இடுகைகள்

அலாஸ்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலாஸ்காவில் தனியே வாழ்ந்த மனிதர்!

படம்
  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, டிக் புரோனெக்கே அலாஸ்காவுக்கு வந்தார். அங்கு தனது கையால் தானே கேபின் போன்ற அளவில் வீட்டைக் கட்டினார். அதோடு இல்லாமல் அங்கேயே முப்பது ஆண்டுகளாக தங்கிவிட்டார். 50 வயதில் பார்த்துக்கொண்டிருந்த மெக்கானிக் வேலையைக் கைவிட்டார்.  அலாஸ்காவின் இயற்கை அழகைப் பார்த்துவிட்டு இங்கேயே வந்து தங்கிவிட்டார். 1916ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐயோவாவில் பிறந்தவரின் தந்தை தச்சுவேலைகளை செய்பவர், அம்மா தோட்ட வேலைகளில் நிபுணர். இந்த இரண்டு அம்சங்களுமே அலாஸ்காவில் வீட்டைக் கட்டுவதற்கு டிம்முக்கு உதவியது. டிம்மின் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.  பள்ளிக்கு பெற்றோர் ஆசையாக அனுப்பினாலும் இரண்டே ஆண்டுகளில் பள்ளி வேண்டாம் என்று திரும்பி வந்தவர், தங்களது பண்ணையில் வேலை செய்யத் தொடங்கினார். வேலை நேரம் போக ஹார்ட்லி டேவிட்சன் பைக்கை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு சென்று சுற்றிக்கொண்டிருப்பார். பியர்ல் துறைமுகம் தாக்குதலால் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து ஜப்பானுக்கு எதிராக போரிட்டார்.  பிறகு சான் பிரான்சிஸ்கோ வந்தவருக்கு உடல்நலம் கெட்டது. மருத்துவமனை சிகிச்சை முடித்