இடுகைகள்

குளிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்! - கவிஞர் தாமரை

படம்
  எரிமலைக் குழம்பையும் துருவப் பனியையும் பிசைந்து போட்டுவிட்டு கேள்வியென்ன? சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்   நான் வெள்ளிவாசி நீ செவ்வாயிலிருந்து இறங்கியிருக்கிறாய் இடைதூரத்தை கடக்க முயல்கிறோம் நான் கண்ணீராலும் கனத்த   வார்த்தைகளாலும் நீ அதிகாரத்தாலும் அடர்ந்த மீசையாலும்   சாலையின் ஒரு திசையிலும் எதிர் திசையிலும் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கிறோம் கைகள் கோர்த்தும் விலகியும்… -தாமரை படம் - பிக்ஸாபே காப்புரிமை - குமுதம்  

அடேலி பெங்குவின்களின் வாழ்க்கைப்பாடு!

படம்
  பிட்ஸ்  பெங்குவின்  அன்டார்டிகாவில் பொதுவாக காணப்படும் பெங்குவின் இனத்திற்கு அடெலி பெங்குவின் என்று பெயர். இவை உண்ணவும், குடிக்கவும் கடல்நீரை நாடுகின்றன. சாதாரணமாக ஒருவர் உப்பு அதிகமுள்ள உணவை சாப்பிட்டால் நோய்வாய்ப்படுவார். அடெலி பெங்குவின்கள், கண்களுக்கு மேலுள்ள உறுப்பு மூலமாக அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இந்த உறுப்பு வடிகட்டி போல செயல்படுகிறது. ”அடிக்கடி தலையை உதறுவது, தும்மல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான உப்பை வெளியேற்றுகிறது. இப்படி நடக்கும்போது அதனை சுற்றிலும் உப்புநீர் தெறிப்பதைப் பார்க்கலாம்” என்றார் பெங்குவின் ஆராய்ச்சியாளரான டையான் டேநெபோலி.  அடேலி பெங்குவின்களின் உடலிலுள்ள தோல்தான் அவற்றைக் குளிரிலிருந்து பாதுகாக்கிறது. நீரால் உடல் நனைவதை தடுப்பதோடு, உடல் வெப்பம் வெளியேறி செல்லாமல் பாதுகாக்கிறது. உடலில் உள்ள முடிகளை சிறு துண்டுகளாக உள்ள பார்புலஸ் எனும் உறுப்பு ஒன்றாக இணைக்கிறது. இதன் உரோமங்களை வெல்க்ரோ (velcro) அமைப்பு போல இணைக்கிறது. உரோம அமைப்பு, வெளியிலுள்ள காற்று உள்ளே வரும்போது அதனை கதகதப்பானதாக மாற்றுகிறது.  பெங்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் அதன் கால்களில

மூக்கில் ரத்தம் கொட்டினால் என்ன அர்த்தம்? உ்ணமையும் உடான்ஸூம்

படம்
        1. உடலைக் கடுமையாக வருத்திக்கொண்டால் மூக்கில் ரத்தப்பெருக்கு ஏற்படும் . ரியல் : 1980 களில் வெளியான ஆங்கில திரைப்படங்கள் , காமிக்ஸ்களில் அதிசய சக்தி கொண்ட நாயகர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தினால் பக்கவிளைவாக மூக்கில் ரத்தம் கொட்டி மயங்கி விழுவார்கள் . உண்மையில் பனி , வறண்ட காலநிலையில் மூக்கில் ரத்தம் கொட்டுவது இயல்பானது . உயர் ரத்த அழுத்தம் , மூக்கை விரலால் நோண்டுவது காரணமாகவே பெரும்பாலானோர்க்கு மூக்கில் ரத்தம் கொட்டுகிறது . சில நிமிடங்கள் தானாகவே ரத்தம் கொட்டுவது நின்றுவிடும் . இப்படி ரத்தம் கொட்டுவதற்கு எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று பெயர் . ரத்தம் உறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் . உடலை அல்லது மூளையை அதிகம் பயன்படுத்துவதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதில்லை . 2 . பூமியில் நிலநடுக்கும் ஏற்படுவது போல வானிலும் ஏற்படுவது உண்டு . ரியல் : சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தில் சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தாற் போன்ற பெரும் சத்தம் கேட்டது . இந்த ஒலிகள் இரண்டு , மூன்று நாட்கள் ஒலித்திருப்பதை தேசிய தட்பவெப

குளிரில் சளி பரவுவது எப்படி?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குளிர்பிரதேசத்திலும் சளி பிடிக்குமா? நிச்சயமாக. நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இது நடக்கும். சளி பிடித்து மூக்கைச் சிந்தி சுவற்றில் துடைத்துவிட்டு நடப்பீர்கள். ரினோவைரஸ் இதற்கு காரணம். இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு கால்களில் ஐஸ்கட்டிகளும், சிலருக்கு நீரும் வைக்கப்பட்டது. குளிர்ந்துபோன ஐஸ்கட்டியைக் காலில் வைத்திருந்தவர்களுக்கு சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் 30 சதவீதம் காணப்பட்டது. பிறருக்கு இதைவிட குறைவான வாய்ப்புகள் காணப்பட்டன. குளிர்ந்த சூழல், உடலில் வெள்ளை அணுக்கள் செயல்படும் வேகத்தை குறைப்பது உண்மை. இதன் விளைவாக, குளிர்ந்த சூழலில் நோய்க்கிருமிகள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. பிறருக்கும் பரவுகிறது. குளிர்ந்த சூழலில், உடலை சூடாக வைப்பதற்கே உடலின் சக்தி செலவாகிறது. எனவே, உடலை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது. நன்றி: பிபிசி