இடுகைகள்

வாழைப்பழம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைகீழாக வளரும் வாழைப்பழம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  அமெரிக்க கொடியை  பள்ளி மாணவர் உருவாக்கினார்! உண்மை. 1958ஆம் ஆண்டு பாப் ஹெஃப்ட் ( Bob Heft) என்ற மாணவர், பள்ளியில் புராஜெக்ட் வேலையாக இதனைச் செய்தார். பாப், தேசியக்கொடியில் 50 மாகாணங்களை நட்சத்திரங்களாக உருவாக்கியிருந்தார். இதனை ஆசிரியர் ஏற்கவில்லை என்பதால், அவருடைய திட்ட மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாணவர், மனம் தளராமல் பாப் ஹெஃப்ட் அமெரிக்க அதிபரான   ட்வைட் டி ஐசன்ஹோவர் ( Dwight D. Eisenhower)தனது தேசியக்கொடி வடிவமைப்பை அனுப்பினார். இரண்டு மாகாணங்களை இதில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். அதிபர், அந்த வடிவமைப்பை ஏற்றுக்கொண்டார்.  வாழைப்பழம் தலைகீழாக வளருகிறது! உண்மை. நாம் வாழைப்பழத்தை தலைகீழாகவே பிரித்து உண்கிறோம். அவை வளரும் விதத்தில், பின்புறப்பகுதி வானைப் பார்த்து அமைந்திருக்கிறது. இவை பெரிதாக வளரும்போது சூரியனைப் பார்த்து வளர்ந்து வளைவான வடிவத்தைப் பெறுகிறது.  நாய் தனது இடது மூக்கில், நறுமணத்தை முகர்கிறது!  உண்மை. நாய், முகரும்போது வலது மூக்கில் வாசனைகளை முகரும். பிறகு, அதில் ஆபத்தான சமிக்ஞைகள் தெரிந்தால், அதிலேயே நுகர்ந்து உண்மையா என ஆராயும். நறுமணம், ஆபத்தில்லாத விஷயங்கள், இணை சேர

தெரிஞ்சுக்கோ - சீசனே இல்லாத சூப்பர் வாழைப்பழம் !

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வாழைப்பழம் சாப்பிடாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆயிரத்திற்கும் மேலான வெரைட்டிகளில் வாழைப்பழம் பஜார்களை நிரப்பி வருகிறது. எல்லா சீசன்களில் நம் வாயை நிரப்பி பசியை ஆற்றுவது வாழைப்பழம்தான். அதற்காக அதனை ஏழைகளின்...... என்று எந்த பெயர் சூட்டவும் எனக்கு ஆர்வமில்லை. எப்போதும் கிடைக்கும் எளிய பழம் அது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம். எப்போதும் விளையும் பழம் என்பதால், பூஞ்சைத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வாழைப்பழத்தின் சதவீதம் அதிகம். ஒரு வாழைத்தாரில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் என்று எண்ணியிருக்கிறீர்களா? விடுங்கள். விற்கும் செட்டியார் எண்ணுவார். உலகளவில் 473 பழங்கள் இருந்ததே சாதனையாக கூறுகிறார்கள். மனிதர்களுக்கும் வாழைப்பழத்திற்குமான மரபணுப் பொருத்தம் 60 சதவீதமாக உள்ளது. உலகளவில் 5.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. உலக சந்தையில் 99 சதவீத வாழைப்பழங்கள் கேவண்டிஷ் ரக வாழைதான். அமெரிக்கா கடந்தாண்டில் மட்டும்  2.8 பில்லியன் மதிப்பிலான வாழைப்பழங்களை இறக்குமதி செய்துள்ளது. உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் வாழைப்பழத