இடுகைகள்

கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் வளர்ந்து வந்த கதையை தமிழ் இயக்குநர்கள் திரைப்படமாக எடுத்தனர்! - அனுராக் காஷ்யப், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் 2012ஆம் ஆண்டு கான் படவிழாவில் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு இது பெரிய கௌரவமான நிலை. இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுபற்றி பேசியபோது,  கான் படவிழா அனுபவம் எப்படியிருந்தது? 2010இல் தட் கேர்ள் இன் யெல்லா பூட்ஸ் என்ற படத்தை வணிகப்படமாகவே நான் எடுத்தேன்.  2013இல் தி லன்ச் பாக்ஸ் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. எனக்கு கான் திரைப்பட விழாவில் படத்தை திரையிடுவது முக்கியமாகப் படவில்லை. மார்கோ முல்லர் தான் வாசிப்பூர் படத்தை நான் பார்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்களுக்கு அந்தப்படம் பிடித்திருந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  கான் படவிழாவில் படத்தை திரையிட்டபோது உங்கள் அனுபவம் எப்படியிருந்தது.  எனக்கு பதற்றமாக இருந்தது. நான் தியேட்டரிலிருந்து வெளியேறி வெளியே தான் ஐந்து மணிநேரம் இருந்தேன். அப்போது அங்கே குடிக்கத் தொடங்கியிருந்தேன். திரைப்பட விழாவில் விற்கவென நான் உருவாக்கிய படம் யெல்லோ பூட்ஸ் தான். படத்திற்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது. படத்தின் இடையே பத்து நிமிட இடைவேளைதான் இருந்தது. நடிகர்களை பார்வையாளர்கள் தெருவிலேயே நிறுத்திவிட்டனர்