இடுகைகள்

வெளிப்படைத்தன்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களுக்காக உருவான சட்டத்தை மக்கள் தங்களை உயிரைக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்! - நிகில் தே, ஆர்டிஐ செயற்பாட்டாளர்

படம்
                  தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் செயல்பாட்டையே மாற்றியது நிகில் தே அனுபமா கடகம் பிரன்ட்லைன்    15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே முக்கியமானது . ஆனால் அண்மைய காலங்களில் மெல்ல அச்சட்டம் முடக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இதற்கான முயற்சிகள் 30 ஆண்டுகளாக இருந்ததால் ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்தது . ஏராளமான போராட்டங்கள் , பேரணிகள் என மக்கள் போராடியதால்தான் இச்சட்டம் நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது . இதனை மக்களுக்கான சட்டம் என்று கூட சொல்லலாம் . எனவேதான் நாடு முழுக்க பரவலாக பயன்பட்டு வருகிறது . இந்த சட்டத்தின் வெளிப்படைத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வலிமையைக் குறைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன . முதலில் சட்டத்தை அமலாக்க போராடிய செயல்பாட்டாளர்கள் இப்போது அதனை நீர்த்துப்போகாமல் பாதுகாக்க போராடவேண்டியுள்ளது . இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை தினசரி எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக