இடுகைகள்

சப்மிஸிவ். பிடிஎஸ்எம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!

படம்
  ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள். தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள். ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்க