இடுகைகள்

கார்ப லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட