பெண்கள் சுய இன்பம் செய்வதை, உறவில் உச்சம் அடைவதை மைய நீரோட்ட திரைப்படங்கள் காட்ட மறுக்கின்றன!

 

 


தர்சனா ஶ்ரீதர் மினி
விஸ்கான்சின் பல்கலைக்கழக துணை பேராசிரியர்

மென் ஆபாச படங்களை ஆராய்ச்சி செய்ய எப்படி எண்ணம் வந்தது?

எம்பில் படிக்கும்போது, இளைஞர்கள் எப்படி பாலியல் கல்வியை புரிந்துகொள்கிறார்கள் என்று அறிய நினைத்தேன். இதைப்பற்றி சிலரிடம் பேசியபோது, அவர்கள் மென் ஆபாச படங்களைப் பார்த்து கற்றுக்கொண்டதாக கூறினர். சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் மென் ஆபாசப்படங்களை தயாரிக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. ஐந்து மாதங்கள் காத்திருந்தபோது, அத்துறை சார்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.

அப்படங்களின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி கூறுங்கள்.

தொண்ணூறு தொடங்கி இரண்டாயிரம் வரையிலான காலகட்டத்தில் மைய நீரோட்ட திரைப்படங்கள் பெரிய இயக்குநர்கள் இயக்கினாலும் வெற்றி பெறவில்லை. படுதோல்வியை தழுவின. அப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் மென் ஆபாச படங்களை எடுக்கத் தொடங்கினர். இந்த படங்களில் கதை ஒரே மாதிரிதான் இருக்கும். மொத்தம் பதினைந்து பெண்கள் இப்படங்களில் நடித்தனர். இதில் புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா. இவருக்கு படத்திற்கான சம்பளம் என்று பேசாமல், தினசரி சம்பளம் பேசப்பட்டது. ஒருநாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால் அவருக்கு தெரியாத உண்மை, இப்படி எடுத்த காட்சிகளை பல திரைப்படங்களில் பயன்படுத்தி தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் லாபம் சம்பாதித்தனர்.

ஷகீலாவின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்பட்டது?

மென் ஆபாச படங்களின் அடையாளமாக ஷகீலா பார்க்கப்பட்டார். அவர் மைய நீரோட்ட திரைப்படங்களை இயக்க விரும்பினார். ஆனால், அதை யாரும் விரும்பவில்லை. அவரை நடிகையாகவே பார்க்க விரும்பினர். அவர், பால்புதுமையினரின் நலன்களுக்காக பேசியிருக்கிறார். இப்போது அரசியலில் நுழைந்திருக்கிறார். அவர் என்ன பொறுப்பை ஏற்று செயல்படப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

பெண்கள் சுய இன்பம் அனுபவிப்பது, உச்சம் அனுபவிப்பது போன்றவற்றை மென் ஆபாசப்படங்களி்ல காட்டுவதற்கு என்ன காரணம்?

மைய வணிக திரைப்படங்களில் பெண்களுக்கான பாலியல் மகிழ்ச்சி பற்றி யாரும் குறிப்பிட, காட்ட விரும்புவதில்லை. பெண்கள் மகிழ்ச்சிக்கான முகவர்களாக இருக்கிறார்கள். இப்படி உண்மை இருப்பதை முன்னணி ஊடகங்கள், கற்பனை செய்துகூட பார்க்க பயப்படுகின்றன. அவற்றை மறைக்கின்றன. பெண்கள் பாலியல் மகிழ்ச்சி பெறுவதை ஏன் திரைப்படங்களில் காட்ட மறுக்கிறீர்கள் என்று சில இயக்குநர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், நாயகன் பெண்ணை இன்பம் அனுபவிக்குமாறு கூறுவதாக அவர்கள் கதையை மாற்றியதைக் கூறினர். அதாவது, பெண் பாலியல் மகிழ்ச்சியை அனுபவிக்க, ஆண் அனுமதி கொடுக்கிறான் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மென் ஆபாசப்படங்களை பெண்கள் பார்க்கிறார்களா?

கேரளத்தில் மென் ஆபாசப்படங்களை பார்ப்பவர்கள் பலரும் விலைமாதுக்களாகவே இருக்கிறார்கள். கேபிள் தொலைக்காட்சி சேனல்களில் நள்ளிரவுக்கு மேல் இத்தகைய படங்களை ஒளிபரப்புகிறார்கள். அதை பெண்கள் பார்க்கிறார்கள். இப்படங்களில் உள்ள நாயகிகள், தனித்து இயங்குகிறார்கள். மத்திய வர்க்க மனநிலை கொண்டவளாக இல்லை. சுதந்திரமாக இருக்கிறார்கள். இதற்கு எதிர்மறையாக, இப்படங்களில் நடிக்கும் ஆண்கள், ஏதாவது தகவல்களை பகிர்ந்துகொள்ளவே மிகவும் தயங்கினர். அவர்கள் நடிப்பதை பெண்மையுடன் இருப்பதாக தாழ்வுணர்ச்சியுடன் புரிந்துகொண்டனர். ஷகீலாவோடு நடித்த பலரும் திரைப்படங்களில் துண்டு, துக்கடா பாத்திரம் போல கூடுதல் நடிகர்கள் என்றே நினைத்து நடித்திருந்தனர்.
 





டைம்ஸ் ஆப் இந்தியா - கேட்டகி தேசாய்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்