இடுகைகள்

உயிரினங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தோல்பாவைக்கூத்து மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வுக்கல்வி! பிரவின்குமார் குழுவினரின் புதிய முயற்சி!

படம்
  சூழல் பிரசாரத்தை தோல்பாவைக்கூத்து மூலம் செய்யலாம்!  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர், ஆர்.பிரவின் குமார். அண்மையில் தமிழக அரசு பிரவின் குமாரின் சூழல்பணிகளைப் பாராட்டி,  2021ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதை வழங்கியுள்ளது.  பிரவின் குமார், பொம்மலாட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காடுகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 2013ஆம் ஆண்டு தொடங்கி,  பள்ளிகளில் தனது குழுவினருடன் சேர்ந்து பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை பிரவின் குழுவினர், தமிழ்நாடு முழுக்க 150 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  தனது நிகழ்ச்சி மூலம் உயிரினங்கள் பற்றிய அறிவையும், அதனை பாதுகாக்கும் அக்கறையையும் மாணவர்களுக்கு உணர்த்த உழைத்து வருகிறார் பிரவின் குமார்.  “முதலில் நாங்கள் பொம்மலாட்டத்தை பள்ளியில் நடத்தும்போது அமைதியாக மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒருமுறை திடீரென பச்சோந்தி பாத்திரம் நாடகத்தின் இடையே தோன்றி, நீங்கள் என்னைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க வைத்தோம். சற்று நேரம் பேசாமல் இருந்த மாணவர்கள் அதனை வேட்டையாடுவோம் என ஒப்புக

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பவளப்பாறைகளைக் காக்கலாம்!

படம்
  பவளப்பாறைகளைக் காக்கும் முயற்சி!  மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, பெலிஸ். இங்கு கடல்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் சூழல் அமைப்பில் முக்கியமானவை. சூழலியலாளர் லிசா கார்ன், கடலில் பவளப் பாறைகளை ஆய்வு செய்து வருகிறார். இவர், காலநிலை மாற்றத்தில் அவை அழிந்துவருவதைக் கண்டார். இதைத் தடுக்க, 2013ஆம் ஆண்டு ஃபிராக்மென்டேஷன் ஆஃப் ஹோப் எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம், அழிந்த பவளப்பாறைகளை மீட்கும் செயல்பாடுகளை செய்து வருகிறார்.  லிசாவின் வீடருகே லாஃபிங் பேர்ட் கயே (Laughing Bird Caye) எனும் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை மீண்டும் வளர்க்க முயன்றுவருகிறார் லிசா. அறிவியலாளர்களின் ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி, பவளப்பாறைத்துண்டுகளை வளர்த்து வருகிறார். சிமெண்டில் செய்த அடித்தட்டு கற்களில் பவளப்பாறைகளிலிருந்து சேகரித்த பகுதிகளை பொருத்தி வளர்க்கிறார்.  அழிந்துவரும் எல்க்ஹார்ன், பவளப்பாறைகளின் மரபணுக்களை சேகரித்து 28 மரபணு வங்கி  நர்சரிகளை உருவாக்கியுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த கடல் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர், டேவிட் வாகன். இவர், 45

மெக்சிகோவின் கலாபகோஸ் தீவுகள்! - ரெவில்லேஜிஜெடோ தீவுகள்

படம்
  மெக்ஸிகோவின் கடற்புரத்தில் ரெவில்லேஜிஜெடோ தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை மெக்ஸிகோவின் கலாபகோஸ் என்று புவியியலாளர்கள் அழைக்கிறார்கள். இதற்கு, இங்கு காணப்படும் பல்லுயிர்த்தன்மையே முக்கியக் காரணம். கடல் பகுதியில் அமைந்துள்ள சங்கிலித் தொடரான தீவுக்கூட்டங்களுக்கு ஆர்ச்சிபெலகோ என்று பெயர்.  இவற்றில் நிறைய எரிமலைகள் அமைந்துள்ளன. இவை என்ன காரணத்தில் வெடிப்புக்குள்ளாகின்றன என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  1953ஆம் ஆண்டு பார்சினாவில் உள்ள ஆர்ச்சிபெலகோ எரிமலை லாவாவை வெளியேற்றியது. பிறகு, 1993 ஆம் ஆண்டு பசிபிக் பகுதியிலுள்ள எவர்மன் எரிமலை, வெடித்தது.இந்த இரண்டு எரிமலைகள் இரண்டுமே இன்று வரை இயங்கி வருகின்றன. “நாங்கள் இந்த எரிமலையில் வெளியாகும் லாவா அளவையும், ஏற்படும் ஆபத்து பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் நெதர்லாந்தின் உட்ரெச்ட் பல்கலைக்கழக பேராசிரியரான தூவே வான் ஹின்ஸ்பெர்ஜன் (). எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் இருப்பதால்தான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர். எனவே, எரிமலைகளின் வெடிப்பை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.  லாவாவில் க

ஹில்லியர் ஏரி - அடர்த்தி மிகுந்த ரோஸ் வண்ண நீர்பரப்பு!

படம்
  ஹில்லியர் ஏரி ஆஸ்திரேலியாவின் மேற்குப் புற பகுதியில், ஹில்லியர் ஏரி அமைந்துள்ளது. இங்கு கடல்பகுதி நீலநிறமாகவும், ஏரி, ரோஸ் நிறத்திலும் அமைந்துள்ளது.  ஏரியிலுள்ள நீரில் நீந்தலாம். ஆனால் இதில் முழுமையாக உங்களை அமிழ்த்தி மூழ்கி குளிப்பது கடினம்.  ஏரியைச் சுற்றி அடர்த்தியான காடு உள்ளது. இதில், ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் அமைந்துள்ளன. இவை காகித தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. 1802ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பயணிகள் ஆஸ்திரேலியாவின் தீவுப்பகுதிக்கு வந்து, ரோஸ் நிற ஏரிக்கு ஹில்லியர் என்று பெயர் வைத்தனர். இப்பெயர், கப்பலில் வந்த சக பயணி ஒருவரின் பெயர் ஆகும்.  ரோஸ் நிற ஏரி, உப்புநீர் ஏரி ஆகும். 600 மீட்டர் ஆழம் கொண்டது.  இதன் நிறம், இதில் கலந்துள்ள பாசிகளால் வந்தது. உப்புநீரில் மட்டுமே இந்த பாசி வாழ்கிறது. உலகமெங்கும் உள்ள பல்வேறு உப்புநீர் ஏரிகளிலும் பாசி மட்டும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.  ஏரியின் கரைப்பகுதியில் உப்பு படிக வடிவில் ஒதுங்குவது வழக்கம். நீர் எப்போதும் ரோஸ் நிறத்தில்தான் இருக்கும். நீரை தனியாக பிரித்தெடுத்தாலும் நிறம் மாறுவதில்லை.  இங்கு  ஆஸ்திரேலிய கடற் சிங்கம், நியூசிலாந்து சீல், சிறிய ப

குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!

படம்
புழுக்களால் ஒளிரும் குகை!  நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.  வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப்  பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.  ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக உருமாறுகிறது. இப்பூ

இந்திய குகைகளிலுள்ள ரகசியங்களை சொல்லும் ஆராய்ச்சியாளர்கள்!

படம்
  இந்திய குகைகளிலுள்ள ரகசியங்கள்! இந்தியாவில் உள்ள குகைகள் பல்வேறு ரகசியங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ளன.  ஆயிரக்கணக்கிலான நுண்ணுயிரிகள் வாழும் குகைகளில்,  குறைவான ஆராய்ச்சிகளே நடைபெற்றுள்ளன. தற்போது குகைகளையும், அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.  குகைளை ஆய்வு செய்யும் துறைக்கு, ஸ்பீலியோலஜி (Speleology) என்றுபெயர். இந்தியாவில் 9  ஆராய்ச்சியாளர்கள்  ஒன்றாக இணைந்து குகைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களை உயிரியல் ஆராய்ச்சியாளர் *************** வழிநடத்துகிறார். ********* தமிழ்நாட்டிலுள்ள ********பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில்  உயிரியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் அனைவரும் இணைந்துதான் குகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும், ஸ்பீலியோலஜி சங்கத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.  மேகாலயா, அந்தமான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள குகைகள் ஆராய்ந்து வருகின்றனர். இக்குகைகளில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துமே காலநிலை மாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. ”ஏரி அல்லது ஆற்று மீன்களைப் பற்றி

ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட பசுமைச் சுவர்!

படம்
  ஆப்பிரிக்காவின் பசுமைச்சுவர்!  ஆப்பிரிக்காவில் கிரேட் கிரீன் வால் (Great green wall) என்ற திட்டத்தின்படி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இத்திட்டப்படி, 8 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மரக்கன்றுகளை நட்டு சகாரா பாலைவனம் அதிகரிப்பதை தடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் வடக்குப்பகுதி ஆப்பிரிக்காவின் தன்மையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.  2030க்குள் மரக்கன்றுகளை முழுமையாக நடுவது திட்டம். இதன்மூலம், சாஹேல் எனும் அப்பகுதியில் மழைபொழிவு கூடி, வெப்பம் குறையும் என சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு, டிசம்பரில் அமெரிக்க புவி இயற்பியல் மாநாடு நடைபெற்றது.  இதில், எதிர்காலத்தில் பாலைவனங்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டது. பசுமை சுவர் திட்டம், வெப்பத்தை எளிதில் எதிர்கொள்ள உதவும்.   சகாராவை பசுமையாக்கும் திட்டம், மேற்கு ஆப்பிரிக்க பருவகாலங்களில் மாறுதல்களை ஏற்படுத்தும் என சூழல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் தொடங்கும் மாதங்களில் வெப்பமான வறண்ட காற்று வீசுகிறது. வடகிழக்கு  பகுதியில் இக்காலத்தில் ஈரப்பதமான காற்று வீசுகிறது. ”சூரியனின் கதிர்வீச்சு இந்த நிலப்பரப்பை தீவி

கடலின் தனித்துவம் அறிவோம்!

படம்
  கடலின் தனித்துவம்! கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ.. நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.  கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது.  கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம்.  கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது.  கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது.  சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம்.  New scientist  23 apr 2022 Image - surfertoday

பவளப்பாறை, பருவ மழைக்காடு பற்றி அறிவோம்!

படம்
  தெரியுமா? பவளப்பாறை கடலின் ஆழ்கடலில் உள்ள முக்கியமான சூழல் அமைப்பு. ’கடலில் அமைந்துள்ள மழைக்காடுகள் ’என சூழலியலாளர்கள் இதனைக் கூறுகிறார்கள். பவளப்பாறைகளைப் பார்க்க பாறைகள் போல தோற்றமளிக்கும். ஆனால் அவை உண்மையில் விலங்குதான். இதன் மேல்பகுதி கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் ஆனது. இதுவே அதன் ஓடுபோல தோற்றமளிக்கிறது.  இதன் அடிப்பரப்பில் நண்டு, ஆமை, மீன் என ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறை, எளிதில் அழியக்கூடியவை. கடலில் ஏற்படும் மாசுபாடு இதனை எளிதாக பாதித்து அழிவை உருவாக்குகிறது.  பருவ மழைக்காடு இங்கு, வெப்பமும், ஈரப்பதமும் சரிபாதி அளவில் இருப்பதால், தாவரங்களும்  உயிரினங்களும் அதிகளவில் இங்கு வாழ்கின்றன.  உலகில் வாழும் தாவரம் மற்றும் விலங்கு இனங்களில்  பாதியளவு பருவ மழைக்காடுகளில் காணப்படுகின்றன.  தாவரம், விலங்கு, பூஞ்சை, நுண்ணுயிரிகள் என பல்லுயிர்த்தன்மை கொண்ட இடம் இது. மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா தீவு ஆகியவற்றில் பருவ மழைக்காடுகள் அமைந்துள்ளன.   தகவல் https://climatekids.nasa.gov/10-th

அகதிகளைத் தடுக்கும் இரும்புவேலி- பாதிக்கப்படும் காட்டு உயிரினங்கள்

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

இறந்தவர்களின் சாம்பலில் உருவாகும் பாறைப்பந்து- பவளப்பாறைக்கு மாற்று என மாறுகிறது டிரெண்ட்!

படம்
  ஆழ்கடலில் உருவாக்கப்படும் பாறைப்பந்து! கடலில் பவளப்பாறைகள் அழிவதைப் பற்றிய செய்திகளை நிறைய வாசித்திருப்போம். தற்போது, அமெரிக்காவில், புதிதாக பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என சிலர் முயன்று வருகிறார்கள்.  இதன்படி, காலமானவரின் பிணத்தை எரித்து, சாம்பலை கான்க்ரீட் கலவையில்  கலக்குகிறார்கள். அதனை, பந்து வடிவில் (Reef ball) மாற்றுகிறார்கள். பிறகு, அப்பந்தை ஆழ்கடலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்.  250 கிலோ முதல் 1000 கிலோ வரை எடைகொண்டது பாறைப் பந்து. இதனைக் கடலின் தரைப்படுகையில் வைக்கின்றனர். பவளப் பாறை போன்ற இதன்  கரடு முரடான வடிவத்திற்குள் மீன்கள் வாழ்கின்றன. அதன்மேல் பாசிகள் படருகின்றன. இதனைத் தொழிலாகச் செய்யும் நிறுவனங்கள், பாறைப் பந்தை சூழல் காக்கும் முயற்சி என்கிறார்கள்.    கடல் உயிரினங்களை நேசிப்பவர்கள்தான், புதிய பாணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.  இது கடலுக்கடியில் ஒருவருக்கு அமைக்கப்பட்ட கல்லறை என்பதே உண்மை. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த எடர்னல் ரீஃப் என்ற நிறுவனம், கடல் படுகையில் பாறைப் பந்துகளை அமைத்துக் கொடுக்கிறது. பிஹெச் (pH) அளவு நடுநிலையுள்ள கான்க்ரீட் கலவையில், இறந்துபோனவரின் ச

பனி உருகும் சத்தம்!

படம்
  pixabay பனி உருகும் சத்தம்!  2017ஆம் ஆண்டு ஸ்விஸ் ஆல்ப்ஸில் எய்கர் மலைச்சிகரத்தில் பனிக்கட்டி உருகி நீராக மாறியது. இப்படி பனிக்கடி உடைந்து நொறுங்கி நீராவது யாரும் பார்க்காமல் நடைபெற்றது. பனிக்கட்டி உடையும் ஒலி என்பது மனிதர்களால் காதில் கேட்க முடியாத குறைந்த ஒலி அளவைக் கொண்டது. இதனால் என்ன நடந்தது என்பதை மக்கள் பின்னர்தான் அறிந்தனர். பனி உடையும், வீழும் அதிர்வு, ஒலி ஆகியவற்றை வைத்து உருகிய பனியை எளிதாக கணக்கிட முடியும்.  குறைந்த அலைநீளம் கொண்ட ஒலிகளை இன்ஃப்ரா சவுண்ட் (கேளா ஒலி அலை)என்று அழைக்கின்றனர். அதிக தொலைவிலிருந்து பயணப்படும் ஒலி அலைகள் இவை. செயல்பாட்டிலுள்ள எரிமலைகளை  கண்காணிக்க கேளா ஒலி அலைகளைஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த அலைகளைப் பனிச்சரிவை அளவிட பயன்படுத்தினாலும் ஐஸ்கட்டிகளின் உருகுதல், உடைந்து நொறுங்குவதை அளவிட முதன்முறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.  காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை வைத்து கேளா ஒலியை இயக்கி பதிவு செய்தால் மட்டுமே பனிப்பாறை மெதுவாக உடைந்து வீழ்வதை பதிவு செய்ய முடியும். மிக மெல்ல நடக்கும் நிகழ்ச்சி இது. இதனால் அங்கு சுற்றுப்புறங்களில் வா

நீர்நிலைகளிலுள்ள பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியுமா?

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ

புதிய உயிரினங்கள் - 2021

படம்
  2021 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட புதிய உயிரினங்கள்! உலகின் சிறிய பல்லி, புதிய இன ஆக்டோபஸ், எறும்பு என பல்வேறு புதிய உயிரினங்கள் உலகில் கண்டறியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதையும் மனிதன் ஆக்கிரமித்துவிட்டான் என்று தோன்றினாலும் கூட நாம் நினைத்துப்பார்க்க முடியாத ரகசியங்களை இயற்கை கொண்டிருக்கிறது. அப்படி கடந்த ஆண்டில் கண்டறியப்பட்ட உயிரினங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.  எறும்பு (Strumigenys ayersthey) ஈகுவடார் நாட்டில் சாகோ டேரியன் எனும் பகுதியில் புதிய எறும்பு கண்டறியப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டக்ளஸ் பூஹெர் எனும் ஆய்வாளர் எறும்பைக் கண்டுபிடித்து அதனை உறுதி செய்தார். எறும்புக்கு ஸ்ட்ரூமிஜெனிஸ்  அயர்ஸ்தே (Strumigenys ayersthey) என்று தனக்கு பிடித்த ராக் இசைக்கலைஞரின் பெயரை சூட்டியிருக்கிறார் டக்ளஸ்.   நிறம் மாறாத பச்சோந்தி (Brookesia nana) நகத்தை விட சற்றே பெரிதாக இருக்கும் பச்சோந்தி (B.nana) இது.  ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்தில் ஆண், பெண் என இரண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மடகாஸ்கரில் உள்ள மழைக்காடுகளில் அமைந்துள்ள மலைத்தொடர்தான் பச்சோந்தியின் இருப்பிடம். பச்சோந்தி

யுனைடெட் வே மும்பையின் தூய்மைப்பணி

படம்
  கடற்கரைகளை சுத்தம் செய்யும் குழு! மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம், 40 கல்லூரி மாணவர்கள் குழு, மஹிம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இக்கழிவுகள், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யுனைடெட் வே மும்பை என்ற தன்னார்வ நிறுவனத்தின் பெயரில் தூய்மை பணிகளை மாணவிகள் செய்தனர்.  2017ஆம் ஆண்டு யுனைடெட் வே மும்பை தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் யுனைடெட் வே வேர்ல்ட் என்ற உலகளாவிய அமைப்பின் இந்திய பிரிவு ஆகும். முமைபையிலுள்ள தன்னார்வ அமைப்பு, 11 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்து 98 ஆயிரம் கிலோ கழிவுகளை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்பது கடற்கரைப் பகுதிகளை இந்த அமைப்பு சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ”கடலில் வந்து சேரும் ஆறுகளில் ஏகப்பட்ட கழிவுகள் உள்ளன. அவற்றைக் குறைத்தாலே கடற்கரையில் ஒதுங்கும் கழிவுகளை குறைக்கலாம். நாங்கள் மும்பை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியில் உதவுகிறோம்” என்றார்  யுனைடெட் வே மும்பை அமைப்பின் துணைத்தலைவர் அஜய் கோவலே.  கடற்கரையைச் சுற்றியுள்ள சுவர்களில் வண்ணம் தீட்டுவது, குப்பைகளை போடக

இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!

படம்
தி வாட் இஃப் ஷோ நாட்ரான் ஏரி கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி ( ). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது.  மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான்.  ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இதன் விளைவாக, இங்கு