வணிகத்திற்காக நடந்த போர்!

 

 



பாயும் பொருளாதாரம்
14

போர் எப்படி தொடங்குகிறது?

போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம்.

அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன.

இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. இங்கிலாந்து நாட்டின் பேரரசரே, அபினியை விற்று மக்களை அடிமையாக்கி சீனத்தை சுரண்ட முயன்ற அவலம், வணிகத்திற்காக நடைபெற்றது. அப்போது சீனத்தின் பட்டு, தேயிலை உலகளவில் பிரபலம். உலக நாடுகளை சீனர்கள் மரியாதைக்குறைவாக நடத்தவில்லை. ஆனால், வணிகம் என்பது வணிகம் மட்டுமே என நிறைய விதிகளை விதித்து வணிகம் செய்தனர். இதை வல்லரசு நாடுகள் ஆட்சேபித்து மன்னர் ஆட்சி பலவீனமானபோது, போர் தொடுத்து வென்று வணிகத்தை  வெற்றிகரமாக செய்தன.

சிரியாவில் 2011ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் மக்களுக்கு எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பஞ்சம் காரணமாக வயல்களில் வேளாண்மை ஏதும் நடக்கவில்லை. விவசாயிகள் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகரத்திற்கு சென்றனர். அப்படியும் கூட உணவுக்கு பற்றாக்குறை இருந்தது. அரசு, நாட்டின் இயற்கை வளங்களை மக்களுக்கு முறையாக வழங்கவில்லை என்று கோபத்தில் மக்கள் போராட்டங்களை செய்யத் தொடங்கினர். அரசு இதற்கு வழக்கம்போல துப்பாக்கி மூலம் பதில் சொன்னது. உள்நாட்டுப் போர் வெடிக்க அது போதுமே?

1945-1991 காலகட்டத்தில் அமெரிக்கா - சோவியத் யூனியன் ஆகிய இருநாடுகளுக்கு இடையே அரசியல், கருத்தியல், சமூக பொருளாதாரம் என அனைத்திலும் நீயா, நானா போட்டி நிலவியது. இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை தயாரிக்கத் தொடங்கின. இருநாடுகளும் பொதுவெளியில் சந்திக்கும்போது வாங்க எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாம் சௌக்கியமுங்களா என்று விசாரித்து கொண்டாலும் உள்ளுக்குள் உன்ன போட்டுத்தள்ளிரண்டா ராஸ்கோல் என்ற கோபமே குமுறிக்கொண்டிருந்தது. எனவே, இருநாடுகளுமே அணு ஆயுத தனிமங்களைப் பெற்று ஆயுதங்களை தயாரித்து தள்ளின. சோவியத் யூனியன் இன்று உடைந்துவிட்டாலும் கூட அன்று ஒற்றுமையாக ஒருங்கிணைந்த நாடுகளை இன்றும் போரிட்டாவது பெற்று இணைய வைக்க ரஷ்ய அதிபர்கள் முயல்கிறார்கள். சீனாவும் இதேபோல முயற்சியை தைவான், ஹாங்காங்கில் செய்து வருகிறது. பலசாலி சொல்வதுதான் சட்டம் என்ற உலக விதிப்படி அவை சாத்தியமாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

வணிகத்திற்காக நிறைய போர்கள் நடந்துள்ளன. இன்று ரஷ்யா உக்ரைனுடன் போர் செய்கிறது. இதற்கு காரணம், உக்ரைனில் உள்ள இயற்கை வளங்கள். அது தனி நாடாக இருக்கும்போது, ரஷ்யா அதன் வளங்களை அனுபவிக்க முடியாது. எனவே, ஆக்கிரமிப்பு போர் நடக்கிறது. இந்தப்போரில் ரஷ்யா வென்றாலும் போர்வெறி அதோடு முற்றுபெறாது. சோவியத் யூனியன் காலத்தில் இணைந்து இருந்த அனைத்து நாடுகளோடும் போர் நடக்கும். அவற்றையும் தன்னோடு கையகப்படுத்தும். ஏனெனில் அந்த நாடுகளில் இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதை இன்னொரு வல்லரசு நாட்டுக்கு விட்டு்க்கொடுக்க முடியாதே?

போர் நடக்கும்போது பொதுவாகவே வணிகம் பாதிக்கப்படும். உக்ரைன் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு. போர் சமயங்களில் இணையம் இருக்காது. மின்சாரம் இருக்காது. தின்ன சோறு இருக்காது. இப்படி இத்தனை காதுகள் இருப்பதால், வணிகம் சிறக்காது. உக்ரைனில் அதிபராக இருப்பவரே, நாடு நல்லநிலைமைக்கு வந்தால் அதிபராக இருக்க மாட்டார். அவருக்கு மக்களின் ஆதரவு இருக்காது என்பதே ஜனநாயக வினோதம்.

குக்கர், வாஷிங்மெசின் என பல்வேறு கண்டுபிடிப்புகள் வந்தவுடனே பெண்கள் வீட்டில் செய்யும் வேலைநேரம் குறைந்தது. அதன் மூலம் அவர்கள் பல்வேறு தொழில் வாய்ப்புகளை பெற்றனர். சுயமாக வேலை செய்தனர். தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்ந்தனர். இதுபோன்ற மாற்றங்களை தொழில்நுட்பம் உருவாக்கியது. நாம் செய்யும் வேலைகளை இன்னும் வேகமாக துல்லியமாக செய்ய தொழில்நுட்பம் உதவுகிறது.

மதக்கலவரம் செய்யும் தீவிரவாத இயக்கம், முதலில் பாபர் மசூதியை இடிக்க கடப்பாரை, மம்பட்டி என பல்வேறு பொருட்களை பயன்படுத்தியது. இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் ஜேசிபி நிறுவனத்தின் கருவிகளைப் பயன்படுத்துகிறது. மசூதிகள், தேவாலயங்கள், சிறுபான்மையினர் வீடுகள் வெற்றிகரமாக இடிக்கப்பட்டு வருகின்றன. இதை மக்கள் தடுப்பார்களோ என்ற பயத்தில் மெட்டா நிறுவனத்திற்கு கையூட்டு அளிக்கப்பட்டு வாட்ஸ்அப்பை மதவாத கட்சியும், இயக்கமும் கட்டுப்படுத்தி போலிச்செய்திகளை பரப்புகின்றன. மாட்டு மூத்திரத்தில் ஆன்டிபயாடிக் உள்ளது அப்படியே குடிக்கலாம் என போலி அறிவியலை பரப்புகிறார்கள். இதேநேரத்தில் சீனாவில் கல்வி ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக டீப்சிக் எனும் ஏஐ கண்டறியப்பட்டுள்ளது. மிக குறைவான தொகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் அது. இந்தியாவில் சாணியில் மூத்திரத்தில் என்ன இருக்கிறது என்றும், மசூதிக்கு கீழே என்ன இருக்கிறது என ஆழமாக தோண்டி பார்த்து்க்கொண்டிருக்கிறார்கள். இதை சீனாவுக்கு எதிராக இந்தியா உருவாக்கியுள்ள டீப்டிக் எனும் தொழில்நுட்பமாக கருதிக்கொள்ளலாம்.

புதிய தொழில்நுட்பம் உள்ளே நுழையும்போது பத்து சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. ஒரு தொழிற்சாலை மூடப்படுகிறது என்றால் நகரில் உள்ள பெரும்பகுதி பணியாளர்கள் வேலையின்றி தடுமாறுவார்கள். கூடுதலாக, அவர்களை நம்பியுள்ள கடைகள், வணிகம் என எல்லாமே ஈ ஓட்டும். அரசு உதவினால் மட்டுமே பணியாளர்கள் உயிர்தரிக்க முடியும். பொதுவாக தொழில்நுட்பம் உருவாக்கும் வேலைவாய்ப்பை விட இழக்கச்செய்யும் வேலைவாய்ப்புகளே அதிகம்.

பாகுபாடு, குழுவாதம், செல்வாக்கு சகாயம் என்பதெல்லாம் மனிதர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் நிகழ்கிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு அனைத்து சாதி, மதம், இனம் ஆகியவற்றிலும் காணப்படுகிறது. கடினமாக உழைத்தால் முன்னேறி விடலாம் என்பதெல்லாம் இன்று காலாவதியான கருத்து. ஆண்டுக்கு ஐம்பது கோடிக்கும் மேல் ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர, வாரத்திற்கு தொண்ணூறு மணி நேரம் உழைக்கிறேன் என்கிறார். அவர் உழைத்தாலும் அதற்கேற்ப காசு கிடைக்கிறது. அதை அவர் மனச்சிதைவுக்காக செலவு செய்வார். ஆனால் அவரது ஆலையில் வேலை செய்பவர் குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்து எட்டு மணி நேரம் வேலைசெய்து நிர்ணயிக்கப்பட்ட ஆலை நேரத்தில் வேலை செய்கிறார். எதற்காக ஆலை நிறுவனர் அதிக நேர வேலை என அங்கலாய்க்கிறார். ஒருவரை எளிதாக சுரண்டி முன்னேறத்தான். இந்தியாவில் மதவாத அரசு சட்டங்களை மாற்றிவிட்டாலும் கூட அதை இன்னும் அமல்படுத்த முடியவில்லை.

அரசு சில வணிகர்களுக்காக உழைக்க கூடாது. மக்களுக்கு வேலைவாய்ப்பில், கல்வியில் முன்னேற சமவாய்ப்பை தரவேண்டும். ஆனால் அப்படியான அரசு என்பது இனிமேல் கனவுதான்.
அமெரிக்க கனவு, சீனக்கனவு என கனவு காணும் நாடுகள் அனைத்துமே வல்லரசு நாடுகளாக உள்ளன. சொந்த நாட்டு மக்களை மலக்கூடையை தூக்கவைக்கும் இந்திய அரசு, காவல் நாயாக நிற்கிறதே ஒழிய சொந்த புத்தியில் இயங்கக்கூடியதாக இல்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளே இயற்கை வளங்களை அதிகம் பயன்படுத்துவதில் முன்னிலை பெறுகின்றன.

பூமி அழிந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் பல்வேறு விண்வெளி அமைப்புகள், வேறு கோள்களை விண்வெளியி்ல தேடி வருகின்றன. அப்படி கிடைத்தால் பூமி குப்பைகளால் அழிந்தவுடன் இயற்கை வளம் தீர்ந்தவுடன் அங்கு சென்று விடலாம். எலன் மஸ்க் செவ்வாய்க்கு செல்வோம் என்று கூறுவது இதன் காரணத்தினால்தான். மேற்கு நாடுகள் செய்த விண்வெளி ஆராய்ச்சியில் கிடைத்த பயன்கள் என்னென்ன என்று பார்ப்போம். மதவாத மூடநம்பிக்கையால் அழியும் இஸ்ரோ பற்றி பேசவேண்டாம்.

சோலார் பேனல்கள், கையில் இயக்கும் துப்புறவுக் கருவி, மென்மையான படுக்கை, சிஏடி ஸ்கேனர், கீறல் விழாத கண்ணாடி, வயர்லெஸ் ஹெட்போன், காதில் சோதிக்கும் தெர்மோமீட்டர், மடிக்கணினி கணினி சுட்டி, எல்இடி விளக்கு, நீர் சுத்திகரிப்பான், குழந்தைக்கான பால் பவுடர்.

பஞ்சம் ஏற்படுவதற்கு காலநிலையை காரணம் காட்டுவார்கள். உண்மையில் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், உணவு தாராளமாக விளைந்தாலும் அரசு அதை மக்களுக்கு சரியாக விநியோகம் செய்யாவிட்டாலும் கூட பஞ்சம் ஏற்பட்டு மக்கள் மடிவார்கள் என புதுமையாக ஒரு காரணத்தை கூறியுள்ளார். 1940ஆம்ஆண்டு வங்கப் பஞ்சத்தைப் பார்த்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். அப்போது தானியங்கள் போதுமான அளவு விளைந்தாலும் அதை கடையில் வாங்கி சமைத்து உண்ணும் நிலையில் தொழிலாளர்கள் இல்லை. அதாவது சம்பளம் குறைவு. எனவே, அவர்களால் அரிசியை வாங்க இயலவில்லை. இப்படியான பசி,பட்டினி, பஞ்சம் உருவானது. 1998ஆம் ஆண்டு அமர்த்தியா சென்னுடைய ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.













 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்