விக்கிப்பீடியா சாதித்த கதை!




i dread to think where i would be without wikipedia.


விக்கிப்பீடியா

கூகுளின் யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் போலிச்செய்தி, தவறான செய்திகள், விதிமீறல், வணிகப்போட்டி காரணமாக சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதே நேரத்தில்தான் விக்கிப்பீடியா தன்னார்வலர்களின் பங்களிப்பால் நிதானமாக வளர்ந்து வருகிறது.

தவறான தகவல்கள் குறித்து சில முறைப்பாடுகள் இருந்தாலும் நிதானமாக அவற்றைச் சரிசெய்து வளரும் விக்கிப்பீடியா கட்டற்ற அறிவுக்கான ஊற்றாக விளங்குகிறது.

இன்று எதுபற்றியும் விக்கிப்பீடியாவைப் பாரேன் என்று சொல்லுமளவு இத்தளம் முன்னேறியுள்ளது. இதுபற்றிய டேட்டா உங்களுக்காக....

1930 ஆம் ஆண்டு ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஹெர்பர்ட் வெல்ஸ் மற்றும் பால் ஆட்லெட் ஆகியோர் மனிதர்களின் அறிவை தொகுத்து என்சைக்ளோபீடியா ஒன்றை தயாரிக்க நினைத்தனர்.

1993 ஆம் ஆண்டு இன்டர்நெட் வல்லுநர் ரிக் கேட்ஸ், இலவசமாக கட்டற்ற கலைக்களஞ்சியம் தேவை என்றனு கூறினார். இதன் பெயராக இன்டர்பீடியா என்று பரிந்துரைத்தார்.

1995 ஆம்ஆண்டு  வார்டு கன்னிங்காம் முதல் விக்கி பீடியாவை உருவாக்கினார்.  ஹவாய் மொழி வார்த்தையான குயிக் என்பதிலிருந்து இது உருவானது. ஆப்பிளின் ஹைபர் கார்டு எனும் புரோகிராமிங் மொழியிலிருந்து உருவானது ஊக்கம்  பெற்றார் வார்டு.

2001 ஆம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபர் லாரி சாண்டர்ஸ் மற்றும் ஜிம்மி வேல்ஸ் ஆகியோர் விக்கிப்பீடியா .காம் மற்றும் விக்கிப்பீடியா .ஆர்க் என இருதளங்களையும் பதிவு செய்துவைத்தனர்.

2005 ஆம் ஆண்டு நேச்சர் இதழில் விக்கிப்பீடியாவின் தகவல்கள் பிரிட்டானியா தளத்தினைப் போல நம்பிக்கையானவை என கட்டுரை மற்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியானது.

2007 ஆம் ஆண்டு விக்கிப்பீடியா இருபது லட்சம் கட்டுரைகளை தொட்டது. இது சீனாவில் உருவான யோங்கில் எனும் கலைக்களஞ்சியத்தையும் மிஞ்சியது. இதில் 600 ஆண்டுகளாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.

2013 ஆம் ஆண்டு விக்கிப்பீடியாவிலிருந்து தன்னார்வலர்கள் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினர். 2019 ஆம் ஆண்டு தகவல்களை தொகுக்கும் பணி தொடர்பான சர்ச்சையை விக்கிப்பீடியா சந்தித்து மீண்டது.

நன்றி: க்வார்ட்ஸ்