சிட்அப்ஸ் பயிற்சி எதற்கு?
சிட்அப்ஸ் பயிற்சிகளை சலிப்பூட்டும் பயிற்சிகளாக பலரும் நினைக்கலாம். இதனை பத்து வடிவங்களில் செய்யலாம். வயிற்றுத் தசைகளை அழகாக்கும் இப்பயிற்சி, உடல் எடையை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
தினசரி சிட் அப்ஸை மட்டுமே செய்தால் உங்கள் உடல் கட்டுடலாக மாறாது. இப்பயிற்சி, உங்களின் தசைகளை அழகானதாக மாற்றி வலிமையைக் கூட்டும்.
ஜிம் செல்லாமல் நெருக்கடியான பணிக்கிடையேயும் சிட் அப்ஸ்களை செய்தால் இடுப்புத்தசை, வயிறு, பின்முதுகு தசை, கால்கள் ஆகியவை வலிமைபெறும்.
தினசரி பணிகளில் நடப்பது போன்றவற்றை வயதான பின்பும் செய்ய சிட்அப்ஸ் உதவுகின்றன. குறிப்பாக, குழிகளில் கால் வைத்தால் சமநிலை தவறும் போதும் சுதாரிப்பாக செயல்பட இப்பயிற்சி உதவுகிறது. மேலும் இப்பயிற்சியினால் முதுகெலும்பு வலுவாகிறது. எடைகளைத் தூக்குவதும் எளிதாகிறது.
சிட்அப்ஸ் பயிற்சி, கலோரிகளை வேகமாக எரிப்பதால் உடலின் வளர்சிதைமாற்றம் சீராகிறது.