இடுகைகள்

சிலிகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவியியல் சொற்கள்! - சிலிகா பாறை, கடல் படுகை, இயக்கநிலை எரிமலை, அமில கழிவுநீர்

படம்
  Acidic Rock அதிகளவு சிலிகா கொண்டுள்ள பாறை. எடு. கிரானைட் (Granite), ரியோலைட் (Rhyolite) Accumulation Zone பனிமலையின் மேற்பகுதி. அதிகளவு பனி குவியும் இடம் என்று கூறலாம். இதன் கீழ்ப்பகுதிக்கு அபிளேஷன் ஜோன் (Ablation zone)என்று பெயர்.  Accretionary Wedge கடல் படுகை, கண்டத்தட்டு ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வண்டல் மண் பகுதி.  Active Volcano தற்போது இயக்கநிலையில் உள்ள எரிமலையைக் குறிக்கிறது Acid Mine Drainage (AMD) சுரங்கப்பணிகளின்போது அதிலிருந்து வெளிவரும் அமில கழிவுநீர். சுரங்கப்பணியின் போது, சல்பைடு கனிமங்கள் ஆக்சிஜனோடு வினைபுரிந்து அமில கழிவு நீர் உருவாகிறது. 

நிலவில் சுரங்கம்!

படம்
  நிலவில் சுரங்கம் நிலவில் கால்வைத்து சாதனை செய்து இன்று சூரியன் வரை ஆராய சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் நிலவு மீதான ஆராய்ச்சி மோகம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. நிலவில் நமக்குத் தேவையான என்ன விஷயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம்.  சிலிகான் நாம் பயன்படுத்தும் போன் திரை முதற்கொண்டு பயன்படும் முக்கியமான வேதிப்பொருள். நிலவில் கிடைக்கும் தூசி துப்புகளை தட்டியெடுத்து சுத்திகரித்தால் சிலிகான் பிரச்னை தீர்ந்துவிடும். இதனைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை தயாரித்து ஆற்றலைப் பெருக்கலாம்.  அரிய உலோகங்கள் பூமியில் நாம் சுரங்கங்கள் மூலம் சிரமப்பட்டு பெறுவது 17 அரிய உலோகங்கள். இவைதான் போன் முதல் பேட்டரி வரை நாம் பயன்படுத்த உதவுகின்றன. பாஸ்பரஸ் முதல் பொட்டாசியம் வரை நிலவில் கிடைப்பது உறுதியானால், அங்கேயே சென்று தங்குவது சுலபம். பிளாட்டினம் வகையறா உலோகங்கள் கிடைத்தால் ஃபேஸ்மேக்கர் கருவிகளை செய்வது எளிதாகிவிடும்.  நீர் பூமியில் குறைந்து வரும் நீர், நிலவின் துருவப்பகுதிகளில் உள்ளது. 2.9 பில்லியன் மெட்ரிக் டன்கள் நீர், கிடைத்தால் குடிநீராகவும், விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இதிலிர

வளைவான கண்ணாடியை எப்படி உருவாக்குகிறார்கள்?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி கண்ணாடியை எப்படி வளைத்து அழகாக மாற்றுகிறார்கள்? அனைத்துக்கும் சிலிகா மூலக்கூறுகள்தான் காரணம். அதனை 700 டிகிரி செல்சியஸிற்கு வளைத்து கண்ணாடியை வளைவாக தயாரிக்கிறார்கள். மிகவும் கவனமாக வேலை செய்துதான் இந்த வகை கண்ணாடியை உருவாக்குகிறார்கள். கால்சியம் கார்பனேட், சோப்பு ஆகியவற்றைப் போட்டு இதனை துடைத்து மெருகேற்றுகிறார்கள். நன்றி - பிபிசி

சிலிகாவை சாப்பிட்டால் என்னாகும்?

படம்
சிலிகா பாக்கெட்டுகள் (க்யூரியாசிட்டி) மாத்திரைகள் தன்மை மாறிவிடாமல் இருக்க அதில் சில வேதிப்பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை போட்டு இருப்பார்கள்.அதுதான் சிலிகா. இந்த சிலிகா பாக்கெட்டுகளை பீட்சாவுக்கு கொடுக்கும் மிளகு  போல நினைத்து தின்றால் என்னாகும்? தொண்டை வறண்டுவிடும். கண்களில் ஈரப்பதம் குறையும். வயிற்றில் கல்யாண பாத்திர வாடகைக் கடை போல சத்தங்கள் எழும். தன் எடையை விட நாற்பது மடங்கு அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது சிலிகா. பாக்கெட்டில் இருப்பது சிலிகா டை ஆக்சைடு. அதில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. மாத்திரைகளின் ஈரத்தை குறைத்து அதன் தன்மை மாறாமல் வைத்திருக்கும் சிலிகாவை திரும்ப பயன்படுத்த 300 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சூடுபடுத்தவேண்டும்.  நம் உடலிலுள்ள அத்தனை நீரையும் சிலிகா உறிஞ்ச 58 ஆயிரம் சிலிகா பாக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டும். நன்றி: க்யூரியாசிட்டி.