இடுகைகள்

மேஜிக் விண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் விபத்து ஏற்படுத்தி நினைவுகளை இழக்கச்செய்தவர்களை பழி வாங்கும் மேஜிக் விண்ட்!

படம்
  ஆத்மாக்கள் அடங்குவதில்லை லயன் முத்துகாமிக்ஸ் மூலம் - செர்ஜியோ போனெல்லி பதிப்பகம் தமிழில் எஸ் விஜயன் # 49வது சென்னை புத்தக காட்சி 2026 இதுதான் மேஜிக் விண்ட் என்ற நாயகனுக்கு முதல் அறிமுக கதை. முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு காமிக்ஸ்கள் இருந்தன. அதில், வேறொன்றை எடுத்தேன். அப்புறம் பார்த்தால் இதுதான் தொடக்க கதை. நாயகன் யாரென்ற புரிந்துகொண்டால்தான் அடுத்த கதைக்கு நகர முடியும். எஸ் விஜயன் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்வார். அதை எப்போதும் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.  இந்த நூலை கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். காலக்கட்டாயத்திற்காக கலர் போல. அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பூச்சு. சியோக்ஸ் இனத்தைச்சேர்ந்த செவ்விந்தியர்களின் மாந்திரீகர் எதையோ தேடி வருகிறார். பார்த்தால், அவர் அங்கு குற்றுயிராக கிடக்கும் நாயகன் எழுவதைப் பார்த்து தூக்கி வந்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு தான் யார் என்றும் தெரியவில்லை. நினைவுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. மாந்திரீகருக்கு அவருடைய காலம் முடிவடையும் தருவாயில் உள்ளார். ஆனால், அவருக்கு அடுத்து அவரது நிலையில் இருக்கக்கூட...