இடுகைகள்

மாஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது!

படம்
மருத்துவர் முத்து செல்ல குமார்.   கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது! இன்று கோவிட் 19 நோய் பாதிப்பு பல நாட்டு மக்களுக்கும்  வேகமாக பரவி,  உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளைத்  தனிமைப்படுத்தி கண்காணித்து சிகிச்சைகளை வழங்கும் பணிகளை உலக நாடுகள்  செய்யத் தொடங்கி வருகின்றன. வைரஸ் பாதிப்பு, அதன் சோதனைகள், சூழல் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வதந்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி மருத்துவரும், பேராசிரியருமான முத்து செல்ல குமாரிடம் பேசினோம்.  "கோவிட் - 19 நோய் பாதிப்பு உருவாக்கும் வைரஸிற்கு சார்ஸ் கோவி 2 (SARS Cov2) என பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா என பிரித்து வகைப்படுத்தியுள்ளனர்.  இவற்றின் புரத அமைப்பு, செயல்பாடு பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் உறுதிப்படுத்தும் சோதனை இருமுறை செய்யப்படுகிறது.  இரண்டாம் முறை செய்யும் சோதனையில்,  வைரஸ் தொற்றை உறுதிப்படுத்துவார்கள். பெரும்பாலும் இதில் தவறு நேருவதில்லை.  வைரஸ்களை முற்றிலும் ஒழிக்கவென பொதுவாக எந்த மருந்துகளும் கிடையாது. அதனை அழிக்க, உற