தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் ட்ரோன்கள் !
தொல்லியல் ஆய்வுகளுக்கு உதவும் ட்ரோன்!
தொன்மையான புதைப்படிமங்களைக் கண்டறிய அகழாய்வாளர்கள், குறிப்பிட்ட இடத்தை ஏரியல் புகைப்படமாக பதிவு செய்வார்கள். இதற்கு பலூன், பட்டம், விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். தற்போது, ட்ரோன்களையே பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையில் புகைப்படம் வேகமாகவும், தரமாகவும் கிடைக்கிறது.
ட்ரோன்களை ரிமோட் மூலம் எளிதாக பறக்கவைப்பதோடு, பறக்கும் பாதையையும் முன்கூட்டியே புரோகிராம் செய்யலாம். ட்ரோன்கள், புகைப்படங்களை குறிப்பிட்ட இடைவெளியில் திட்டமிட்டு வெவ்வேறு கோணங்களில் எடுக்கிறது. இதனை கணினியில் உள்ள மென்பொருள் மூலம் நில அடுக்குகளைப் பார்க்கும் டோபோகிராபி (Topography) காட்சித் தன்மைக்கு மாற்றலாம். இம்முறைக்கு, போட்டோகிராமெட்டரி (Photogrammetry) என்று பெயர். அகழாய்வு செய்யும் இடங்களில் ட்ரோன் மூலம் எடுக்கும் புகைப்படங்களை கணினி வழியே 3 D படங்களாக மாற்றி பார்க்கலாம். இதன் மூலம் அகழாய்வு செய்யும் இடங்களில் உள்ள சிறிய பொருட்களைக்கூட துல்லியமாக அறியலாம். இப்படங்களோடு செயற்கைக்கோள் படங்களையும் இணைத்து நிறைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெறமுடியும்.
Digging now starts in the skies
https://www.science.org/content/article/aerial-drones-reveal-hidden-archaeology
https://www.atlasobscura.com/articles/drone-archaeology-finds-underground-earthworks
கருத்துகள்
கருத்துரையிடுக