வன்மமாக மாறும் வெறுப்பு - கடிதங்கள் - கதிரவன்

 







3.4.2022

மயிலாப்பூர்

அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசி இருக்கிறேன். மகிழ்ச்சி. தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டன. இம்முறை துறை சார்ந்த வல்லுநர்களை தேடி எழுத வைக்க இருக்கிறேன். முயற்சி பலிதமாகுமா என்று தெரியவில்லை. கஷ்டம்தான். முயல்கிறேன். இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். வடபழனி. கேம்பஸ் என்ற ஹோட்டலில் புட்டும் கடலைக்கறியும் வாங்கிக் கொடுத்தார். டீப் வாட்டர். பவர் ஆஃப் டாக் என்ற இரு படங்களைப் பார்த்தேன். டீப் வாட்டர், மனைவி மீது கொலைவெறி பாசம் கொண்ட கணவரின் அதீத செயல்பாடுகளைப் பேசுகிறது. குறைந்த வசனங்கள். நிறைந்த உடல்மொழி என படம் எடுத்திருக்கிறார்கள். 

பவர் ஆஃப் டாக் படம், பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் எடுத்தது. ஒருவரின் மனதில் உருவாகும் வெறுப்பு எப்படி வன்மமாக மாறி குற்றச்செயல்களுக்கு தூண்டுகோலாகிறது என்பதே படம். இந்து ஆங்கில நாளிதழில் சூழல் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார்கள். இதை மொழிபெயர்த்து எழுத வேண்டும். எங்கள் நாளிதழ் இனி நூலகங்களில் கிடைக்கும் என்று ஆசிரியர் சொன்னார். உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள். 

நன்றி!

அன்பரசு

பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்