காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!
கிரேக்க வீருடு
நாகார்ஜூனா, நயன்தாரா
பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு, காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை.
வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா. அவரும், உறவு முறையில் மாமாவும், நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். தனது செல்வாக்கு, அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா. பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார். நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை. இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி, அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள். இதனால், அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள். அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை.
இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது. அவர், மகன் வயிற்று பேரனான கிங்கை அங்கே அழைக்கிறார். மகனின் காதலை ஏற்காத காரணத்தால், மகன், மருமகள், பேரன் ஆகியோரை பார்க்காத அவர் இனிமேலும் வைராக்கியம் தேவையில்லை என பேரனை சந்திக்க நினைக்கிறார்.
கிங்கிற்கு தாத்தா மீது பெரிய பாசம் கிடையாது. ஆனால் அவரின் பூர்விக சொத்து, அபராத தொகையை கட்ட உதவும் என நினைக்கிறார். எனவே காசை ஏதாவது பொய்யைச் சொல்லி வாங்கலாம் என்று கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கு சென்றால், தாத்தாவின் தொழிற்சாலையில் ஏகப்பட்ட பிரச்னைகள். அதை கிங் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவரது மாமாக்களை ''நீங்கள் ஒழுங்காக இருந்தால் இப்படி பிரச்னை வருமா?’’ என்று கேட்கிறார். அவ்வளவுதான். மற்றபடி ரவுடிகளை இருமுறை அடித்து உதைக்கிறார். உடனே அத்தனை பிரச்னைகளும் நிறைவடைந்து விடுகின்றன.
மாமா பெண்ணை அவள் நேசிக்கும் பையனுக்கு மணம் செய்து வைக்கிறார். தான் ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டதாக கூறி விமானத்தில் சந்தித்த நயன்தாராவை அடையாளம் காட்டுகிறார். குடும்பமும் அதை நம்பிவிடுகிறது. அந்த நேரத்தில் சமூக சேவைக்காக அந்த கிராமத்திற்கு வந்த நயன்தாராவை குடும்பத்தினர் கூட்டி வந்துவிடுகிறார்கள். கிங், நயனை தயவு செய்து மனைவியாக நடியுங்கள் என சூழலைக் கூறி புரிய வைக்கிறார்.
குடும்பத்தினரின் பாசம், நயனின் அழகு, அவர் கடைபிடிக்கும் கொள்கைகள் எல்லாமே கிங்கை ஈர்க்கிறது. ஆனால் காதலை சொல்ல முடிவதில்லை. கிங் பற்றிய கடந்தகால உண்மைகளை நயன் தெரிந்துகொண்டாரா, நிறுவனத்தைக் காப்பாற்ற அபராதத்தைக் கட்டினாரா என்பதே கதையின் முக்கியப் பகுதி.
மேக் என விஷ் அமைப்பிற்காக நாகார்ஜூனா, நயன்தாரா இருவரும் செய்யும் படத்தின் இறுதி பயணமும், பிரம்மானந்தத்தின் சில காட்சி நகைச்சுவை மட்டும்தான் ஆறுதல் தருகிறது. மற்றபடி படத்தில் பெரும்பாலான காட்சிகள் அனைத்துமே க்ரீன் மேட்டை விரித்துவைத்து எடுத்து விரக்தி கொள்ள வைக்கிறார்கள். இந்த படத்தில் இவ்வகையில் செய்யும் டெக்னிக்குகளை யூட்யூப்பிலேயே செய்யத் தொடங்கிவிட்டனர்.
நயன்தாராவை அழகாக காட்டியிருக்கிறார்கள். கிங்கும் மோசமில்லை. இரைச்சல் இல்லாத பழைய கால தமனின் பாடல்களை கேட்கலாம். கிரேக்க வீரன் பலவீனமாக தெரிகிறான்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக