தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

 







Mary ainsworth


1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன. 


வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார். 


அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். குழந்தை முன்பைப் போலவே விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த அறைக்கு அந்நியர் ஒருவர் வருகிறார். இப்போது, குழந்தையின் தாய் அங்கிருந்து வெளியேறுகிறார். இப்போது குழந்தை என்ன மாதிரியான எதிர்வினைகளைக் காட்டுகிறது என மதிப்பிட்டனர். 


அம்மா அருகில் இருந்தாலும், திடீரென அந்நியர் உள்ளே நுழையும்போது குழந்தை மனதளவில் பதற்றம் கொள்கிறது. தனது பாதுகாப்பிற்கு அம்மாவின் துணையை, அருகாமையை நாடுகிறது. இதை பதற்றம் தவிர்க்கும் மனநிலை எனலாம். இதற்கு, மாறாக அம்மா அறையில் இருந்து வெளியேறுவதைப் பார்க்கும் குழந்தை பதற்றம் அடையாமல் விளையாடுகிறது. கோபம் வந்தாலும் கூட அதைக் கட்டுப்படுத்தியபடி அம்மாவின் வருகையைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறது என்றால் அது பதற்ற எதிர்ப்பு மனநிலை என மேரி அடையாளம் கண்டார். 


மேரியின் வினோத சூழ்நிலை கோட்பாடு, மாறிக்கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது. அதை நிலையானதாக கொள்ளமுடியாது என உளவியலாளர்கள் விமர்சனம் செய்தனர். ஆனாலும் கூட இந்த கோட்பாடு, இன்றும் பெற்றோர் குழந்தை வளர்ப்பு முறையில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேதான் உள்ளது. 


அமெரிக்காவில் உள்ள ஓஹியோவின் கிளென்டேலாவில் பிறந்தார். ஐந்து வயதில் கனடாவிற்கு இடம்பெயர்ந்தார். 1939ஆம் ஆண்டு டொரன்டோ பல்கலையில் உளவியல் பட்டம் பெற்றார். 1942ஆம் ஆண்டு கனடா ராணுவத்தின் பெண்கள் படையில் இணைந்தார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு டொரன்டோ பல்கலைக்கழகத்திற்கு திரும்பினார். லியோனார்ட் ஐன்ஸ்வொர்த் என்பவரை மணந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு, டவிஸ்டாக் கிளினிக்கில் ஜான் பௌல்பை என்ற உளவியலாளரோடு இணைந்து பணியாற்றினார். 


1954ஆம் ஆண்டு, மேரியின் கணவருக்கு உகாண்டாவில் வேலை கிடைத்தது. எனவே, தம்பதிகள் அங்கு இடம்பெயர்ந்தனர். மேரி, அங்கு தாய் குழந்தை உறவு பழங்குடி மக்களிடையே எப்படி உள்ளது என ஆய்வு செய்தார். 1956ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பியவர், பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1974ஆம் ஆண்டு வரை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக செயல்பட்டார். 


முக்கிய படைப்புகள் 



1967 இன்ஃபேன்சி இன் உகாண்டா

1971 இன்ஃபேன்ட் ஒப்பீடியன்ஸ் அண்ட் மேட்டர்னல் பிஹேவியர்

1978 பேட்டர்ன்ஸ் ஆஃப் அட்டாச்மென்ட்

Mary Dinsmore Ainsworth (née Salter; December 1, 1913 – March 21, 1999) was an American-Canadian developmental psychologist known for her work in the development of the attachment theory. She designed the strange situation procedure to observe early emotional attachment between a child and ... Wikipedia

கருத்துகள்