குழந்தைகளைக் கண்காணிக்கும் சீன அரசு!
பெரியவர்களுக்கு கேமிரா என்றால் சிறுவர்களுக்கு சீன அரசு ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
குவாங்சூ நகரில் மாவட்ட நிர்வாகம் 17 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாகவே வழங்கியுள்ளது. இதன்மூலம் பெற்றோர் மாணவர்களைக் கண்காணிக்க முடியும் என்று சீன அரசு பதில் கூறியுள்ளது. இது ஒருவகையில் பாதுகாப்பு என்றாலும் அரசு கண்காணிப்பை மாணவர்களுக்கு வளர்ந்து வரும்போது பழக்கப்படுத்துகிறதோ என்ற எண்ணமும் பலருக்கும் எழுகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் மாணவர்கள் குளம், குட்டை ஆகிய இடங்களுக்கு அருகில் போனால் உடனடியாக பெற்றோரின் போனுக்கு எச்சரிக்கை செய்தி வந்துவிடுகிறது. தன்னார்வமாக முன்வரும் பெற்றோர்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ், ரேடியோ சிக்னல்களில் இயங்கும் வாட்சுகள், பிரஸ்லெட்டுகளை தருவதாக அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல. பல்வேறு பள்ளிகளை அரசு ஸ்மார்ட் வாட்சுகளைப் பெற கட்டாயப்படுத்தி வருவதே உண்மை. இதன் விளைவுதான் ஜிபிஎஸ் ஆடைகளை மாணவர்கள் உடுத்துவதும். இந்த ஆராய்ச்சிகளை சீன ராணுவம் செய்துவருகிறது. பெய்டூ எனும் ஜிபிஎஸ் கண்காணிப்புத் திட்டத்தின்படி 43 செயற்கைக்கோள்களை சீனா ஒருங்கிணைத்து கண்காணிப்புத் திட்டத்தை அமல் படுத்தி வருகிறது.
ஒரே கட்சி ஒரே ஆட்சி எனும் நிலையில் சீனாவுக்கு எதிரிகளை உருவாக்காமலும், உருவான எதிரிகளை அழிக்கவும் இருக்க ராணுவம் உதவுகிறது. இதன் விளைவாக நீதித்துறையும் கூட கம்யூனிஸ்ட் கட்சிக்கேற்ப வளைந்துகொடுத்து வருகிறது.
பின்னே உயிர் என்றால் அனைவருக்கும் வெல்லக்கட்டிதானே ப்ரோ!
நன்றி: அபாகஸ்