இடுகைகள்

விக்கிப்பீடியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா

படம்
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள்  மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும். இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவ...

விக்கிப்பீடியா சாதித்த கதை!

படம்
விக்கிப்பீடியா கூகுளின் யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் போலிச்செய்தி, தவறான செய்திகள், விதிமீறல், வணிகப்போட்டி காரணமாக சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதே நேரத்தில்தான் விக்கிப்பீடியா தன்னார்வலர்களின் பங்களிப்பால் நிதானமாக வளர்ந்து வருகிறது. தவறான தகவல்கள் குறித்து சில முறைப்பாடுகள் இருந்தாலும் நிதானமாக அவற்றைச் சரிசெய்து வளரும் விக்கிப்பீடியா கட்டற்ற அறிவுக்கான ஊற்றாக விளங்குகிறது. இன்று எதுபற்றியும் விக்கிப்பீடியாவைப் பாரேன் என்று சொல்லுமளவு இத்தளம் முன்னேறியுள்ளது. இதுபற்றிய டேட்டா உங்களுக்காக.... 1930 ஆம் ஆண்டு ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஹெர்பர்ட் வெல்ஸ் மற்றும் பால் ஆட்லெட் ஆகியோர் மனிதர்களின் அறிவை தொகுத்து என்சைக்ளோபீடியா ஒன்றை தயாரிக்க நினைத்தனர். 1993 ஆம் ஆண்டு இன்டர்நெட் வல்லுநர் ரிக் கேட்ஸ், இலவசமாக கட்டற்ற கலைக்களஞ்சியம் தேவை என்றனு கூறினார். இதன் பெயராக இன்டர்பீடியா என்று பரிந்துரைத்தார். 1995 ஆம்ஆண்டு  வார்டு கன்னிங்காம் முதல் விக்கி பீடியாவை உருவாக்கினார்.  ஹவாய் மொழி வார்த்தையான குயிக் என்பதிலிருந்து இது உருவானது. ஆப்பிளின் ஹைபர் ...