பட்டவர்களை மீட்பது கடினமான பணி. அருண் ஃபெரிரா, வதந்தி படுகொலைகள் குறித்த புகைப்பட கண்காட்சி