பெண்கள் சுய இன்பம் செய்வதை, உறவில் உச்சம் அடைவதை மைய நீரோட்ட திரைப்படங்கள் காட்ட மறுக்கின்றன!
தர்சனா ஶ்ரீதர் மினி விஸ்கான்சின் பல்கலைக்கழக துணை பேராசிரியர் மென் ஆபாச படங்களை ஆராய்ச்சி செய்ய எப்படி எண்ணம் வந்தது? எம்பில் படிக்கும்போது, இளைஞர்கள் எப்படி பாலியல் கல்வியை புரிந்துகொள்கிறார்கள் என்று அறிய நினைத்தேன். இதைப்பற்றி சிலரிடம் பேசியபோது, அவர்கள் மென் ஆபாச படங்களைப் பார்த்து கற்றுக்கொண்டதாக கூறினர். சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் மென் ஆபாசப்படங்களை தயாரிக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. ஐந்து மாதங்கள் காத்திருந்தபோது, அத்துறை சார்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அப்படங்களின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி கூறுங்கள். தொண்ணூறு தொடங்கி இரண்டாயிரம் வரையிலான காலகட்டத்தில் மைய நீரோட்ட திரைப்படங்கள் பெரிய இயக்குநர்கள் இயக்கினாலும் வெற்றி பெறவில்லை. படுதோல்வியை தழுவின. அப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் மென் ஆபாச படங்களை எடுக்கத் தொடங்கினர். இந்த படங்களில் கதை ஒரே மாதிரிதான் இருக்கும். மொத்தம் பதினைந்து பெண்கள் இப்படங்களில் நடித்தனர். இதில் புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா. இவருக்கு படத்திற்கான சம்பளம் என்று பேசாமல், தினசரி சம்பளம் பேசப்பட்டது. ஒரு...