இடுகைகள்

சாகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடன்பிறவாத தம்பி சாகரின் குடும்பத்திற்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் திருடன் பிரபு! பலேவாடி பாசு - பாலைய்யா, ஷில்பா, அஞ்சலா

படம்
பலேவாடி பாசு பாலகிருஷ்ணா, ஷில்பா ஷெட்டி, அஞ்சலா ஜாவேரி இயக்கம் - பி.ஏ. அருண் பிரசாத் இசை - மணி சர்மா காட்டிலாகா அதிகாரியாக சாகர் அவர் வண்டி ஓட்டுநர் புதிதாக வந்து சேர்கிறார்கள். பழங்குடி மக்களுக்கு பல்வேறு குடியிருப்புகள், கல்வி, கணினி, டிவி வசதிகளை செய்து தருகிறார் சாகர். இதனால் மக்கள் அவரை வாழும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். இந்த நேரத்தில் அங்கு சுனிதா என்ற இளம்பெண் வருகிறார். அவர் சாகர் என்ற பெயரில் அங்கு வேலையில் இருப்பவர், மோசடிக்காரர் என குற்றம்சாட்டுகிறார். அப்போதுதான் சாகர் என்பவர் யார் என அனைவரும் அறிகிறார்கள். உண்மையில் சாகர் என்ற பெயரில் அங்கு வேலை செய்பவர் யார் என்பதை பழங்குடி மக்களோடு நாமும் அறிவதுதான் கதை.  பாலைய்யாவின் குறையாத எனர்ஜிதான் படத்தைப் பார்க்க வைக்கிறது. படத்தில் பழங்குடி பெண்ணாக பிரிட்டிஷ் பெண் அஞ்சலாவை, லக்மே லிப்ஸ்டிக் கூட கலைக்காமல் ஜிலு ஜிலு உடை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வது? அவர் இல்லையென்றால் படத்தில் பாடல்களை எப்படி வைப்பது? லாஜிக் தானே? நிறைய லாஜிக் பார்த்தால் மேஜிக் மிஸ் ஆகிவிடும்.  படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உண்டு. யானைகளின