இடுகைகள்

அதிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

படம்
  How To Disappear: Erase Your Digital Footprint, Leave False... Author: Frank M. Ahearn Publisher: Lyons Press தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.  இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.  அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவனத்திற்கு நிரந்

கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

படம்
  ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963. பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம்.  அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக கவனித்து வ

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அடுத்த அதிப

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறுவனங்

சமூகம் என்பது என்ன?

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. சமூகம் என்பது என்ன? ப. சமூகம் , குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம். எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.   இந்த அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள் என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம் என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின் சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும்.   இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள்,   உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேலும், சட்டங்களை

அறிவியல் முன்னேற்றத்தால் எளிமையான வாழ்க்கை - ஜித்து கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி பதில்கள் கே. அறிவியல் முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதா? ப. அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றவில்லையா என்ன? மின்சாரம் இருக்கிறது. உங்கள் அறையில் ஒரு ஸ்விட்சை தட்டினால் விளக்கு எரிகிறது. ஆகாயவிமானத்தில் ஏறினால் லண்டனிலிருந்து டெல்லிக்கு எளிதாக சென்றுவிடலாம். தொலைபேசி அறையில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உங்களுக்கு நண்பர்களோடு பேசத் தோன்றினால் அவர்களோடு பேசலாம். அறிவியல் கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளன என்பது உண்மைதான். நோய்களை எளிதாக கண்டறிந்து தடுக்க முடிகிறது. அதேசமயம் அதே அறிவியல் மூலம்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை கண்டறிந்தனர். இதை வெடிக்க வைப்பதன் மூலம் பல லட்சம் மக்களை கொல்ல முடியும். நமது அறிவை விழிப்புணர்வோடும் அன்புடனும் சேர்த்து பயன்படுத்தினால் நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வதிலிருந்து காக்கலாம். கே. பெரிய மீன் சிறிய மீனை தின்று வாழ்வது இயல்பானதா? விலங்குகள் உலகில் நீங்கள் சொல்வது போல பெரிய மீன், சிறிய மீனை உணவுக்காக நம்பியிருக்கலாம். இது இயற்கையாக   அமைந்திருக்கலாம்

செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ தலையிடும் அதிகாரச்சண்டை! - டெக்கன் பிளட் வென்ஜென்ஸ் - அனிமேஷன்

படம்
                       டெக்கன் பிளட் வென்ஜென்ஸ் அனிமேஷன் - ஜப்பான்  அப்பா, மகன், பேரன் என மூன்று பேரும் டெக் நிறுவனங்களை வைத்து நடத்துகிறார்கள். ஜி கார்ப்பரேஷன், மிஷிமா என பல்வேறு பெயர்களில் நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள். அடிப்படையில் அத்தனை நிறுவனங்களிலும் அவர்கள் செய்வது ஒருவருக்கு இறப்பே இல்லாத செல்களைக் கண்டுபிடித்து அதை இளைஞர்களின் உடலில் செலுத்தி சோதிப்பது. சோதனை வெற்றியடைந்தால் பயன் நிறுவனத் தலைவர்களுக்கு.. தோல்வியடைந்தால் அது அந்த இளைஞனின் விதி.. மூன்று தலைமுறையினருக்கும் நடக்கும் அதிகாரப்போட்டி நிறைய மக்களின் வாழ்க்கையை முற்றாக அழிக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. இறுதியாக உலகை ஆள்வது யார் என்ற கேள்விக்கு பதில் நான்தான் என மூன்று பேரும் சொல்லிவிட்டு ஒருவருக்கொருவர் மோதுகிறார்கள் இறுதி வெற்றி யாருக்கு என்பதை ரத்தம் தெறிக்க நரம்பு புடைக்க கட்டிடங்கள் உடைந்த நொறுக்க பீதியூட்டும்படி சொல்லுகிற படம் இது. ஜப்பானில் உள்ள பள்ளியொன்றில் படிக்கும் மாணவர்கள் திடீரென காணாமல் போகிறார்கள். அதில் ஒருவன் மட்டுமே மிஞ்சுகிறான். ஆனாலும் அவன் தன் அடையாளத்தை மறைத்து வாழ்கிறான்

எனக்கு விதிகள்தான் முக்கியம்! - பழுத்த மிளகாய் சோள முறுக்கு

படம்
  1 அன்புக்குரிய இனிய மக்களே, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? நீங்கள் நலம் என்று பதில் தருவதை விட நாடு நன்றாக இருக்கட்டும் ஐயா, நான் அதற்குப் பிறகு தான் நலமாக இருப்பேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும். நான் அதைத்தான் விரும்புகிறேன் என்பதால், நீங்கள் கட்டாயம் அதைத்தான் கூறவேண்டும்.  இப்போது பாருங்கள் டிஜிட்டல் வழியில் ஏராளமாக மக்கள் செலவழித்து வருகிறார்கள்.  இதற்காகத்தான் அரசு, பணத்தை அச்சிடுவதை நிறுத்தி வைத்தது.சமயம் கிடைக்கும்போது பணத்தை செல்லாது என சொல்லிவிட்டு நான் வெளிநாட்டிற்கு போவது மூலம் நாடு நல்வழிக்கு திரும்பியுள்ளது.  எனக்கு விதிகள் தான் முக்கியம். நான் பொது மக்களோடு இணைந்துள்ளேன். முதலில் நாட்டைக் காப்பாற்றுவதுதான் முதல் பணி. பிறகுதான் எங்கள் சகோதர  குண்டர்கள் படை கிளம்பிட்ட பிரச்னைகளை சமாளிப்பது.  நம்முடைய தேசத்தில் தோமா தான் ராஜா. அவர் கூற்றுப்படி தர்மம்தான் முதலில் வழங்கப்பட வேண்டும். எனவே பல்வேறு ஒலைச்சுவடிகளில் இதைப்பற்றி படித்துள்ளதாக நாங்கள் தீவைத்து எரிக்கும் முன்னர் பண்டிதர்கள் கூறியதாக வன்முறை குழு 1 என்னிடம் தகவல் தெரிவித்தனர். எனவே, சாகும்போது ஒருவர் உண்மையை கூறியிரு

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.  அன்பரசு 22.8.2021 -

சிரச்சேதம் செய்யப்பட்ட மன்னர் சார்லஸ்! - யுனைடெட் கிங்டம்

படம்
  யுனைடெட் கிங்டம் இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. சுருக்கமாக, யுகே. இங்கிலாந்து என்றும் கூட கூறலாம். 1707ஆம் ஆண்டுதான் இங்கிலாந்திற்கு முதன்முதலில் யுனைடெட் கிங்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. மே 1 ஆம் தேதி வைக்கப்பட்ட இப்பெயருக்கு முக்கியமான காரணம் உண்டு. இந்த தேதியில்தான், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தோடு ஸ்காட்லாந்து நாட்டின் நாடாளுமன்றமும் இணைக்கப்பட்டது. இதற்கு ஆக்ட்ஸ் ஆப் யூனியன் என்று பெயர்.  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளும் 1706, 1707 என அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு கொள்கைகளை வெளியிட்டு நாடாளுமன்றத்தை ஒன்றாக இணைத்தன. 1603ஆம்ஆண்டு மார்ச் 24ஆம் தேதி, முதலாம் எலிசபெத் ராணி மறைந்தார். அந்த ஆண்டு முதலே இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளின் நாடாளுமன்றமும் இணைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.  எலிசபெத் ராணிக்கு குழந்தை இல்லை. எனவே, ஸ்காட்லாந்து நாட்டிலிருந்த அவரது சகோதரர் ஆறாம் ஜேம்ஸ் இங்கிலாந்து நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து என இரண்டு நாடுகளுக்கும் மன்னராக இருந்தார்.  1625ஆம் ஆண்டு ஜேம்ஸ் இறந்தபிறகு, அவரது

ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

படம்
  தி பவர் - வித்யுத் ஜாம்வால் தி பவர் மகேஷ் மஞ்ரேக்கர் காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை.  சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன.  கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது.  காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேரா போட்டு அவரது இடத்திற்க

தலைநகரான டெல்லியை சட்டங்களால் குதறும் மத்திய அரசு! - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊதாசீனப்படுத்தப்படும் வரலாற்று களங்கம்!

படம்
          ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்     மத்திய அரசு, மெல்ல தனது கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாநில உரிமைகள் மெல்ல பறிபோகத்தொடங்கியுள்ளன. இதில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலங்கள் கூட விதிவிலக்கின்றி அனைத்து சமாச்சாரங்களும் டெல்லி மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே பிரதமர் ஒரே நாடு என்று கூறும்படி பிற அதிகாரிகள், ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் கூட செல்லாக்காசு நிலைக்கு மாறி வருகிறார்கள்.   இதற்கு சாட்சிதான் அண்மையில் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இனி எந்த அதிகாரங்களும் இருக்காது. வகுப்பறையில் இருக்கும்போது பாத்ரூம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போலவே சாலை, கல்வி, மருத்துவம் என அனைத்து விஷயங்களூக்கும் ஆளுநரின் தலையசைப்பிற்கு யூனியன் பிரதேச முதல்வர் காத்திருக்க வேண்டி வரும்.  அதன் பொருள், இனிமேல் அங்கு தேர்தல் தேவையில்லை

எதிர்க்கட்சிகளை மிரட்டும் அமலாக்கத்துறை !

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள அமலாக்கத்துறை இன்று சிபிஐ யை விட சக்தி வாய்ந்த துறையாக மாறி வருகிறது. அப்படி என்ன ஆற்றல் உள்ளது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். சட்டங்கள்தான் அதற்கு சக்தி.... 2002 இல் அமலான பணமோசடி சட்டம் பிஎம்எல்ஏ இதில் ஒருவரை கைது செய்தால் அவர் வெளியே வருவது கடினம். இதில் விசாரணை அதிகாரி தன் அறிக்கையை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்ய முடியும். எஃப்எம்ஓஏ எனும் சட்டம், பொருளாதாரக்குற்றவாளியாக ஒருவரைக் கருதி குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தால், அவரின் சொத்துக்களை எப்பாடு பட்டாலும் பிற்பாடும் வாங்க முடியாது. 2005 முதல் 2019 வரை பிஎம்எல்ஏ சட்டத்தில் வழக்கு பதிவான 164 நபர்களில் வெறும் மூன்றே பேருக்கு மட்டுமே பெயில் கிடைத்துள்ளது. அதுவும் இரண்டு மாதங்களுக்கு குறைவாகத்தான். மற்றவர்களுக்கு சிறைதான் நிரந்தர வசிப்பிடம். பொதுவாகவே அமலாக்கத்துறையிடம் அசையும், அசையா சொத்துக்கள் சிக்கினால் திருப்பதி ஏழுமலையானின் உண்டியலில் அதை போட்டுவிட்டதாக மனசார நம்பலாம். வழக்கு போட்டு அதை மீட்பதற்குள் உங்களின் சட்டை கிழிந்து தலைமுடி உதிர்ந்து....

ஆண்களின் வன்முறைக்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான கலவரங்கள், வன்முறைகள் அனைத்திலும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்கு காரணம் என்ன? உலகமெங்கும் பெரும்பாலான சமூகங்களில் ஆண்களுக்கு அதிகாரம் கொடுத்து அப்படி வளர்ப்பதுதான் காரணம். பெண்களை வீட்டுவேலைகள், அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான பயிற்சிகளை கொடுத்து வளர்க்கிறார்கள். இதனால் குற்றச்செயல்களில் இயல்பாகவே ஆண்களின் பங்கு அதிகமாக இருக்கும். பரிணாமவளர்ச்சி காலகட்டத்தில் ஆண்கள் தங்களின் வலிமையை நிரூபித்தால்தான் பெண்களைப் பெறமுடியும். இதனால் வலிமை என்பது ஒருகாலத்தில் ஆண்களுக்கு சமூக அந்தஸ்தாக இருந்தது. இன்று அது வீடாக, ஐடி வேலையாக, சொத்து மதிப்பாக மாறியிருக்கிறது அவ்வளவுதான். அண்மையில் 63 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இளைஞர்கள் தங்கள் வயதிலுள்ள பெண்களை விட அதிக சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கியக்காரணம், பரிணாம  வளர்ச்சிதான். நன்றி: பிபிசி