ஹில்லியர் ஏரி - அடர்த்தி மிகுந்த ரோஸ் வண்ண நீர்பரப்பு!

 









ஹில்லியர் ஏரி

ஆஸ்திரேலியாவின் மேற்குப் புற பகுதியில், ஹில்லியர் ஏரி அமைந்துள்ளது. இங்கு கடல்பகுதி நீலநிறமாகவும், ஏரி, ரோஸ் நிறத்திலும் அமைந்துள்ளது.  ஏரியிலுள்ள நீரில் நீந்தலாம். ஆனால் இதில் முழுமையாக உங்களை அமிழ்த்தி மூழ்கி குளிப்பது கடினம். 

ஏரியைச் சுற்றி அடர்த்தியான காடு உள்ளது. இதில், ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் அமைந்துள்ளன. இவை காகித தயாரிப்பிற்குப் பயன்படுகிறது.

1802ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பயணிகள் ஆஸ்திரேலியாவின் தீவுப்பகுதிக்கு வந்து, ரோஸ் நிற ஏரிக்கு ஹில்லியர் என்று பெயர் வைத்தனர். இப்பெயர், கப்பலில் வந்த சக பயணி ஒருவரின் பெயர் ஆகும். 

ரோஸ் நிற ஏரி, உப்புநீர் ஏரி ஆகும். 600 மீட்டர் ஆழம் கொண்டது.  இதன் நிறம், இதில் கலந்துள்ள பாசிகளால் வந்தது. உப்புநீரில் மட்டுமே இந்த பாசி வாழ்கிறது. உலகமெங்கும் உள்ள பல்வேறு உப்புநீர் ஏரிகளிலும் பாசி மட்டும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. 

ஏரியின் கரைப்பகுதியில் உப்பு படிக வடிவில் ஒதுங்குவது வழக்கம். நீர் எப்போதும் ரோஸ் நிறத்தில்தான் இருக்கும். நீரை தனியாக பிரித்தெடுத்தாலும் நிறம் மாறுவதில்லை. 

இங்கு  ஆஸ்திரேலிய கடற் சிங்கம், நியூசிலாந்து சீல், சிறிய பெங்குவின், கேப் பேரன் வாத்துகள் இங்கு வாழும் உயிரினங்கள் ஆகும். வெப்பமான, வறண்ட, மென்மையான, ஈரப்பதமான பனிக்கால சூழல் நிலவுகிறது. 




 

கருத்துகள்