தரிசு நிலத்தை பசுமையாக்கிய சீன அரசு!
பசுமையின் திசை! சீனாவை பொருளாதார வளர்ச்சிக்கு பாராட்டுபவர்களை விட சூழல் மாசுபாட்டிற்கு கடுமையாக விமர்சிப்பவர்களே அதிகம். ஆனால், இப்போது கூறும் செய்தி பசுமை ஆர்வலர்களுக்கு நற்செய்திதான். சீனாவில் மூன்று மாகாணங்களுக்கு சேர்ந்த தரிசு நிலத்தை போராடி பாடுபட்டு, மறுபடியும் பசுமையின் திசைக்கு திருப்பியிருக்கிறது சீன அரசு. பல லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக மாறியுள்ள நிலப்பரப்பின் அளவு 6,40,000 சதுர கி.மீ. ஆகும். இருபதாம் நூற்றாண்டில் வேளாண்மைக்காக பயன்படுத்திய அதீத உரப்பயன்பாடு, நிலத்தை வளம் குன்றச்செய்தது என சூழலியலாளர் ஜான் டி லியு படம்பிடித்த ஆவணப்படம், பல்வேறு தகவல்களை நமக்கு தருகிறது. விளைச்சல் தந்த நிலம் மெல்ல தரிசாகி, அதில் இருந்து தூசிப்புயல் மஞ்சள் ஆற்றில் வந்து விழத்தொடங்கியது. இந்த ஆறு தலைநகரான பெய்ஜிங் வழியாக செல்கிறது. நிலம் மாசடைந்து ஆற்றையும் மாசுபடுத்துவதை அறிந்த சீன அரசு, இதற்கென கிரெய்ன் டு க்ரீன்(Grain to Green) என்ற திட்டத்தை உருவாக்கியது. உலகவங்கியின் நிதியுதவியோடு திட்டம் தொடங்கப்பட்டது. மாசுபட்ட நிலத்தை மீண்டும் பழையபடி பசுமையான வளம் நிறைந்த இயல்புக்கு...