இடுகைகள்

அறுவை சிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்- எடை குறைப்பு எனும் பெரும் வணிகம்

படம்
  உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பதற்கு மக்கள் இன்னதான் செய்வது என்றில்லாமல் மாத்திரை, அறுவை சிகிச்சை மூலம் குடலை சுருக்குவது, உடற்பயிற்சி என ஏராளமான முயற்சிகளை செய்துவருகிறார்கள். ஆனாலும், உடல் எடை பற்றிய அதீத அக்கறை தீரவே இல்லை. ஜிம்கள் பலவும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம் என்று சொல்லித்தான் மாதசந்தா சேகரித்து வருகிறார்கள். உடல் எடை அதிகரித்ததில், வரலாறு, தொழில்நுட்ப முன்னேற்றம், நாகரிகம் என பல்வேறு விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒல்லியாக ஒருவர் இருக்க முயல்வது புதிதானதல்ல. கிரேக்க கடவுள்கள், விக்டோரியா கால மனிதர்களை கட்டான உடல் வடிவத்திற்கு உதாரணமாக கூறுவார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டம் கையில் கிடைத்த உணவுப்பொருட்களை மக்கள் சாப்பிடத் தொடங்கினர். அப்படியான நெருக்கடியான காலகட்டத்திற்குப் பிறகுதான், உடல் பருமன் பிரச்னை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்கப்படத் தொடங்கின. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பல்வேறு இடங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்களைக் காசு போட்டுப் பெறும் விற்பனை இயந்திரங்கள் வைக்க

உடலை நேர்த்தியாக்கிக்கொள்ள முயலும் இளைஞர்கள்! பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் அதிகரிக்கிறதா?

படம்
  கண் இமை திருத்த சிகிச்சை வஜினா மறுகட்டமைப்பு சிகிச்சை ஹைமெனோ பிளாஸ்டி  காஸ்மெட்டிக் மேக் ஓவர்- உடலை அறுவை சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள அலைபாயும் இளைஞர்கள்.   இன்று ஒருவர் வேலைக்கு சேர வேண்டுமெனில் நிறுவனங்களில் சில அவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும் கேட்கிறார்கள். இந்த வகையில், தங்களின் புகைப்படத்தை பிறர் பார்க்கும்போது கண் புருவம் சரியாக இருக்கவேண்டும். டிஷர்ட் அணிந்தால் மார்பகங்கள் நல்ல பருத்த வடிவத்தில் தெரியவேண்டும். எந்த போஸிலும் மூக்கு அழகாக இருக்கவேண்டும். பேண்ட் அணிந்தால் பெண்குறி புடைப்பாக அதன் வடிவம் வெளியே தெரிவது போல இருக்க கூடாது என பெண்களும், ஆண்கள் தங்கள் வயிற்றை பாளம் பாளமாக வெடித்த வயல்போல கட்டாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல், மனம் பற்றி நிறுவனத்தினர் தவறாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ன இன்று அதிகம் கவலைப்படுகிறவர்கள் உருவாகிவிட்டனர். மூக்கின் வளர்ச்சி பெண்களுக்கு பதினாறு வயதிலும் ஆண்களுக்கு பதினெட்டு வயதிலும் முழுமை பெறுகிறது. இந்த வயதிற்குள் மூக்கின் அமைப்பை மாற்றி அமைத்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். இதைப்பற்றி மருத்துவர்கள் எடுத

தெரிஞ்சுக்கோ - செக்லிஸ்டுகளால் என்ன பிரயோஜனம்?

படம்
தெரிஞ்சுக்கோ! நைரோபியில் ஓர் மருத்துவமனை. நோயாளியின் மூளையிலுள்ள ரத்தக்கட்டியை அகற்றும் அறுவைசிகிச்சை. ஆபரேஷன் சக்சஸ். அப்போதுதான் தெரிந்தது. அந்த ஆபரேஷனை செய்யவேண்டிய ஆள் மாறிய கதை. ஆம். இங்குதான் மனிதர்களின் மறதியின் கதை தொடங்குகிறது; செக் லிஸ்டுகளின் அருமையும் கூடத்தான். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் செக் லிஸ்டுகளை மருத்துவர்கள் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்படி, 2000 இல், அதுல் கவாண்டே என்ற ஆராய்ச்சியாளர் மருத்துவர்கள், தாதியர் கவனிக்கவேண்டிய செக் லிஸ்ட ஒன்றை தயாரித்தார். இது முழுக்க அறுவைசிகிச்சை செய்யும்முன்பு அவர்கள் சரிபார்க்கவேண்டிய விஷயம். இதில் 20 விஷயங்கள் இருந்தன. இது மருத்துவர்களுக்கு மட்டுமல்ல அண்ணாச்சி கடையில் சம்சாரம் ஏதோ வாங்கச்சொன்னாளே என்ன இது தலையைப் பிய்த்துக்கொள்பவர்களுக்கும்தான். இதுபற்றி அதுல் கவாண்டே, 2009 இல் தி செக்லிஸ்ட் மானிஃபெஸ்டோ என்ற நூலை எழுதினார். செக்லிஸ்டுகளை எத்தனை பக்கம் இருக்கலாம். ம்ஹூம் பக்கங்கள் எல்லாம் கிடையாது. ஒருபக்கம்தான் அதிகபட்சம் கூட. என்ன செய்யலாம், படிக்கவேண்டியது என இரண்டுவகையாக லிஸ்டுகளைத் தயாரிக