இடுகைகள்

வங்கி மோசடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோல்மாடல் பெண்கள் வீழ்ந்த கதை!

படம்
ஷிகா சர்மா, பின்னால் சாந்தா கோச்சார் ரோல்மாடல் பெண்கள் ? ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சார் , ஆக்சிஸ் வங்கியின் ஷிகா சர்மா வங்கித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய பெண்கள் என்பதோடு வலிமையான தலைவர்களாகவும் வலம் வந்தனர் . சாந்தா கோச்சார் முறைகேடாக வீடியோகான் நிறுவனத்திற்கு பணம் கடன்கொடுத்தும் , ஷிகா ஆக்சிஸ் வங்கியை நஷ்டப்படுத்திய விவகாரத்திலும் தம் செல்வாக்கையும் புகழையும் இழந்துள்ளனர் . ஜம்னாலால் பஜாஜ் வணிக மேலாண்மை நிர்வாகத்தில் படித்த சாந்தா கோச்சார் ராஜஸ்தான் , மும்பையில் வளர்ந்தவர் . 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்ற சாந்தா , வணிகப்ள்ளியில் சந்தித்த தீபக் கோச்சாரை மணந்தார் .1984 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் வணிகமேலாண்மை ட்ரெய்னியாக இணைந்தவர் ஷிகா சர்மாவை ஓரங்கட்டி தலைவர் , நிர்வாக இயக்குநராக பதவியேற்றார் . ராணுவத்தந்தையின் மகளாக பிறந்த ஷிகா சர்மா , ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர் . 1980 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் வாழ்வை தொடங்கினார் . சாந்தாகோச்சார் இயக்குநரான பின் ஐசிஐசிஐயிலிருந்து விலகி 2009 இல் யுடிஐ வங்கியில் இணைந்தார் . பின்னர் ஆக்சி