செஃபின் உதவியாளர் உடலில் புகுந்து தான் இறந்துபோன காரணத்தை தேடும் இளம்பெண் ஆவி!
ஓ மை கோஸ்டெஸ்
கே டிராமா
ராக்குட்டன்
விக்கி
சன் என்ற
ஹோட்டலில் நா போங் சன் என்ற இளம்பெண் கிச்சன் அசிஸ்ட்டெண்டாக வேலை செய்கிறாள். அவள்
அந்த வேலைக்கு வர காரணமே செஃப் காங் வூ சன்தான் அவரை அவள் தனது குருவாக காதலனாக பார்க்கிறாள்.
ஹோட்டலில் வேலை என்றால் பாத்திரங்களை கழுவி வைப்பதுதான். அவள் வேலையில் தூங்கி வழிகிறாள்.
அதற்கு காரணம், அவளால் பேய்களை பார்க்க முடியும் என்பதுதான். தற்கொலையால் இறந்த பேய்
ஒன்று ஷின் சூன் ஆ, நா போங் சன்னின் உடலுக்குள் புகுகிறது. தனது இறந்த காலத்தை தனக்கு
என்ன நடந்தது என்பதை அறிய முயல்கிறது. இதனால் நா போங்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள்
என்னென்ன என்பதை தொடர் விவரிக்கிறது.
இந்த கொரிய
தொடர், சற்று ஜாலியாக பார்க்க வேண்டியது என்பதால் பதற்றம் கொள்ளவேண்டாம். சமையல் சார்ந்த
சாகச தொடர். செஃப் காங் வூ சன், அவனது தங்கை
இயுன் ஜீ ஆகிய இருவருமே பிறரால் கேலி கிண்டல செய்யப்பட்டு உருவானவர்கள்தான். அதிலும்
காங் , சிறுவயதில் இருந்தே தனியாக இருந்து வளர்ந்தவன். அவனது அம்மா வேலைக்கு சென்று
வந்தவள் என்பதால், அவளது கையில் சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. எனவே, ரெடிமேட் நூடுல்ஸை
சாப்பிட்டே வளர்ந்து சிறந்த சமையல்காரனாக மாறுகிறான்.
அவனது தங்கை,
திடீரென நேரும் வாகன விபத்தில் அடையாளம் தெரியாத காரில் அடிபட்டு கால்களை இழக்கிறாள்.
சக்கர நாற்காலியில் வாழும் அவளை தனது ஹோட்டலில் கணக்காளராக வேலைக்கு வைத்துக்கொள்கிறான்.
இருவருமே அகவயமானவர்களாக உள்ள பலவீனமான மனம் கொண்டவர்களை ஆதரிக்கும் போக்கு கொண்டவர்களாக
உள்ளனர். அதனால்தான் காங், நா போங்கை வேலைக்கு எடுக்கிறான்.
சக்கர நாற்காலியில்
வலம் வரும் காங்கின் தங்கையை போலீஸ் டிடெக்டிவ் சோய் என்பவர் திருமணம் செய்துகொள்கிறார். மனைவியின் வீட்டிலேயே
தங்கி தாம்பத்திய வாழ்க்கையை நடத்துகிறார். நடனமாடும் ஆசை கொண்ட இயுன் ஜீக்கு கால்கள்
இல்லாமல் அண்ணன், கணவர் தன்னை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வருவது வருத்தமாக இருக்கிறது.
அவளுக்கு கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே லட்சியமாக உள்ளது.
காங் வூ சன்னுக்கு
நான்கு ஆண் சமையல்கலைஞர்கள், ஒரு பெண் சமையல் கலைஞர் என ஐந்து உதவியாளர்களை வைத்து
வெற்றிகரமாக உணவு வணிகத்தை நடத்துவதுதான் லட்சியம். நவீனமான உணவுகளை சமைத்தாலும் மனதளவில்
சற்று கட்டுப்பெட்டித்தனமானவர். கலாசாரத்தை கடைபிடிக்கும் ஆள்.
நா போங் சன்னின் உடலில் ஷின் ஆ ஆவி புகுந்து செய்யும்
அலப்பறைகளில் பீதியாகித்தான் அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். டிவி நிகழ்ச்சியில் காங்
அரிசி சோற்றை கருக்கிவிட, அதை வைத்தே நா போங் சன் உடலிலுள்ள ஷின் ஆ, அற்புதமான உணவு
ஒன்றை உருவாக்க அந்த எபிசோடில காங் வெற்றி பெறுகிறார். மெல்ல நா போ சன் மீது அவருக்கு
நம்பிக்கை வருகிறது.எனவே, அவுளுக்கு காய்கறிகளை நறுக்குவது, உப்பு எப்படி பார்ப்பது
என சொல்லிக்கொடுக்கிறார். இதெல்லாம் நா போங் சன்னுக்காக என்று நினைக்கிறார். ஆனால்,
இதெல்லாம் ஆவியான ஷின் ஆவுக்கு போய் சேருகிறது.
ஷின் ஆ தற்கொலையால்
இறந்துபோகிறாள் என கூறப்படுகிறது. ஆனால் அவளுக்கு தான் எப்படி இறந்தோம் என நினைவுக்கு
வரமாட்டேன்கிறது. அவளை சிறைபிடிக்க நினைகும் பூசாரி அம்மா, நீ கன்னி கழியாக இறந்துட்டதால
மூணு வருஷமானாலும் முக்தி கிடைக்கல. நல்ல சக்தி கொண்ட ஆணை கல்யாணம் பண்ணு. இல்லை செக்ஸ்
அனுபவிச்சாக்கூட போதும் என ஆலோசனை சொல்கிறாள். எனவே, ஷின் ஆ அதற்கு தேர்ந்தெடுக்கும்
ஆள்தான் செஃப் காங்.
உண்மையில்
ஷின் ஆ ஏன் இறந்தாள், இறந்துபோனது ஏன் நினைவுக்கு வரமாட்டேன்கிறது, இயுன் ஜிக்கு கால்கள்
அடிபட்டது எப்படி என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கண்டுபிடித்தால் தொடர் வெற்றிகரமாக
முடிவுக்கு வந்துவிடும்.
தொடரில் எல்லாருமே
நன்றாக நடித்திருக்கிறார்கள். குறை என்று ஏதுமில்லை. சமையல் சார்ந்த காமெடி தொடர்.
கிச்சன் பகுதியில் வரும் நகைச்சுவைக்கு சூப் செஃப் மின் சூ பொறுப்பு ஏற்கிறார். அதை
சிறப்பாகவும் நிறைவேற்றியிருக்கிறார்.
தொடரின் இறுதியில்
கூட காங், நா போங் சன், சூப் செஃப் ஆகியோரின் முடிவுகள் நன்றாக உள்ளன. தீயவை அழிந்து
நல்லவை வெற்றிபெறுவதுதான் கதை. இயுன் ஜி தனது காலை காரை விட்டு ஏற்றியவரை மன்னித்து
ஏற்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. அதாவது சோய், அவரது காவல்துறை நண்பரைக்
கொன்றிருக்கிறார். இயுன் ஜி விபத்தை போலீசுக்கு சொன்ன உணவகப் பெண் ஷின் ஆவைக் கொன்றிருக்கிறார்.
மச்சானின் காதலி நா போங்கை கொல்ல முயன்றவர் பின்னர் காரில் கடத்திசென்றிருக்கிறார்.
இத்தனை தவறுகளை செய்ததோடு தன்னால் பாதிக்கப்பட்ட இயுன் ஜியை திருமணம் செய்து குற்றம்
வெளியே வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரை இயுன் ஜி நினைவுகள் அழிந்துவிட்டது
என நம்பி காதலிப்பது எல்லாம் நம்பவே முடியல மொமண்ட்.
ஜாலியாக பேன்டசி
கலந்த கொரிய தொடரை பார்க்கவேண்டுமா, சமையல் சார்ந்த தொடர் என்றால் உங்களுக்கு பிடிக்குமா
அப்போது ஓ மை கோஸ்டெஸ் உங்களை ஏமாற்றாது.
கோமாளிமேடை
டீம்
- Park Bo-young
- Jo Jung-suk
- Lim Ju-hwan
- Kim Seul-gi
கருத்துகள்
கருத்துரையிடுக