இடுகைகள்

கால எந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

படம்
  ஒகே ஒக்க ஜீவிதம் தெலுங்கு சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி இயக்கம் - ஶ்ரீகார்த்திக்   நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை. படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா? 2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம். ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆதிக்கு ஒரு

வசியம் வைத்து பெண்ணை மயக்கலாம்! - கடிதங்கள்

படம்
        6 வசியம் வைப்போமா? வடக்குப்புதுப்பாளையம் 16.1.2021 அன்புள்ள தோழர் சபாபதிக்கு வணக்கம் . எப்படி இருக்கிறீர்கள் ? எங்கள் ஊரில் ஒருவழியாக மேகமூட்டம் விலகி இப்போதுதான் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது . அண்மையில் எங்கள் சின்ன மாமாவைப் பார்க்க போயிருந்தோம் . சிவகிரியில் டூவீலர் மெக்கானிக்காக உள்ளார் . அவர் கொடுத்த டீ , காபி காக்டெயில் பானத்தை விட கசப்பாக இருந்தது அவர் அறிமுகப்படுத்திய விஷயங்கள்தான் . எனது ஜாதகத்தை தாந்த்ரீகர் ஒருவரிடம் கொடுத்து பேச சொன்னார் . அவர் லூனாவில் வந்திறங்கி மாமாவின் வீட்டுக்கு வந்தது முதல் வினோதமாக இருந்தது . வம்சாவளியாக பில்லி , சூனியம் , வசியம் வைக்கிற ஆள் என்று அவராகவே சொல்லிக்கொண்டார் . எனக்கு அவர் சொல்ல சொல்ல வயிற்றுக்குள் ஏதோ உருண்டு புரள்கிற அவஸ்தை தொடங்கியது . அம்மா எப்போதும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் எப்போதும் பேசுபவர் அமைதியாகிவிடுவார் . பெண்ணைப் பிடித்திருந்தால் சொல்லுங்ளள் வசியம் செய்து கல்யாணம் செய்துவிடலாம் என்றார் . எனக்கு இதுபோன்ற விஷயங்களை கோட்டயம் புஷ்பநாத் நாவலில் படிக்க ப

நவீன இளைஞனை டார்ச்சர் செய்யும் வெவ்வேறு காலகட்ட மனிதர்கள்! டைம் என்ன பாஸ்? - சூப்பர் சுப்பு

படம்
            டைம் என்ன பாஸ்?     டைம் என்ன பாஸ்? சூப்பர் சுப்பு சுட்டகதை என்ற படத்தை எடுத்தவர்தான் இந்த இயக்குநர். ஏறத்தாழ அந்தப்படத்திலிருந்து பெரிய மாறுதல்கள் இல்லாமல் மற்றொரு மேடை நாடகம் போன்ற வெப்தொடரை உருவாக்கியுள்ளார்.  டைம் என்ன பாஸ்? 2019இல் வாழும் ஐடி இளைஞன் அறைக்கு வரும் பல்லவ நாட்டு உளவாளி, இஸ்ரோ விஞ்ஞானி, பிரிட்டிஷ் கால ஆங்கிலோ இந்தியன் பெண், எதிர்காலத்திலிருந்து வரும் டெக் இளைஞன் ஆகியோர் வந்தால் என்ன களேபரங்கள் நடைபெறும் என்பதுதான் கதையின் முக்கியமான மையம். இந்த வெப் தொடரை பெரிதாக எதிர்பார்ப்புகளுடன் பார்த்தால், மிஞ்சுவது வாட்ச்மேனாக வரும் சந்தோஷம் (அலெக்ஸ்), பல்லவ உளவாளி (கிள்ளிவளவன்) ஆகிய இருவர் மட்டும்தான். குழுவில் வித்தியாசமாக தென்படுவது, செவத்தபையனாக வரும் பரத்தான். மாட்டு ஊசி போடும் டாக்டர் போல என்ன செய்வதென தெரியாமல் வெப் தொடர் முழுக்க தவித்திருக்கிறார். வெவ்வேறு காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வருகிறார்கள் நிச்சயம் பட்ஜெட் பெரிதாக இருந்தால் மட்டுமே பெரிதாக ஏதேனும் சாதிக்கமுடியும். இல்லையென்றாலும் உரையாடல்களில் கூட சுவாரசியம் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வெப்தொடரில் எ