இடுகைகள்

கருமுட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதரவற்ற பெண்களை கருமுட்டைக்காக கடத்தும் மாபியாவை வேட்டையாடும் இரு பெண்கள்! - சாகினி தாகினி - சுதீர் வர்மா

படம்
 சாகினி தாகினி  ரீமேக் - மிட்நைட் ரன்னர்ஸ்  சுதீர் வர்மா ரெஜினா, நிவேதா தாமஸ்  கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸ் படத்தை ரீமேக் செய்து மாற்றி எடுத்து இருக்கிறார்கள். படத்தை தமிழில் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. டப் படம் என்றால் படம் உள்ள பகுதி சார்ந்தே பெயரை சொல்லி படத்தை தமிழ் செய்தால் என்ன கெட்டுவிடப்போகிறது.... தெலுங்கானவை எப்படி மதுரை ஆக்க முடியும்..  போலீஸ் அகாடமிக்கு இருவர் தேர்வாகி வருகிறார்கள். ஷாலினி, தாமினி. இவர்கள்தான் சாகினி, தாகினி என்ற இரு பாத்திரங்கள். இருவரும்  தொடக்கத்திலேயே முட்டி மோதி பிறகு நடைபெறும் சம்பவத்தால் நண்பர்களாகிறார்கள். நட்பு என்றால்,  ஒருவர் கண் அசைத்தால் இன்னொருவர் அப்படியே செய்து முடிக்கும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள். ஒருமுறை பப்பில் மது அருந்திவிட்டு சாலையில் வரும்போது திடீரென பைக்கில் வேகமாக இளைஞர்கள் வர அவர்களை இளம்பெண் ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவளை திடீரென வேன் ஒன்றில் பிடித்து செல்கிறார்கள். அதைப் பார்த்து ஷாலினி, தாமினி என இருவரும் அவளை பின் தொடர்கிறார்கள். அதில், அவளை தூக்கிச்சென்றவர்கள் எப்படிப்பட்ட குற்றவாளிகள் என தெரிகிறது. இந்த நேரத்த

பாலூட்டிகளின் கரு முட்டை செல்களைப் பற்றி உலகிற்கு அறிவித்தவர்! - கார்ல் எர்னஸ்ட் வான் பேயர்

படம்
கார்ல் எர்னஸ்ட் வான் பேயர் ( karl Ernst Von Baer 1792-1876) உயிரியலாளர், இயற்கை அறிவியலாளர் நான் எஸ்டோனியாவின் பீப் நகரில் பிறந்தேன். டோர்பட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1814ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றேன். பிறகு, ஜெர்மனியின் உர்ஸ்பெர்க் நகருக்கு இடம்பெயர்ந்தேன். அங்குதான் எனது பிற்கால ஆராய்ச்சிகளுக்கு காரணமாக மருத்துவர் இக்னாஸ் டோலிங்கரைச் சந்தித்தேன்.  அவர்தான், கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியைச் செய்ய ஊக்குவித்தார். கருவியல் துறை சார்ந்து நான் பிளாஸ்டுலா (Blastula), நோடோசோர்ட் (Notochord)ஆகியவற்றைக் கண்டறிந்தேன்.  பேயர், விலங்குகளின் உட்கரு சார்ந்த ஆராய்ச்சியோடு இன பண்பாட்டியல், புவியல் ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். கருவுக்குள் இருக்கும் செல் அடுக்குகள் பற்றிய ஜெர்ம் லேயர் கோட்பாட்டை (Germ-layer theory) உருவாக்கினார். இதுவே நவீன கருவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தது.  1827ஆம் ஆண்டில் முதன்முறையாக பாலூட்டிகளின் கருமுட்டை செல்களைப் பற்றி அறிவியல் உலகிற்கு கூறியவர்.  https://en.wikipedia.org/wiki/Karl_Ernst_von_Baer https://www.encycloped

கருவுறாத முட்டை செல்களிலிருந்து கரு உருவாவதைப் பற்றி கூறியவர் - ஆஸ்கர் ஹெர்ட்விக்

படம்
பயா(லஜி) டேட்டா ஆஸ்கர் ஹெர்ட்விக் (Oscar Herwig 1849-1922) ஜெர்மனியின் ஹெசன் நகரில் பிறந்தார். பெற்றோர், கார்ல் ஹெர்ட்விக், எலிசெ டிராப்.ஜெனா பல்கலைக்கழகத்தில் படித்தார். உடற்கூறியல் மருத்துவர் எர்னஸ்ட் ஹெக்கல், ஆஸ்கருக்கு வழிகாட்டினார்.  ஆஸ்கர், முதலில் கரு மேம்பாடு பற்றி படித்தவர், பிறகு கருவுறுதலின் செயல்முறைகளைக் கற்க ஈடுபாடு காட்டினார். 1875ஆம் ஆண்டு ஹெக்கலோடு மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு சென்றார். அங்கு முள்ளெலிகளின் இனப்பெருக்கும் பற்றிய ஆய்வைச் செய்தார். தனது ஆய்வை ஆவணமாகவும் பதிவு செய்தார்.  1890ஆம் ஆண்டு நட்சத்திரமீன் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். அதில், கருவுறாத முட்டை செல்லில் இருந்து கரு உருவாவதைப் பற்றி முதன்முதலில் தகவல் அறிந்து ஆவணப்படுத்தியவர் ஆஸ்கர்தான். இதற்கு, பார்த்தினோஜெனிசிஸ் (parthenogenesis) என்று பெயர்.உடற்கூறியல் - உயிரியல் கழகத்தின் தலைவராக 1888 - 1921 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.  சாதனை 1916ஆம் ஆண்டு, டார்வினின் பரிணாமவளர்ச்சி கோட்பாட்டை எதிர்த்து “The Origin of Organisms: a refutation of Darwin’s theory of chance” என்ற நூலை எழுதினார்.    https://www.bbvaopen