இடுகைகள்

ராதிகா மேத்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு என்ன தேவை? குடும்பமா? செக்ஸா? - சேட்டன் பகத்

படம்
இளைஞர்களின் இந்தியாவுக்குப் பிறகு சேட்டன் பகத் கோமாளிமேடைக்கு வருகிறார். இந்த விமர்சனப் பதிவு மூலம்.  கதை, அதே லைன்தான். உயர் கல்லூரிகளில் படிப்பு, நட்பு, கோல்டன் சாக் எனும்  முதலீட்டு நிறுவனத்தில் வேலை, காதல், பாலுறவு, பிரிவு, திருமணம் என சேட்டனிடம் என்ன எதிர்பார்த்து கிராஸ்வேர்டு கடையில் வாங்கினோமோ அத்தனை விஷயங்களும் நூலில் உண்டு.  ராதிகா மேத்தா என்ற படிப்பில் பட்டையை கிளப்பும் சுமார் மூஞ்சிப் பெண் கோல்ட்மேன் சாக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். தன் மீதான தாழ்வு மனப்பான்மையில் தடுமாறுபவர்,  டெபனீஸ் சென் என்ற விளம்பரத்துறை இளைஞர் மீது காதலில் விழுகிறார். ஆனால் அவர், டிபிக்கல் பெங்காலி ஆள். காதலிக்கும் பெண் தன்னை விட ஒரு ரூபாயேனும் குறைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். இதுதெரிய காதல் புட்டுக்கொள்கிறது. இது அமெரிக்காவில், ப்ரூக்ளின் நடைபெறுகிறது. உடனே ட்ரான்ஸ்பர் கேட்க, கம்பெனி ஹாங்காங் போங்களேன் என்று சொல்லுகிறது.  யெஸ். அங்கும் காதல்தான். ஆனால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நீல் குப்தாவுடன் கிறுக்குத்தனமான ஆனால் ராதிகா மேத்தா