அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி - மக்கள் அதிகாரம்

 

 


 

 

 

 

மக்கள் அதிகாரம்
1

தமிழ் திரைப்படங்களில் காவல்துறையினரின் கொடூரங்களை உண்மையைக் காக்க அப்படி செய்கிறார்கள் என காட்டியிருப்பார்கள். ஆய்வாளர், தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி யாரொருவரையும் கள்ளத்துப்பாக்கியால் சுடுவார். அல்லது அரசு வழங்கிய துப்பாக்கியால் சுட்டுவிட்டு எப்படி கணக்கு காட்டவேண்டுமென தனக்கு தெரியும், உரிமம் பெற்ற ரவுடி, எவுடாய்த்தே நாக்கேண்டி, சம்பேஸ்தா, கண்ட கோசேஸ்தா என பொறிபறக்க வசனம் பேசுவார். இதெல்லாம் திரையில் சரி. நிஜத்தில் பாதிக்கப்படும் மக்கள் எவரும் கல்லறையில் இருந்து மீண்டெழுந்து தனக்கு நடந்த அநீதியைக் கூறுவதில்லை. அதுதான் வன்முறையின் பலம். செத்தால் புதைத்துவிடலாம். உயிரோடு இருந்தாலும் கை, கால்களை உடைத்து விட்டால் அவன் சோறு தின்ன, மலம் கழிக்க உடல் ஒத்துழைக்கவே பல மாதங்கள் ஆகும். அதுவுமில்லாமல் வன்முறை ஏற்படுத்திய பயம் காரணமாக அரசுக்கு எதிராக அவன் சாட்சியமும் கூறமாட்டான்.

அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்களுக்காக, நேரடியாக அரசுக்காக என ஏதோ ஒருவகையில் மக்கள் மீது காவல்துறையின் தாக்குதல் அல்லது கொலை நடைபெறுகிறது. இப்படியாக வன்முறை, வன்முறை நிகழ்ந்துவிடும் பயத்தை அரசும், காவல்துறையும் ஏதோ ஒருவகையில் தனது ஆதரவு சக்தியை வைத்து கூறிக்கொண்டுதான் இருக்கிறது.

யாரையாவது உதைத்து தான் நினைப்பதை செய்ய வைப்பது. அல்லது உதை விழுந்துவிடுமோ என்ற பயத்தில் ஒன்றை செய்யாமல் இருப்பது என இருவேறு வகையில் செயல்பாட்டை அரசு அமைத்துக்கொள்கிறது. தவறு செய்தால் தண்டனை. தண்டனைக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பது. காவல்நிலையத்தில் வழுக்கி விழும் சிகிச்சை வேறு நடக்குமே என அமைதியாக தன் வேலையைப் பார்ப்பது என செயல்கள் நம்மைச்சுற்றி நடக்கின்றன.

ஒருவர், ஒரு கடையை அடித்து உடைத்து காசை எடுத்துக்கொண்டு உரிமையாளரை கைது செய்துகொண்டு போகிறார் அல்லது சொறிநாயை எத்துவது போல காலால் உதைத்து எட்டி வீசிவிட்டு போகிறார்.மக்கள் இதை அநீதி என்று சொல்வதில்லை. ஏனெனில் இது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது. காக்கி அல்லாதவர்கள் செய்தால் ரவடித்தனம், அநீதி என்று சொல்வார்கள். இன்று அரசே, தனது வேட்டை நாய்களான காவல்துறை, ராணுவம் மூலம் அநீதியான காரியங்களை செய்துகொள்கிறார்கள். இதற்கு சட்டம் எனும் முட்டு கொடுக்கப்படுகிறது. வன்முறை, வன்முறை மீதான ஆர்வம் என்பது சமூகத்தின் அனைத்து மூலை முடுக்கெங்கும் பரவியிருக்கிறது.

அதிகாரம் என்பது அரசிடம் இருக்கிறது அதை தக்கவைத்துக்கொள வன்முறை, வலுக்கட்டாயம் என்பதை அரசு எப்போதும் கருவிகளாக பயன்படுத்துகிறது. இந்த நேரத்தில் மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்று பார்ப்போம். பொதுவாக, இதை பேரழிவு, ஒழுங்குமுறையற்றது என்று கூறுவார்கள். பொதுவான கருத்து என உருவாகியுள்ளது இதுதான்.

கம்யூனிச தத்துவத்தை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ் என இருவரும் சோசலிசத்தின் பின்னே மக்கள் அதிகாரம் வரும் என கூறிச்சென்றிருக்கிறா்கள். இன்று அக்கருத்துக்ளை பின்பற்றுபவர்கள் என நம்பும் ஆட்களே கேட்டாலே அவர்களுக்கு மக்கள் அதிகாரம் பற்றி ஏதும் தெரியாது. தெரியாது என சொல்வானேன் என வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டிவிட்டு செல்வார்கள். மக்கள் அதிகாரம் என்பது மனிதர்கள் சிந்தித்து உருவாக்கியதில் முக்கியமான கருத்து எனலாம். அதுவே சுதந்திரம், மகிழ்ச்சி, நலம், அமைதி என அனைத்தையும் தரக்கூடியது. அதாவது, அக்கருத்தை புரிந்துகொண்டு செயல்படுத்தினால் என்பதே இதன் அர்த்தம்.

பேரிடர், ஒழுங்கின்மை என்பவர்கள் மார்க்ஸை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல. நேர்மையாளர்களும் அல்ல.

மக்கள் அதிகாரம் என்பது வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதோ, ஒழுங்கின்மையோ, பேரிடரோ அல்ல. கொலை செய்வதோ, கொள்ளை அடிப்பதோ அல்ல. பிறரின் மீது தொடுக்கும் போர் அல்ல. காட்டுமிராண்டித்தனமோ, மூர்க்கமான மனநிலையோ அல்ல.

மேற்சொன்னவற்றைத்தான் மக்கள் அதிகாரத்தின் வரையறைகளாக, பல மூடர்களும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அறியாமையை வெளிப்படையாக கூறுவது, இன்றைய நாகரிகமாகிவிட்டது அல்லவா? விதிவிலக்குகள்தான் விதியை நிரூபிக்கின்றன என்று கூறும் வகையில் யாருமே இல்லை.

மக்கள் அதிகாரம் என்பது, உங்களுக்கு சுதந்திரத்தை அளிப்பது. நீங்கள் யாருக்கும் அடிமை இலைல என்று கூறுவது, யாரும் உங்களை கொள்ளை அடிக்க முடியாது என மறுப்பது, மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, உங்களை பகடைக் காயாக பயன்படுத்த முயல்வதை எதிர்ப்பது.

உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்து வாழலாம். அதில் யாரும் தலையிட முடியாது. உங்களுக்கு உள்ள உரிமை, அருகிலுள்ள மனிதர்களுக்கும் உள்ளது என்பதை உணர்வது அவசியம். போர், வன்முறை, ஏகபோகம், வறுமை, சுரண்டல் ஆகியவற்றை சக மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என மக்கள் அதிகாரம் கூறுகிறது.
 

மூலம்

அலெக்சாண்டர் பெர்க்மன் - ஏபிசி ஆப் அனார்சிசம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்