இடுகைகள்

பெப்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிக்கிற சர்க்கரை பொய்கள் - பெருநிறுவனங்கள் எப்படி குழந்தைகளை திட்டமிட்டு கொல்கின்றன?

படம்
  சர்க்கரையை மறைக்கும் சாமர்த்திய பொய்கள்! பீடியாஸ்யூர் உணவு கிரிட்ஸோ சூப்பர்மில்க் - தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு பெப்சி கோ நிறுவனத்தின் முன்னணி குளிர்பான பிராண்டின் பெயர் ஸ்டிங் எனர்ஜி. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பானத்தை குடித்தவர் வீசும் விசிறிக் காற்று, உடல் பருமனான முதலாளி ஒருவரை அப்படியே அந்தரத்தில் தூக்கி பின்னால் தள்ளி வீழ்த்தும். அந்தளவு ஆற்றல் ஸ்டிங்கில் பொதிந்து உள்ளது என கூறுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், பானத்தில் உள்ள அதிகளவு சர்க்கரைதான். ஆனால் அதை விளம்பரத்தில் கூறினால், ஸ்டிங்கை யார் வாங்குவார்கள்? எனவே, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குகிறது என சொல்லி விற்கிறார்கள். இருநூறு மில்லி பானத்தின் விலை ரூ.20. குழந்தைகள் குடிக்க கூடாது என சிறிய எழுத்தில் பாட்டிலில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் அதை குடிக்க தடையாக இருப்பதில்லை. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என வாங்கிக் குடித்து வருகிறார்கள். மனதிற்கு ஊக்கம், உடலுக்கு சக்தி என்பதை மக்கள் அப்படியே நம்புகிறார்கள். இதை விளம்பரங்கள் மூலம் திரும்ப திரும்பச் சொல்லி பெருநிறுவனங்கள் மக்களை   நம்ப வை

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொட

சில பானங்களை கூலிங்காக குடிக்கவேண்டிய அவசியம் என்ன?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி சில பானங்களை கூலிங்காக குடித்தால் நன்றாக இருக்கிறதே ஏன்? பொதுவாகவே மூளை கொடுக்கும் சிக்னல்களில்தான் நம் உடல் இயங்குகிறது. ஆச்சி மோர் குடிக்கலாமா, டெய்லி கம்பெனியின் பன்னீர்சோடா, அல்லது மாங்கனிச்சாறு குடிக்கலாமா என்பதெல்லாம் உங்கள் தாகம் பொறுத்ததல்ல. குறிப்பிட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைக்கின்றன. எனவே குறிப்பிட்ட பானங்களை கேட்டு வாங்கிக் குடிக்கிறோம். பெப்சி போன்றவற்றை குளிர்ந்த நிலையில் இல்லாமல் குடித்தால் இரும்புச்சத்து டானிக் போலவே இருக்கும். எனவே அதனை கூலிங்காக குடியுங்கள் என அக்கம்பெனியே விளம்பரம் செய்கிறது. இந்த பானங்கள் நம் நாக்கிலுள்ள சுவை உணர்வை மட்டுப்படுத்துகின்றன. எனவே நமக்கு கோலா குடித்தால் நன்றாக இனிப்பாக உள்ளது போலத் தெரிகிறது. இதை எப்படி பார்க்கலாம் என்றால் டீ குடிப்பதை விட கூலிங் கோலா ஓகே என்றளவு மனிதர்கள் இதற்கு அடிமையாகிறார்கள்.