செயற்கை நுண்ணறிவில் சாதித்த தொழிலதிபர்கள் அறிமுகம்!

 






ராபின் லீ, இயக்குநர், பைடு


ராபின் லீ

இயக்குநர், தலைவர், துணை நிறுவனர் – பைடு

சீனாவின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கணிக்கும் தொழில்நுட்பவாதி. கூகுளை பிரதியெடுத்து பைடு எனும் தேடுதல் எந்திரத்தை உருவாக்கியவர், இப்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இருக்கிறார். செயற்கை நுண்ணறிவு பாட்களில் அமேஸானின் அலெக்ஸா போல ஷியாவோடு என்ற பாட்டை உருவாக்கி பைடு விற்று வருகிறது. 2000ஆம் ஆண்டு தொடங்கி ஏஐ ஆராய்ச்சியில் ராபின் லீ இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, எர்னி பாட் என்பதை ராபின் லீ உருவாக்கினார். இந்த கருவி, சீன அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது மகிழ்ச்சியான விஷயம். ராபின் லீ அரசின் செயற்கை நுண்ணறிவு திட்ட அமைப்பில் கூட உறுப்பினராக இருக்கிறார். பைடுவிற்கு தற்போது மாதம்தோறும் 677 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 48 மில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் பைடு, தொடக்கத்தில் மைக்ரோசிப்களுக்கு அமெரிக்க நிறுவனமான என்விடியாவை சார்ந்தே இயங்கியது. ஆனால் அமெரிக்க அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக இப்போது உள்நாட்டில் தனக்கு தேவையான சிப்களை தானே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சார்லி கேம்பெல்

ஆலோன்ட்ரா நெல்சன்

ஆராய்ச்சியாளர், கொள்கை ஆலோசகர்

அமெரிக்க அரசின் அறிவியல் தொழில்நுட்ப கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு நெல்சனே தலைவர். இந்த பணிக்கு முன்னர் கேம்ப்ரிட்ஜ், யேல் ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மருத்துவம், இனவெறி சார்ந்த பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

ஏஐயை ஆக்கப்பூர்வமாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை நெல்சன் ஆலோசித்து வருகிறார். ஒரு ஆய்வாளர், 2016 வாக்கிலேயே ஸ்கேன், இசிஜி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பாதிப்பை ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகளை குறைக்கும் என்று கணித்தார். ஆனால் இன்றுவரை அத்துறைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்குத் தேவை உள்ளது. எனவே கணிப்பையெல்லாம் விடுங்கள். ஏஐயை நாம் பாதுகாப்பாக மனித குல வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
ஆண்ட்ரூ ஆர் சோ

இயான் ஹோகர்த்

இங்கிலாந்தின் ஏஐ பாதுகாப்பு கமிட்டி தலைவர்

 

இயான் ஹோகர்த் ஒரு முதலீட்டாளர். எதிர்காலத்தில் வளரும் என நம்பும் பல நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து வருகிறார். அதில் பலவும் எந்திரவழி  கற்றலை அடிப்படையாக கொண்டவை.

உலகம் செல்லும் பாதையை இப்போதைக்கு எளிதாக பார்த்து புரிந்துகொள்ள முடியாது. இந்த நிலை சற்று வினோதமாக சிரமமாகவே இருக்கிறது என்று பேசுகிறார்.

இங்கிலாந்து அரசு செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு பற்றிய கமிட்டியை அமைத்து இயான் ஹோகர்த்தை தலைவராக நியமித்துள்ளது. இதற்கான பட்ஜெட்டாக 126 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நடத்தப்படவிருக்கும் மாநாட்டில் முக்கியமான செயற்கை நுண்ணறிவு நிறுவன இயக்குநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

பில்லி பெர்ரிகோ

ஆட்ரே டங்

தகவல் தொழில்நுட்ப அமைச்சர், தைவான்

2015ஆம் ஆண்டு உபர் நிறுவனத்தை குறிப்பிட்ட வரைமுறைக்குள் கொண்டு வர  வாக்கெடுப்பை தைவான் நடத்தியது. தற்போதும் கூட மக்களிடம் ஏஐ பற்றிய கருத்துகளை கூறச்சொல்லி உள்ளது அரசு. அதற்குமுக்கிய காரணமாக உள்ளவர் டிஜிட்டல் தொடர்பு துறை அமைச்சரான ஆட்ரே டங்தான். பலரும் ஏஐயால் என்னென்ன இழப்பு என கணக்கெடுத்துக்கொண்டிருந்தபோது ஜனநாயகத்தை எப்படி முன்னேற்றலாம் என யோசித்துக்கொண்டிருந்தார் ஆட்ரே டங்.

அப்படித்தான் பல்வேறு டெக் அமைப்புகளோடு சேர்ந்து ஜனநாயகப்பூர்வமாக ஏஐயை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கைகளை வடிவமைக்க மெனக்கெட்டு வருகிறார்.

யாஸ்மின் செர்கான்

 

எல்காம் டபஸி

உதவி தலைவர், தொழில்நுட்பம், நிஸ்ட்

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவிலுள்ள நிஸ்ட் அமைப்பு ஏஐ ஆராய்ச்சிகளை  தொடங்கியது. இன்று இதன் மென்பொருட்ளை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏஐக்கான பல்வேறு வழிகாட்டுகளை நிஸ்ட் வழங்கி வருகிறது.

ஏஐ தொடர்பான ஆராய்ச்சிக்கு வரும் முன்னர் மின்னணு பொறியாளராகவும், நிஸ்டின் ஐடி பிரிவு தலைவராகவும் இருந்தார். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்