இடுகைகள்

காப்26 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதுகாக்க நினைக்கிறேன் - ரிதிமா பாண்டே , இயற்கை செயல்பாட்டாளர்

படம்
  ரிதிமா பாண்டே ரிதிமா பாண்டே இயற்கை செயல்பாட்டாளர் இவரை இந்தியாவின் கிரேட்டா துன்பெர்க் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இவருக்கென ரிதிமா பாண்டே என்ற பெயர் இருப்பதால், அதனையே சொல்லி அழைப்போம். 2007ஆம் ஆண்டு பிறந்தவர் ரிதிமா பாண்டே. உத்தரகாண்டில் பிறந்தவரின் தந்தையும் கூட சூழல் சார்ந்த செயல்பாட்டாளர்தான். வெள்ளம், நிலச்சரிவு சார்ந்த பிரச்னைகள் பத்தாண்டுகளாக நடப்பதை கவனித்து வந்து பிறகே சூழல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  2016ஆம் ஆண்டு தனது ஒன்பது வயதில் அரசுக்கு எதிராக மாசுபாடு தொடர்பாக புகார் ஒன்றை எழுதி அனுப்பினார். அதற்கு முன்னரே தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு இதுபோல புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை தீர்ப்பாணையம் தள்ளுபடி செய்துவிட்டது. பிறகு 2016ஆம் ஆண்டு ரிதிமா, தன்னோடு பதினாறு குழந்தைகளை சேர்த்துக்கொண்டு ஐ.நாவில் மாசுபாட்டு பற்றி புகார் மனுவை வழங்கினார். இதில் துருக்கி, அர்ஜென்டினா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் மாசுபாடு பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கையை குறிப்பிட்டிருந்தார்.  2020ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடிய

பருவநிலை மாற்றம் பற்றிய இளைஞர்களின் எதிர்வினைகள்!

படம்
  சூழல் பற்றிய கருத்து மேகேக் ஆனந்த், 16 வசந்த் வேலி பள்ளி, டெல்லி நாம் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கவேண்டும். அதிக நுகர்வு சூழலை நிச்சயமாக பாதிக்கும். தங்களது வாழ்க்கை முறையை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்குவது நல்லது. நாளை என்று சொல்லாதீர்கள். இன்றே தொடங்குங்கள் ஸெனப் ஹபீப், 20 பி.டெக் மாணவி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது , குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது, கழிவுகளை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றை செய்தால்தான் நாம் வாழும் பூமியை, தாய்மடியை காப்பாற்ற முடியும். இது எதிர்காலத்தில் நமது குழந்தைகளைக் காப்பாற்ற உதவும். எனவே சூழலைக் காப்பாற்ற இப்போதே செயல்படலாம்.  தனிஷ்கா பேடி, 17 ஹெரிடேஜ் எக்ஸ்பரிமென்டல் பள்ளி குருகிராம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் பிரச்னை. இவர்களுக்கு தேவையான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூரில் கிடைக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், தேவையில்லாமல் உணவு வீணாகுவது நடைபெறாது. இதுதான் இன்னும் நீண்டநாள் உலகை நடத்திச்செல்ல உதவும். ஆரண்யக் கோஷ் மஜ