இடுகைகள்

ஆமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் முயற்சி - ஒடிஷா மாநில அரசின் ஆமையைக் காக்கும் தடை!

படம்
  pinterest ஒடிசா மாநிலத்தின்  கேந்திரபாரா மாவட்டத்தில் கதிர்மாதா, எனும் கடல் உயிரினங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1,435 சதுர கி.மீ.ஆகும். இதில் பாதுகாக்கப்பட்ட காடுகள், வண்டல்மண் பரப்பு, மணல் திட்டுகள் உள்ளன. இக்கடல்பரப்பை, 1997ஆம் ஆண்டு கடல் சரணாலயமாக ஒடிஷா அரசு அறிவித்தது. இங்கு அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ஆலிவ் ரிட்லி ஆமைகள். ஆண்டுதோறும் முட்டைகளை இட அதிகளவு எண்ணிக்கையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இங்கு வருகின்றன.  சரணாலயத்திற்கு வரும் ஆமைகளை பாதுகாக்கவென வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வரும் இடங்களில் கதிர்மாதா கடற்புரமும் ஒன்று. ஆண் ஆமைகள், பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கம் முடிந்தவுடன் கடலுக்குள் திரும்பிச்சென்று விடுகின்றன. கருவுற்ற பெண் ஆமைகள் சூரியன் வானில் மறைந்தபிறகு மணல் பரப்பிற்கு முட்டையிட வருகின்றன. நெடுநேரம் யோசித்து முட்டையிடுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. தோராயமாக ஒரு ஆமை,  மணலில் குழிதோண்டி 120 முதல் 150 வரையிலான  முட்டைகளை  இடும். பிறகு, திரும்பி

குடும்பத்தில் ஒன்றாக இணையுங்க ப்ரோ! ஓவர் தி ஹெட்ஜ் 2006

படம்
                ஓவர் தி ஹெட்ஜ் அனிமேஷன்    Director: Tim Johnson, Karey Kirkpatrick Produced by: Bonnie Arnold Screenplay by: Len Blum, Lorne Cameron, David Hoselton, Karey Kirkpatrick     போக்கிரியாக பிறரது உணவைத் திருடி தின்று வாழும் நரி , தனக்கு ஏற்பட்ட வாழ்வா சாவா சூழ்நிலையில் உயிர்பிழைக்க செய்யும் பிரயத்தனங்களே கதை . கதையின் லைன் சின்னதுதான் . நரி கரடிக்கு மக்கள் கொடுத்துள்ள தீனியை திருடுகிறது . போதும்கிற எண்ணம் நரிக்கு வராமல் போக அத்தனை தீனியையும் திருடுகிறது . அதனை கொண்டுபோகும் போது ஏற்பட்ட லாஜிஸ்டிக் பிரச்னையால் கரடி உறக்கம் கலைந்து விழித்துவிட அப்புறம் என்ன சண்டைதான் . இதில் கொள்ளையிட்ட தீனி அனைத்தும் சாலையில் விழுந்து வாகனங்களில் அரைபட்டு நாசமாகிறது . கோபமாகும் கரடி பௌர்ணமி வரை டைம் கொடுத்து ஸ்னாக்ஸை வாங்கித் தரச்சொல்லுகிறது .   அதற்காக நரி அப்பாவி குடும்பம் ஒன்றை பயன்படுத்திக்கொள்கிறது . இதனால் அந்த குடும்பத்திற்கு நேரும் பாதிப்புகள் என்னென்ன என்பதை காமெடி , நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள் . தனியாக இருப்பதை விட குடும்பமாக ஒன்றாக சேர

கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ?   வின்சென்ட் காபோ     கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன? அவை சூரியனின் இடத்தை மையமாக கொண்டு வாழ்கின்றன. அவற்றின் வாசனை நுகர்வுத்திறனும் அதிகம். இதனால் அவற்றால் அவை பிறந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து, இணை சேர்ந்து குஞ்சுகளை மணலில் பிறக்க ஏதுவான நிலையில் விட்டுவிட்டு செல்கின்றன. அப்படி பிறக்கும் குஞ்சுகள் பாதுகாப்பாக பிறந்த இடம் நினைவில் நிற்கும். எனவே, அவையும் அதே கடற்கரைக்கு முழு வளர்ச்சியடைந்த பிறகு வரும். இப்போது மின் விளக்குகளை அதிகம் எரிப்பதால், ஆமைகள் தடுமாறி வருகின்றன. இவற்றை காப்பாற்றவும் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன. ஆமைகளின் இன்னொரு சிறப்பம்சம், அவற்றின் புவிஈர்ப்பு விசையை அறியும் தன்மை. மேக்னடோரிசப்ஷென் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். இதன்மூலம் சரியான இடத்தை ஆமைகள் சென்று சேர்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தூக்கம் நமக்குத் தேவையா? நேரு நான்கு மணிநேரம்தான் தூங்கினார் என சிலர் ஊக்கமாக பேசுவார்கள். ஆழமான தூக்கம் வரும் நேரத்தை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அந்த நேரம் மட்டுமே கூட தூங்கினால் போதும். ஆனால் அனைவ