இடுகைகள்

முன்முடிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முன்முடிவுகளின்றி வாழ்க்கையை வாழ்ந்தாலே ஆனந்தம்தான்!

படம்
  பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனநல குறைபாடு என்பது சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை. அதனை எதிர்மறையாகவே மருத்துவர்களும், மக்களும் புரிந்துகொண்டனர். அதைப்பற்றி பேசியும், எழுதியும் வந்தனர். மனநல குறைபாடு என்றால் இதுதான் என்று  வரையறைகளும், அதை தீர்ப்பதற்கான முறைகளும் கூறப்பட்டன.  மனிதர்களுக்கு ஏற்படும் மனநல குறைபாடு என்பது பன்மைத்தன்மையானது. அதை குறிப்பிட்ட இறுக்கமான வரையறைக்குள் அடைப்பது சரியானது அல்ல என்ற கருத்தை அமெரிக்க உளவியலாளரான கார்ல் ரோஜர்ஸ் கொண்டிருந்தார். மனநிலையை குறிப்பிட்ட வரையறைக்குள் அடைப்பதை அவர் ஏற்கவில்லை. நல்ல மனநிலையை ஒருவர் அடைவதற்கு குறிப்பிட்ட செயல்நிலைகள் கிடையாது என கூறினார். வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நடந்துகொண்டே இருக்கிறது. நாமும் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். அதன் வழியாக அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே உள்ளது. எனவே, மனநிலை சீர்கெட்டு உள்ளதாகவும், அதை ஒருவர் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதையும் ரோஜர்ஸ் ஏற்கவில்லை.  நல்ல வாழ்க்கையை ஒருவர் வாழ அவர் புதிய அனுபவங்களுக்கு தனது மனதை திறந்து வைக்க தயாராக இருக்கவேண்டும். நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய

முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி புதிதாக தொடங்கலாமா? புதிய ஆண்டிற்கான தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்? புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால் சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய   ஒன்றா?   புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு அமையுமா?   புத்தாண்டு, புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா, இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா?   அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா? புதிதாக ஏதேனும் இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான் பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை செய்யவேண்டும்.   புதிய செயல்களை செய்யும்போது மூளை அதன் முன்முடிவுகள், தீர்ப்புகள், கருத்துகள்,

காதலனைப் பள்ளித்தோழியோடு சேர்த்து கல்யாணம் செய்து வைக்கும் காதலி! தி வெட்டிங் அன்பிளானர்

படம்
  தி வெட்டிங் அன்பிளானர் மெரினா, கார்லோஸின் அட்டகாச நடனம் தி வெட்டிங் அன்பிளானர்   மெரினா சிறுவயதாக இருக்கும்போதே அவளது பெற்றோர் விவகாரத்து பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு மெரினாவின் அப்பா, தனது வீட்டுக்கு அருகில் உள்ள பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது காரணமாக அமைகிறது. காதல் என்பது பைத்தியக்காரத்தனம் என அப்பா போகும்போது சொல்லும் வார்த்தை மெரினாவின் மனதில் பதிகிறது. எனவே, அவள் ஆண் தோழன் என யாரையும் ஏற்பதில்லை. திருமணமும் செய்யக்கூடாது என முடிவாக இருக்கிறாள். அவளது வாழ்க்கையில் வரும் கார்லோஸ் என்பவன் ஏற்படுத்தும் பிரச்னைகள், அதன் விளைவுகள்தான் கதை. இரண்டு பெண்கள் ஒரு ஆண் என அடிப்படையில் முக்கோண காதல் கதைதான். படத்தில் சுவாரசியமாக இருப்பது மெரினாவின் குணங்கள் பற்றி மெல்ல பார்வையாளர்களான நமக்குத் தெரிய வருவதுதான். இந்த வகையில் அவர் தனக்கு பிடித்த விஷயங்களை அவ்வளவு எளிதாக பிறருக்கு விட்டுக்கொடுப்பவர் அல்ல. தன்னை அவமானப்படுத்தியவர்களை காலம் கடந்தும் வாய்ப்புகள் அமையும்போது பழிவாங்குகிறார். இதில், அவள் நேசிக்கும் காதலன் கூட உண்டு என்பதுதான் வினோதம். மெரினா, காதலே வாழ்க்கையில் நுழைய விடாமல

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட