நான் கரடியா, மனிதனா? - கரடிக்கே குழப்பம் - பிராங்க் தாஷ்லின் நூல்
நீ கரடி என்று யார் சொன்னது? - The bear That Wasnot
ஃபிராங்க் தாஷ்லின்
மொழிபெயர்ப்பு - ஆதி வள்ளியப்பன்
தொழில்யுகத்தில் மனிதர்களை எப்படியெல்லாம் கூலி உயர்வு, உழைப்பு உயர்வானது என்று சொல்லி கசக்கிப் பிழிகிறார்கள் என்பதை அங்கதமாக சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர் ஃபிராங்க் தாஷ்லின் எழுதி வரைந்த நூல் இது.
கரடி இரை கிடைக்காத பனிக்காலத்தில் தூங்குவதையும், அப்போது காட்டுக்குள் புகும் மனிதர்களை காடுகளை அழித்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களாக்குகிறார்கள். இதன் விளைவாக கரடி இரைக்கு உணவு இன்றி தவித்துப்போகிறது. பின் வேறு வழியின்றி தொழிற்சாலையில் நுழைய, அவர்கள் கரடியையும் வேலையாள் என நம்ப வைத்து வேலை செய்ய வைக்கிறார்கள். உண்மையில் கரடிக்கே ஒரு நிமிடம் நான் ரோம போர்வை போர்த்திய மனிதன்தானோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது.
பிரமாதமான கதையை தமிழில் அமெரிக்க நூலின் வடிவமைப்பிலேயே செய்திருக்கிறார்கள். வள்ளியப்பனின் மொழி கதையின் போக்குக்கு பேருதவி செய்கிறது. வடிவமைப்பு குணசேகரன். படிக்க வசதியாக இருக்கிறது.
நன்றி -பாலகிருஷ்ணன்