இடுகைகள்

நிகழ்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடிதங்களை மேடையில் வாசிக்கும் பெருமை மிக்க நிகழ்ச்சி!

படம்
  கடிதங்களைப் படிப்போம் வாங்க! இங்கிலாந்தில் கடிதங்களைப் படிப்பதை பிரபலமான திரைப்பட, நாடக கலைஞர்கள் செய்கிறார்கள். இதை லெட்டர்ஸ் லைவ் என்ற நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள். இதில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் அதிகம். கடிதங்களை நீங்கள் எப்படி தயாரிப்பீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதுவதாக அல்லது பிறருக்கு எழுதியதை வைத்திருந்தால் கூட படிக்கலாம். யாரோ ஒருவருக்கு எழுத விரும்பியதைக் கூட எழுதி வந்து மேடையில் படிக்கலாம்.  இப்படி படிப்பதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. இங்கு வந்து கடிதங்களைப் படிக்க பெரிய முன்னேற்பாடுகள் எதையும் ஒருவர் செய்யவேண்டியதில்லை. கடிதங்களை எழுதிக்கொண்டு வந்து சத்தமாக படிக்க தெரிந்தால் போதும். ஆனால் இதற்கே பலரும் பதற்றப்படுகிறார்கள். ஏனெனில் திரைப்பட கலைஞர்களுக்கு இங்கு எப்படி முகத்தை உடலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவதில்லை. எனவே, கடிதங்களை படிக்கும்போது ஏற்படு்ம் உணர்வுகளை ஒருவர் எளிதாக பிறருக்கு கடத்த முடியும். சுற்றியிருக்கும் பார்வையாளர்களும் கடிதத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை கவனித்துக் கேட்கிறார்கள்.  நீங்கள் கடிதங்களை படிக்கும்போது, இன்

என்னுடைய விமர்சனம் நேரடியானது, கையால் செய்யும் ரொட்டிக்கு தனி சுவையுண்டு - பால் ஹாலிவுட்

படம்
  பால் ஹாலிவுட், சமையல் கலைஞர் பால் ஹாலிவுட் டிவி நிகழ்ச்சி நடுவர், எழுத்தாளர் தி கிரேட் பிரிட்டிஷ் பேக்கிங் ஷோ நிகழ்ச்சியில் முன்னர் இருந்ததை விட தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட வசதிகள் அதிகரிப்பது சிறந்த சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். அதிகரிக்கப்பட்ட வசதிகள், சமையல் கலைஞர்களின் திறனை வெளிக்காட்ட உதவும். நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி நட்பு சார்ந்த நிகழ்ச்சியாகவே இத்தனை ஆண்டுகாலமும் உள்ளது. எப்படி இதை சாத்தியப்படுத்தினீர்கள்? நான் சமையல் பற்றி கூறும் விமர்சன வார்த்தைகள் சிலநேரங்களில் கடுமையாக இருக்கும் என்பது உண்மை. நான் நேரடியாக என்ன விஷயமோ அதைக் கூறிவிடுவேன். பிற நிகழ்ச்சிகளில் அப்படியான நேரடியான விமர்சனம் இருப்பதில்லை. அவர்களுக்கு நெருப்பு பற்றவைப்பது என்பதெல்லாம் நிகழ்ச்சியின் ஒரு பகுதி. அவ்வளவுதான். பேக்கிங் செய்வது என்பது மக்களுக்கு ஆக்ரோஷமான ஒன்றாக தெரிவதை விட மென்மையாக தெரிவதை நான் விரும்புகிறேன். இந்தமுறை நிகழ்ச்சியில் உங்களுடன் ஆலிசன் ஹாமாண்ட் பங்கேற்கிறார். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சமையல் கலைஞர்கள்தான் நிகழ்ச்சியின் நட்சத்த

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

டேட்டா கார்னர்! - நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பார்க்க மெனக்கெடும் இங்கிலாந்து மக்கள்!

படம்
  5.2 மில்லியன் அளவிலான பாதுகாப்பு கேமராக்கள் இங்கிலாந்திலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை முதல் அலையின்போது கட்டுப்படுத்த 20 நாட்கள் இங்கிலாந்து அரசுக்கு தேவைப்பட்டது.  அமாங் அஸ் எனும் விளையாட்டு உலகமெங்கும்  74.8 மில்லியன் அளவுக்கு மக்களால் தரவிறக்கப்பட்டுள்ளது.  உலகிலுள்ள ஒரு சதவீத வேளாண் நிறுவனங்கள் 70 சதவீத நிலங்களைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை மக்களுக்கு வழங்குகின்றன.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு மூன்று மாதங்களுக்குள்ளாக உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.  உலகில் 3 சதவீத விளையாட்டு மேம்பாட்டாளர்கள் நினென்டோ நிறுவனத்தின் விளையாட்டு சாதனங்களை மேம்படுத்த உழைத்து வருகின்றனர். இப்பணி கடுமையானது.  இங்கிலாந்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைக் காண 750 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை, முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். 

பொழுதுபோக்குத்துறையில் சாதித்த ஓரினச்சேர்க்கையாளர்! - எலன்

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள்! எலன் டிஜெனரெஸ் அறிமுகம் எலன், பொழுதுபோக்குத் துறையில் நாடறிந்த பிரபலம். 1994 ஆம் ஆண்டு, தி டுநைட் ஷோ வித் ஜானி கார்சன்  என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டிவியில் முக்கியமான நேரத்தில் வரும் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். இச்சமயத்தில் இவரின் பாலினம் பற்றி அறிந்த மரபான கிறிஸ்தவர்கள், எலனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தி எலன் டிஜெனரெஸ் ஷோ நிகழ்ச்சியிலிருந்து இவர் இந்த ஆண்டு விடைபெறுகிறார் என்று கிசுகிசுக்கிறார்கள்.  அமெரிக்காவில் 1958 ஆம் ஆண்டு பிறந்த எலனுக்கு இன்று 61 வயதாகிறது. பல்வேறு டிவி, நிகழ்ச்சிகள், அனிமேஷன் படங்களுக்கு டப்பிங், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என இவர் வெகு பிரபலமான ஆள். அமெரிக்காவின் லூசியானாவிலுள்ள மெடாய்ரே நகரில் பிறந்தவர். தாய், பேச்சுக்கலை பயிற்சியாளர். தந்தை, காப்பீட்டு முகவர். 1973 ஆம் ஆண்டு இவரது தாய், தந்தையை விவகாரத்து செய்துவிட்டு மறுமணம் செய்தார். புதிய தந்தையுடன் சென்ற எலன், அவரால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வல்லுறவு செய்யப்பட்டார். பள்ளிப்படிப்பையும் கல்லூரி பட