எலன் மஸ்க் எப்படி சிந்திக்கிறார் என்பதை கண்டுபிடிப்போம் வாங்க!

 








எலன் மஸ்க் எந்தெந்த சமூக வலைத்தள கணக்குகளை தொடர்கிறார்?  சுனக், மேக்ரான், மோடி, வான் டெர் லியான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரச குடும்பம் ஆகிய கணக்குகளை பின்தொடர்கிறார். இதன் அர்த்தம், அவர் அவற்றை பின்தொடர்கிறார் அவ்வளவுதான். இங்கு வெளியிடப்படும் அனைத்து கருத்துகளை ரீட்விட் செய்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நானும் இருக்கிறேன் என்று கூறுகிறார். மற்றபடி இந்த கணக்குகளை அவர் எப்போதாவது எட்டிப்பார்க்கிறாரா என்று கூட தெரியாது. பிபிசி செய்திகளை பின்தொடர்கிறார். அதேசமயம் இதுவரை தனது ட்விட்களில் அதை எந்த கண்டனமும் செய்ததில்லை என்பதையும் நினைவுகூர்கிறேன்.

டெஸ்லா கார்கள் விற்பனை, பங்கு விலை உயர்வு பற்றிய சந்தோஷமான கருத்துகளை எலன் கவனிக்கிறார். அவற்றை பகிர்கிறார். அவரைப் பொறுத்தவரை நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதை அதன் உரிமையாளர் எப்படியான மனநிலையில் செய்வாரோ அதேபோன்றதுதான் இதுவும் என கூறலாம்.

பாலியல் கல்வியை அரசியல்மயப்படுத்துவது, ரஷ்யா – உக்ரைன் போர் பற்றிய கருத்துகள், கோவிட் தடுப்பூசி பற்றிய கருத்துகள் ஆகியவற்றை பற்றிய விஷயங்களை எலன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் பேசிக்கொண்டிருந்தார். எலன், கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்ற கூறிய ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர் ஜே பட்டாச்சாரியாவின் கருத்தை ஆதரிக்கிறார். அவரை பின்தொடர்ந்து வருகிறார்.

மரபான கட்டுமானங்கள், வரலாறு பற்றிய கணக்குகளை பின்தொடர்கிறார். ராணுவ வரலாறு, நாயகத்துவ கதைகளை பிடித்தமானதாக கொண்டுள்ளார். பேசும்போது முழுமையாக ஒரு வாக்கியத்தை முடிக்காதவர், தனது கண்களைக் கவரும் புகைப்படங்களைப் பார்த்தால் உடனே அதை தனது கணக்கில் பகிர்கிறார். குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவது எதிர்காலத்தை எந்திரங்களிலும் ஒப்படைப்பதாகவும், உலக நாடுகளில் குழந்தை பிறப்பு குறைந்துகொண்டே வருவது மெல்ல செய்யும் தற்கொலை என நினைக்கிறார் எலன்.

சுதந்திரமான கருத்துகளின் ஆதரவாளராக அறியப்படும் எலன், 2016ஆம் ஆண்டு கிளிண்டனுக்கும், 2020ஆம் ஆண்டு பைடனுக்கும் வாக்களித்ததாக கூறியுள்ளார். சூழல் போராளியான கிரேட்டா துன்பெர்க்கை பின்தொடர்பவர், அவரைப் பற்றி கிண்டலான பதிவுகள் எதையும் இடவில்லை. கூல் என்று மட்டும் ஒருமுறை அவரது போராட்டம் பற்றி கூறியுள்ளார்.

டெஸ்லா பங்கு விற்பனை, அதன் விலை உயர்வு பற்றி பேசுபவர்களை கிண்டல் செய்பவர், இப்போது பிறரை கேலி கிண்டல் செய்வதில்லை.  ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஹரால்துரை , வேலை செய்யவில்லை என்று கூறி பதிவிட்டு பிறகு அப்படி வெளியிட்ட பதிவுக்கு மன்னிப்பு கேட்டார். உண்மையில் இந்த செயலில் இருந்து தனக்கான பாடத்தைக் கற்றிருப்பார் என நம்பலாம்.

செவ்வாயை காலனியாக்கும் திட்டத்தில் இருப்பதால், அதுதொடர்பான தகவல்களில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எனவே, அவர் வேற்றுகிரகவாசிகள் பற்றிய தகவல்களில் ஆர்வம் காட்டியபோது யாருக்கும் அது ஆச்சரியமாக இல்லை. உலக நாடுகளில் பலருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கூடுதல் பட்ஜெட் அதிகரித்து வருவது பற்றிய கேள்வி இருக்கிறது.

வேற்றுகிரகம் செல்வது பற்றிய தேடல்களில் எலன் மஸ்கின் இளம் வயது சிக்கல்கள், நினைவுகள் உள்ளன. தனியாக தொலைந்துபோன சிறுவனாக தான் இருந்ததை அவர் மறக்கவில்லை. எனவே, அவர் மக்களை அழைத்துச் சென்று வேற்று கோளில் வாழ வைக்க விரும்புகிறார். எந்த ஒரு தொழிலதிபருக்குள்ளும் சிறுவன் ஒருவன் உள்ளே இருப்பான். அவனுக்கு பின்னாடி தொழிலதிபர் இருப்பார். இந்த இயல்பை எலன் மஸ்கிடம் பார்க்க முடியும். அவர் ட்விட்டரை வாங்கியுள்ளார். இதனால் அதைப்ப்பற்றிய நேர்மறை கருத்துகளை பகிரும்போது மகிழ்ச்சியடைந்து பதில்களை பதிவுசெய்து வருகிறார். 44 பில்லியன் டாலர்களை செலவழித்து வாங்கிய ட்விட்டர் மூலம் தனது நிறுவன மதிப்பை பழம்பெரும் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸை விட உயர்த்திக் காட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தனது சார்ஜ் செய்யும் நிலையங்களை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளலாம் என ட்விட்டரில் அறிவித்து இந்த சாதனையை செய்தார்.

ட்விட்டரை சீன நாட்டின் புகழ்பெற்ற வீ சாட் நிறுவனம்போல தினசரி பயன்பாட்டுக்கான நிறுவனமாக மாற்ற எலன் நினைக்கிறார். தனது நிறுவனத்தை காப்பியடித்து உருவான த்ரெட்ஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர். மார்க் ஸூக்கருடன் தீவிரமான வார்த்தைப் போரில் இறங்கினார்.

விண்வெளி தொடர்பான புகைப்படங்கள், கருந்துளை, இயற்கையில் வினோதமான இயல்புகள், கோக்குமாக்கான கட்டிடங்கள் என அனைத்தையும் ரசிக்கும் எலன், செவ்வியல் தன்மைக்கும், எதிர்காலத்திற்குமான பாதையில் இருக்கிறார். நிகழ்காலத்தை ப் பற்றி தீவிரமாக யோசிக்கும் மனிதர். மேதாவியும், முட்டாளும் ஒரே மனிதராக இருந்தால் எப்படி என யோசிக்க வைப்பபவர். நவீன காலத்திற்கான ஆன்மாவை தனக்குள் கொண்டவர் என்று கூறவேண்டும்.  

டேவிட் ரன்சிமேன்

தி கார்டியன் வீக்லி செப்.29.2023

கருத்துகள்