இரக்கமில்லாத ரவுடியோடு தொழிலதிபர் மகன் ஆடும் போங்காட்டம்!

 

 

 



 

 

 

ஆட்டாடிஸ்தா

நிதின், காஜல் அகர்வால்


தொழிலதிபரின் மகனான நிதின், தனது அப்பா பெயரை சொல்லாமல் அவர் பாட்டிற்கு கல்லூரிக்கு செல்வது, நண்பர்களோடு சுற்றுவது, வம்பு வழக்குகளை இழுத்து வருவது என குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படாமல் வாழ்கிறார். சுருக்கமாக அவரது குடும்பத்தில் அவர் படிக்காதவன். பிறர் படித்தவர்கள்.


இந்த நிலையில் நிதின், ரவுடிகளை அடித்து உதைக்கும்போது, அந்த இடத்தில் காஜலின் தோழிக்கு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகிறது. அந்த விழாவே சண்டையால் களேபரமாகி சங்கடமாகிறது. இதைப்பற்றி காஜல் காவல்துறையில் புகார் செய்கிறார். அங்குதான் நிதின் மிகப்பெரிய பணக்காரர் வீட்டு பிள்ளை என தெரிய வருகிறது. இன்ஸ்பெக்டர் அவரை விட்டுவிடுகிறார். ஆனால் நிதின் காஜலை விடுவதாக இல்லை. அவரை பின்தொடர்ந்து செல்கிறார்.


நிதினின் அப்பா நாக பாபு, மனிதர்களின் வாழ்வை கெடுக்காத தொழில் செய்ய நினைப்பவர். இவரின் தொழில் போட்டியாளர் ரகுவரன். அவருக்கு நாக பாபுவை எப்படியேனும் தோற்கடித்தால் போதும் என்ற வெறி. இப்படி போட்டி போட்டதில் இருவரின் நிறுவனங்களும் கீழேதான் உள்ளன என பேச்சுவாக்கில் நிதின் சொல்ல, அவரின் அண்ணனுக்கு சங்கடமாகிப்போகிறது. நிலைமையை சரி செய்ய ரகுவரனின் பெண்ணுக்கு நிதினை கல்யாணம் செய்து வைத்தால் வணிகம் ஒன்றாகும். லாபம் பெருகும் என திட்டமிடுகிறார்கள். ஆனால் நிதின்தான் காஜலை காதலிக்கிறாரே? அவர் வணிகத்திற்காக தனது வாழ்வை பலி கொடுக்க ஒப்புக்கொள்வதில்லை.


காஜலின் தோழிக்கு உதவி செய்துவிட்டு அவரைப் பார்க்கப்போனால் அவர் விடுதியில் இருந்து காலி செய்துவிட்டு சென்றுவிடுகிறார். நிதின் காதலியை சந்தித்தாரா, தனது குடும்பத்திற்காக பிடிக்காத பெண்ணை மணம் செய்துகொண்டாரா என்பதே முக்கியப் பகுதி.


படத்தில் பெரும்பாலான காட்சிகள் வேடிக்கையானவை. எனவே, பெரிதாக திருப்பங்கள் இல்லை. திருப்பங்களிலும் நாம் நிமிர்ந்து உட்காரவேண்டியதில்லை. ரிலாக்ஸாக இருந்தாலே படம் தானாகவே முடிந்துவிடுகிறது. படத்தில் நாயகனை விட அதிக காட்சிகள் வில்லன் சங்கருக்கு உள்ளது. கொடூர வில்லனாக காட்டிவிட்டு இறுதியில் அவருக்கு விபூதி அடித்து கோமாளியாக மாற்றிவிடுகிறார்கள். அதைத்தான் சகிக்க முடியவில்லை.


சங்கரின் மகன் காஜலின் தோழியை காதல் என்ற பெயரில் பயன்படுத்திக்கொண்டு விடுகிறார். அந்தப் பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வரையே தோழிக்கு கட்டிவைக்க நாயகன் நிதின் முயல்கிறார். என்னவொரு புத்திசாலித்தனம்!


சங்கர் எனும் வில்லன், ஊடகம், பொதுமக்கள், தனது கட்சி என எதற்கும் பயப்படாத ஆள். தான் என்ற ஆணவம் கொண்டவர். அவரின் ஆணவத்தை உடைப்பதாக கூறி நிதின் செய்யும் காட்சிகளை எந்த வகையில் புரிந்துகொள்வது என தெரியவில்லை. ரகுவரன் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் நடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

காஜலுக்கும் நாயகனுக்கும் இருக்கும் ஒற்றுமை இருவருமே பெற்றோரின் பெயரை சொல்லி எந்த சலுகையும் பெறுவதில்லை. தனியாக தங்களை நிரூபிக்க நினைக்கிறார்கள். இதற்காக அவர்களின் காட்சிகள் நன்றாக இருக்கின்றன என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம். சுமாரான காதல் காட்சிகள். அவ்வளவுதான்.


நாக பாபு பாசமான அப்பா என கூறப்படுகிறார். காட்டப்படுகிறார்.ஆனால் அவரோ, மகனின் கல்யாணத்தைப் பற்றி அவருக்கே கூறாமல் வணிகம் போல ஒரு சிட்டிங்கில் உட்கார்ந்து பேசிவிட்டு வந்துவிடுகிறார். மகனுக்கு பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்காமல் தட்டு மாற்றுகிறார். இவரை நாயகன் நிதின் அப்பா அப்பா என உருகி பேசுவது கண்ணைக் கட்டுகிறது.


படத்தில் வரும் சூரமொக்கை பாத்திரங்கள் ஏதொன்றும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை.


கோமாளிமேடை டீம் 

 

Release date: 20 March 2008 (India)

 

கருத்துகள்