இடுகைகள்

உணவுநலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுநலம் தொடர்பான ஆப்கள் உங்களுக்காக!

படம்
உணவு சம்பந்தமான ஆப்ஸ் நமக்கு எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. காரணம், இயல்பாகவே காற்றில் காபி மணம், கறி மணம் என ஏதோவொன்று வயிற்றை கபகபவென பசிக்க வைத்துவிடுகிறது. இதோ ஜாலியான உணவு. டயட் குறித்த ஆப்ஸ் இவை. Daily Dozen நீங்கள் தினசரி என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன சாப்பிடவேண்டும், தண்ணீர் எவ்வளவு குடிக்கிறீர்கள் என அத்தனை விஷயங்களையும் இந்த ஆப் சொல்லச்சொல்ல தலையாட்டி நீங்கள் கேட்டுக்கொள்ளவேண்டும்.  சாப்பிடும் பொருட்களின் அளவு உள்ளிட்டவற்றையும் நீங்கள் இந்த ஆப்பில் கணக்கிட்டு ஜமாய்க்கலாம்.  Food Restrictions காய்கறிகள், இறைச்சி என எதை சாப்பிடமாட்டீர்கள் என பிறருக்கு சொல்ல உதவும் ஆப் இது. ஆங்கிலம், டச்சு மொழியில் செயல்படுகிறது. சாப்பிடமாட்டீர்கள், ஒவ்வாமை என இரண்டு ஆப்சன்களில் உணவு வகைகளை நிறைத்து மகிழுங்கள்.  OpenFoodFacts பிஸ்கட்டில் குளூட்டேன் உள்ளதா, கோலாவில் சர்க்கரை உள்ளதா என்பதை அறிய உதவும் ஆப் இது. இதில் பயனர் உள்ளிடுவது மட்டுமே உள்ளதுதான் மைனஸ் பக்கம். மற்றபடி ஓகே.  OpenVegeMap மயிலாப்பூர் மாமி வடிவமைத்த ஆப்பா என தெரியவில