என்னுடைய விமர்சனம் நேரடியானது, கையால் செய்யும் ரொட்டிக்கு தனி சுவையுண்டு - பால் ஹாலிவுட்

 






பால் ஹாலிவுட், சமையல் கலைஞர்




பால் ஹாலிவுட்

டிவி நிகழ்ச்சி நடுவர், எழுத்தாளர்

தி கிரேட் பிரிட்டிஷ் பேக்கிங் ஷோ நிகழ்ச்சியில் முன்னர் இருந்ததை விட தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ளன.

இப்படிப்பட்ட வசதிகள் அதிகரிப்பது சிறந்த சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன். அதிகரிக்கப்பட்ட வசதிகள், சமையல் கலைஞர்களின் திறனை வெளிக்காட்ட உதவும்.

நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி நட்பு சார்ந்த நிகழ்ச்சியாகவே இத்தனை ஆண்டுகாலமும் உள்ளது. எப்படி இதை சாத்தியப்படுத்தினீர்கள்?

நான் சமையல் பற்றி கூறும் விமர்சன வார்த்தைகள் சிலநேரங்களில் கடுமையாக இருக்கும் என்பது உண்மை. நான் நேரடியாக என்ன விஷயமோ அதைக் கூறிவிடுவேன். பிற நிகழ்ச்சிகளில் அப்படியான நேரடியான விமர்சனம் இருப்பதில்லை. அவர்களுக்கு நெருப்பு பற்றவைப்பது என்பதெல்லாம் நிகழ்ச்சியின் ஒரு பகுதி. அவ்வளவுதான். பேக்கிங் செய்வது என்பது மக்களுக்கு ஆக்ரோஷமான ஒன்றாக தெரிவதை விட மென்மையாக தெரிவதை நான் விரும்புகிறேன்.

இந்தமுறை நிகழ்ச்சியில் உங்களுடன் ஆலிசன் ஹாமாண்ட் பங்கேற்கிறார். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சமையல் கலைஞர்கள்தான் நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள். எனவே, நான், இன்னொருவர் என நிகழ்ச்சியை நடத்துபவர்கள் புதிதாக வருவது சிறிய திருப்பமாகவே இருக்கும். மற்றபடி அதில் பெரிய வேறுபாடு ஏதும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் பேக் ஆஃப் எனும் நிகழ்ச்சியின் நடைமுறை அனைவருக்கும் தெரிந்ததுதான். அதில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை.

நீங்கள் பிரெட் பற்றி நிறைய நூல்களை எழுதியிருக்கிறீர்கள். எப்படி புது புது ரெசிப்பிகளை கண்டுபிடிக்கிறீர்கள்?

ஐரோப்பாவில் உள்ள சிறந்த ஹோட்டல்களில் பணியாற்றியிருக்கிறேன். பிரெட்டில்  புது ரெசிப்பி செய்வதற்கு முக்கியமான தேவையான விஷயம், பரிசோதனைகள்தான். ஸ்டில்டன், வால்நட், சாக்லெட் பிரெட் என தயாரித்தவை அனைத்தும் பரிசோதனை முறையில் செய்தவைதான். சில குறிப்பிட்ட பொருட்களை மனதில் வைத்துக்கொண்டு பிரெட் ரெசிப்பிகளை செய்வேன். சமையல் செய்யும்போது, மறந்துபோன பொருட்களை வைத்து பிரெட் தயாரிப்பதை அடுத்தடுத்த நூல்களில் எழுதி வருகிறேன்.

நீங்கள் தானியங்கி பிரெட் தயாரிக்கும் எந்திரங்களை பயன்படுத்தியிருக்கிறீர்களா?

நான் பேக் ஆஃப் நிகழ்ச்சியை தொடங்கியபோது, தி கேட்ஜெட் ஷோ நிகழ்ச்சி குழுவினர் என்னை அணுகி தானியங்கி பிரெட் எந்திரத்தை பயன்படுத்த கூறினர். இல்லை எனக்கு அந்த எந்திரங்கள் வேண்டாம் என்றேன். அவர்கள், எந்திரங்களோடு போட்டியிடுகிறீர்களா என்றார்கள், நான் சரி என்று ஒன்பது முறை எந்திரங்களோடு போட்டியிட்டு மக்களிடம் 96 சதவீத வாக்குகளைப் பெற்றேன். எந்திரங்களில் பிரெட்டுகளை செய்தாலும் வீட்டில் கைகளால் செய்வதைப் போல வராது.

எட்வர்ட் ஃபெல்சென்தால்

டைம் வார இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்