கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

 








ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963.


பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம். 


அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக கவனித்து வந்தார். இருபதாம் நூற்றாண்டு கால ஜெர்மன் மக்களின் ஆளுமை, பழக்கவழக்கங்கள், சிந்தனை உலக நாட்டு மக்களைவிட வேறுவிதமாக இருந்தது. 1950ஆம் ஆண்டு, உளவியலாளர்களில் ஒருவரான தியோடர் அடோர்னோ, ஜெர்மன் நாட்டு மக்களின் வினோதமான மனநிலைதான் கொடூரமான செயல்களை செய்ய வைத்தது என்று கூறினார். 


விசாரணையின் ஐக்மன், எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றினேன் என்ற வாசகத்தையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறியதைக் கேள்விப்பட்ட ஸ்டான்லி, ஒரு மனிதனுக்கு இடப்பட்ட கட்டளை சரியா, தவறா என்று கூட தெரியாமல் நிறைவேற்றும் திறமை உண்டா? மேல்மட்ட உத்தரவு என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு அதை செய்துவிடுவானா? என்று யோசித்தார். அதிகாரம், அதற்கு கீழ்ப்படிவது என இரண்டையும் ஆய்வு செய்தார். உளவியலைப் பொறுத்தவரையில் இந்த ஆராய்ச்சி மிகவும் சர்ச்சையானதும், பரபரப்பான விவாதங்களை உருவாக்கியதுமாக அமைந்தது. 


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை எதிர்த்து பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூட்டணி அமைத்து போரிட்டன. இங்கு ஒருவர் நல்லவர், கெட்டவர் என்பதை விட குழுவாக உள்ளவர்கள் சொன்னதை கேட்டு கீழ்ப்படிவதா, அல்லது அதற்கு எதிராக சுயேச்சையாக நடந்துகொள்வதாக என்ற கருத்தே மக்களுக்கு இடையில் இருந்தது. வெளிப்படையாக சொன்னால் குழுவாக உள்ளவர்கள் சொல்லும் கருத்துகள் சரியாக இருக்கும் என்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடையாது. ஆனால் அப்படி கூறும்போது, தனிநபர் ஒருவர் தனது மனம் சொல்லும் கருத்து வேறாக இருந்தாலும் கூட அதை மறுத்து கும்பல் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். கும்பலாக சிலர் எடுக்கும் முடிவு அறமதிப்பீடு சார்ந்து தவறு என்ற உண்மை தனிநபர்களுக்கு தெரிகிறது. ஆனால் கூட அதை ஏற்கிறார்கள். இதன் அர்த்தம், அவர்கள் அதிகாரத்திற்கு அடிபணிகிறார்கள் அல்லது குழுவின் ஆதிக்கத்திற்கு கீழ்படிகிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். 


ஸ்டான்லி ஆதிக்கத்திற்கு கீழ்படியும் மனிதர்களின் மனநிலையை ஒரு சோதனை மூலம் அறிய நினைத்தார். பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து சோதனைக்கான ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சம்பளத்தொகையையும் வழங்கிவிட்டார். பிறகு வாங்கும் நிலையில் இருப்பார்களோ இல்லையோ என நினைத்திருக்கிறார். மனிதர்களுக்கு மின்சார அதிர்ச்சியை வழங்குவதுதான் சோதனை. பங்கேற்பாளர் ஒரு நாற்காலில் உட்காரவேண்டும். அவரது கையில் மின்சார வயர்கள் இணைக்கப்படும். அதிலிருந்து மின்சாரம் 300 வோல்ட் தொடங்கி 450 வாட் வரை பாயும். அதாவது ஒருவர் கேட்கும் கேள்விக்கு தவறான பதில் சொன்னால், பதில் சொல்ல மறுத்தால் அவருக்கு மின் அதிர்ச்சி அளவு அதிகரித்துக்கொண்டே போகும். சரியாக பதில் சொன்னால் ஊதியம் உயரும்.  


நாற்பது பங்கேற்பாளர்களும் மின்சார அதிர்ச்சி அளவை எளிதாக எதிர்கொண்டனர். ஆனால் அதில் ஐந்துபேர் மட்டும் இப்படி அதிகரிப்பது தவறு என்று கூறினர். மீதியுள்ளவர்கள் அனைவருமே மின்சாரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டதை, தாக்குதல் தவீரமானதை உணர்ந்தனர். ஆனால் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. இந்த சோதனையில் மின்சார அளவு அதிகரித்தபோது,பலரும் அலறத் தொடங்கினர். தங்களுக்கு கொடுத்த சம்பளத்தைக் கூட திரும்ப கொடுத்துவிடுவதாக கூறினர். ஆனால், அவர்கள் சோதனையில் இருந்து விலக அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், மின்சார அதிர்ச்சி காரணமாக சிலருக்கு வலிப்பு உருவானது. உடல், மனம் என இரண்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம்பேர். 

யேல் பல்கலைக்கழகத்தில் அதிகாரம், கீழ்படிந்த இயல்பு சோதனைகள் நடைபெற்றன. அன்றைய காலத்தில் அந்த பல்கலைக்கழகத்திற்கு நல்ல பெயரும் புகழும் இருந்ததால். சோதனை பற்றி பெரிதாக புகார் எழவில்லை. சோதனையில் பங்கேற்றவர்களுக்கும் சம்பளம் அதிகரித்து வழங்கப்பட்டது. சோதனையில் பங்கேற்பவர்களும் ஊதியத்திற்காக அதில் பங்கேற்க முன்வந்தனர். மின்சார அதிர்ச்சி காரணமாக வலியை சந்தித்தாலும் கூட உயிருக்கு ஆபத்தில்லை என நிம்மதி அடைந்தனர். 


அதிகாரம் இல்லாத எளிய மனிதர்கள் கூட கடுமையான அழுத்தங்களை சந்திக்கும்போது அதுவரையிலும் செய்யாத, நினைத்தே பார்க்க முடியாத கொடூரங்களை செய்யத் தயாராகி விடுகிறார்கள். முடிவெடுக்கத் தெரியாத, பொறுப்பை சுமக்க விரும்பாத தனிநபர்கள், ஒரு குழுவில் இணைந்துவிடுகிறார்கள். குழுவைப் பொறுத்தவரை கட்டளைகள் மேலே உள்ளவர்களால் பிறப்பிக்கப்படுகிறது.அதை குழுக்கள் பின்பற்றினாலே போதும். இதில் குழுக்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஒருவகையில் இப்படி கட்டளைகளை உடனே பின்பற்றி நடப்பவர்களால் உற்பத்தித்திறன் கூடுகிறது. அதாவது, பெரும் திரளான மக்கள் அதை பின்பற்றும்போது... என ஸ்டான்லி கூறினார். 


இவரது ஆய்வறிக்கை வெளியானபோது உளவியல் உலகில் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. உளவியல் சங்கத்தில் ஸ்டான்லியின் உறுப்பினர் அங்கீகாரம் பறிக்கப்பட்டது. பிறகு சிலகாலம் கழித்து அதை வழங்கினர். 1947ஆம் ஆண்டு, ஒபீடியன்ஸ் டு அத்தாரிட்டி என்ற நூலை ஸ்டான்லி எழுதி வெளியிட்டார். இந்த நூல் அந்த ஆண்டிற்கான சமூக உளவியலுக்கான பரிசை வென்றது. 


வடக்கு அமெரிக்கா,ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றில் அதிகாரத்திற்கு பணிந்துசெல்லும் இயல்பு உள்ளது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய பகுதிகளில் அதிகாரத்திற்கு பணியும் தன்மை குறைவாகவே உள்ளது என ஸ்டான்லி கண்டறிந்தார். மக்கள் சட்டங்களுக்கு பணிந்தால்தான் நாட்டுக்கு அதிகாரத்திற்கு பயன் உண்டு. எனவே, சர்வாதிகார நாடுகளில் கூட கொடூரமான செயல்களை செய்ய முறைப்படியான சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். யாராவது கேட்டால்கூட எங்கள் நாட்டு சட்டம் என்று கூறிவிடலாம். யாரும் உள்ளே வந்து தலையிடமுடியாது. மனித உரிமை மீறல்களை, மதவாத படுகொலைகளை எளிதாக செய்யலாம். அதையும் கேள்விகேட்டால் இறையாண்மை, தேசப்பற்று என பஜனை பாட மாட்டு மூளைக்கூட்டத்தை பயன்படுத்தலாம். 


மனிதர்கள் செய்த குற்றங்களை அடையாளம் காண அவனது குணநலன்களைப் பார்த்தால் போதும் என நீதிமன்றம் கருதியது. ஸ்டான்லி, ஒருவனை தவறான செயல்களை செய்யவைக்க சூழல்களே முக்கியமான காரணம். எனவே, சூழல்களை கவனித்து ஒருவரை புரிந்துகொள்ளமுடியும் என்று கருத்து கூறினார். அவர் அதைக் கூறிய சமயத்தில், அக்கருந்துக்கு கடுமையான விமர்சனங்கள், கண்டனங்கள் எழுதினர். 


நாஜிப்படையினருக்கும் சாதாரண மக்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆனால், அப்படியான மக்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால், அவர்கள் பிறரை அழித்தொழிக்கத் தொடங்குகிறார்கள். இதில் நாஜிக்கும் பிற மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. உளவியலாளர் மெல்வின், மனிதர்களின் இருள் பக்கங்களை பகிரங்கமாக்கி வெளியில் காட்டினார். அதுவே அவரது ஆய்வறிக்கையை படித்த மக்களை வெருட்டியது. பீதிக்குள்ளாக்கியது. கடுமையாக விவாதம் செய்ய  வைத்தது. இன்றுவரையிலும் கூட ஸ்டாலினின் கருத்துகளை சிக்கலான அழுத்தமான சூழ்நிலைகள் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றன. 


சைக்காலஜி புக் - டிகே புக்ஸ் 

Born(1933-08-15)August 15, 1933
The Bronx, New York City, U.S.
DiedDecember 20, 1984(1984-12-20) (aged 51)
Manhattan, New York City, U.S.
EducationQueens College, New York (B.A., Political Science, 1954)
Harvard University (Ph.D., Social Psychology, 1960)


கருத்துகள்