இடுகைகள்

லவங்கப்பட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனைப் பொருட்களின் வரலாறும் பயன்பாடும் - மஞ்சள், லவங்கப்பட்டை

படம்
  மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு வந்ததே இங்குள்ள பல்வேறு இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்கத்தான். அன்று ஆங்கிலேயர்கள் செய்தனர். இன்று இந்திய தரகர்கள், தொழிலதிபர்கள் வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் கைக்கூலியாக அதே வேலையை இடைவேளை கூட விடாமல் செய்து வருகின்றனர். அதை விடுங்கள். நாம் இங்கு பேச வந்தது. தெற்காசியாவில் உள்ள வாசனைப் பொருட்கள் பற்றித்தான். கொச்சியை வாசனைப் பொருட்களின் தலைமையகம் என்று கூறுகிறார்கள். அந்தளவு இப்பகுதியில் டச்சுகாரர்கள் ஆட்சி செய்தபோது வாசனைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றிருக்கிறது. முக்கிய வாசனைப் பொருட்கள் என்னென்ன? இன்றும் செட்டிநாடு ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்கள்தான். நம் குடலில் அழற்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டவைதான். அவை குறிப்பிட்ட அளவைக் கொண்டவை அல்ல. மற்றபடி மருந்தாக பயன்படுத்தினால் மகத்துவம் கொண்டவைதான்.  மிளகு, ஏலக்காய், கிராம்பு, மஞ்சள் இவைதான்.  தெற்காசிய வாசனைப் பொருட்கள் ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் ஆகியவற்றுக்கு இந்தோனேஷிய மாலுமிகளால் கொண்டு செல்லப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் வாஸ்கோட காமா ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வணிக வாசலைத் திறந்