மடியும் தொழிலாளர்களை பண்டிகூட் காப்பாற்றுமா?
மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மற்றும் பாதாளச்சாக்கடைகளை தூர்வாரும் தொழிலாளர்கள் பலரும் இன்றுவரையும் இறந்து வருகின்றனர். அரசு அவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டைக் கூட நிறுத்தி வைத்து அவர்களை மானத்தை சோதித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கழிவகற்றும் தொழிலாளர்கள் இறந்துள்ள எண்ணிக்கை 203(1995 முதல்)
கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 144.
அதிகாரப்பூர்வமாக அரசு கூறும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 334
கழிவகற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ள கார்ப்பரேஷன்கள் - தூத்துக்குடி (1), கும்பகோணம் (1)
இந்த வரிசையில் கோவை இரண்டு இயந்திரங்களை வாங்கவிருக்கிறது.
கேரளத்தைச் சேர்ந்த ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் பண்டிகூட் எனும் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. ஐந்து பணியாளர்களின் பணிகளை ஒரே இயந்திரம் ஐந்து நிமிடங்களில் செய்துவிடும். ஒரே வாரத்தில் 400 பாதாளச்சாக்கடைகளை சுத்தம் செய்யும் திறன்பெற்ற இயந்திரம் இது. இப்போது இயந்திரங்களை இயக்க பயிற்சியளித்து வருகிறோம் என்கிறார் கும்பகோணம் துணை ஆட்சியரான பிரதீப் குமார்.
பண்டிகூட் இயந்திரத்தின் விலை 14 முதல் 16 லட்சம் ஆகும். இதற்கான செலவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்குகிறது. தனது சமூகச்சேவை திட்டத்திற்காக இதனை மேற்கொண்டு வருகிறது. என்கிறார் ஜென் ரோபோட்டிக்ஸ் நிறுவனரான அருண் ஜார்ஜ்.
நன்றி: மம்தா. ஏ- (டைம்ஸ்)