இடுகைகள்

சேமிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!

படம்
  ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம் இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.  ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும்.  மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள மரபணு

காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

படம்
  பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும்.  முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம்.  உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமாகவே மாறும். பு

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

படம்
  முதலீட்டின் தேவை 1 ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்? நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை   மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள். சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.   எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம். 1.        இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம். 2.        உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார். 3.        விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 4.        உங்களுடைய தற்போதைய வயது 30. ஐம்பது வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள். உங்களிடம் ஓய்வுக்குத் தேவையான ப

சூரிய ஆற்றலை புதுமையான முறையில் சேமிக்கும் இஸ்ரேலிய நிறுவனம்!

படம்
  சோலார் ஆற்றலை சேமிக்கும் புதிய வழி!  இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சோலார் ஆற்றலை சேமிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளது. சூரிய ஆற்றலை, சோலார் பேனல்களின் மூலம் பகலில் சேமிக்கலாம், ஆனால், இரவில் ஆற்றலை சேகரிப்பது கடினமானது. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது. இஸ்ரேலின் தெற்குப்பகுதியில், பாறைகளை உள்ளடக்கிய பாலைவனம் உள்ளது. இங்கு சோலார் பேனல்களை வைத்து மின்சாரத்தை தயாரிக்கின்றனர். நாட்டில் பயன்படும் பெரும்பான்மையான மின்சார ஆற்றல், இங்கிருந்தே பெறப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் ஆற்றல் தேவைக்கு, கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.  புதுப்பிக்கும் ஆற்றலை எளிதாக பெற்றாலும், அதனை சேமிக்க கூடுதலாக செலவழிக்கவேண்டியுள்ளது. இதனால் இதனைப் பலரும் பயன்படுத்த தயங்கி வருகின்றனர். கிப்புட்ஸ் யாஹெல் (kibbutz yahel) எனும் சிறு மக்கள் இனக்குழு, சோலார் ஆற்றலை குறைந்த விலையில் எளிதாக சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.  இவர்களால், இரவிலும் கூட ஆற்றலை சேமிக்க முடிவதுதான் இதன் சிறப்பம்சம்.  சோலார் பேனல்களில் பகல் நேரத்தில் கிடைக்கும் உபரி ஆற்றலை சேமிக்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி நிலத

வாழ்க்கையை மாற்றும் பல்வேறு பழக்கங்கள், இதன் பின்னணியில் உள்ள உளவியல் ஆய்வுகள்!

படம்
                முடிவெடுக்கும் பழக்கம் ! உலகம் இன்று நவீனமாக மாறி வருகிறது . அதற்கேற்ப தினசரி வாழ்க்கையிலும் , தொழிலை சார்ந்தும் ஏராளமான முடிவுகளை எடுத்துவருகிறோம் . இதில் எது சரி , எது தவறு என்பதை உணர்வதற்கு காலம் தேவைப்படலா்ம் . ஆனால் இப்படி முடிவு எடுப்பதற்கான தகவல்களை நாம் எப்படி பரிசோதிக்கிறோம் , அலசுகிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம் . அப்போதுதான் ஆபத்தான காலங்களில் மனிதர்கள் உயிர்பிழைத்து வந்திருப்பதற்கான திறனை அறிய முடியும் . சுயநலன் , பொதுநலன் என இரண்டு சார்ந்தும் முடிவுகளை வேகமாக அல்லது நிதானமாக எடுப்பது நடைபெறுகிறது . இதில் முன்னுரிமை தருவதைப் பற்றி யோசிப்பதும் எப்படி நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம் . தள்ளுபடி ஆதாயங்கள் இயல்பாகவே மனித மனம் உடனடியாக பரிசுகளை ஆதாயங்களை எதிர்பார்க்க கூடியது . இதனால் உலகம் முழுக்க பொன்ஸி திட்டங்கள் இன்றும் கூட செயல்பட்டு மக்களை ஏமாற்றுகின்றன . இதுபற்றிய செய்திகளைப் படித்தாலும் கூட அதிக லாபம் என்ற சொல்லை மக்கள் கைவிடத் தயாராக இல்லை . இது அடிப்படையான மனிதர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிற தன்

எல்இடி பல்பை கண்டுபிடித்த ஜப்பானிய இயற்பியலாளர் இசாமு அகாசகி!

படம்
      இசாமு அகாசகி     இசாமு அகாசகி 1929-2021 2014 ஆம் ஆண்டு அகாசகி மேலும் இரண்டு அறிவியலாளர்களோடு சேர்ந்து நோபல் பரிசு வென்றார் . அகாசகி , ஹிரோஷி அமானோ , சுஜி நகமுரா ஆகியோரோடு சேர்ந்து அகாசகி நோபல் விருது வென்றார் . இதைப்பற்றி அகாடமி , பிறர் தோற்றுப்போன அறிவியல் விஷயங்களில் இம்மூவரும் வெற்றி கண்டனர் . தொண்ணூறுகளில் இம்மூவரும் நீலநிற ஒளி உமிழும் டயோடு ஒன்றைக் கண்டுபிடித்தனர் . இதனை புரட்சிகர மாற்றம் என்று கூறினர் . முப்பது ஆண்டுகளாக மூவரும் நீல நிற ஒளியை ஒளிரும் செமி கண்டக்டர்களை உருவாக்கினர் . அகாசகி என்ற இயற்பியலாளர் 92 வயதில் மறைந்துள்ளார் . இவர்தான் மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யும் எல்இடி முறையைக் கண்டுபிடித்தார் . எல்இடி பல்புகள் ஒரு லட்சம் மணிநேரம் ஆயுளைக் கொண்டவை . இதில் ப்ளூரசென்ட் பல்புகள் 10 ஆயிரம் மணி நேரங்களைக் கொண்டவை . குண்டுபல்புகள் ஆயிரம் மணிநேரம் மட்டுமே தாக்கு்ப்பிடிக்கும் . எல்இடி பல்புகள் பிற பல்புகளை விட நான்கு மடங்கும் . குண்டுபல்புகளை விட 20 மடங்கும் எரிபொருள் சிக்கனம் கொண்டவை . 2010 ஆம் ஆண்டு மேஜோ பல்கலைக்கழகம

சொந்த சேமிப்பைக் கரைத்து கிராம மக்களுக்கு சோறிட்ட ராஜஸ்தான் தம்பதி!

படம்
                  சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி ! கடந்த ஆண்டு மார்ச் 24 இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது . அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம் , வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே . இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார் . ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர் . அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர் . கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது . பல்வேறு சிறு , குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது . நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது . இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா , முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை , பருப்பு , மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர் . கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து

இளைய தலைமுறையினர் சேமிக்கிறார்களா?

படம்
pixabay பூமர், ஜென் இசட் ,மில்லியனிய ஆட்கள் என அனைவரையும் இணைப்பது பணம்தான். ஆம். இவர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை. இன்று இயர்போன் மாட்டாத இளைஞர்களை நீங்கள் எங்கும் தேடித்தான் பிடிக்கவேண்டும். அதேபோலத்தான் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவும். ஜியோவை சல்லீசு ரேட்டில் வாங்கி அளவில்லாத இணையத்தை நுகர்பவர்கள், தனக்கான நலன்களையே முக்கியமாக கருதுகிறார்கள். சமூகத்தை இணையத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரங்கள் எப்படியோ, ஆனால் கல்யாணம் ஆகி ஹீரோ பைக் வாங்கி செட்டில் ஆகும் விஷயத்தில் எந்த மாற்றமுமில்லை. பூமர் முதல் மில்லியனிய ஆட்கள் ஆட்கள் வரை காசு சேர்ப்பதிலும், அதனை முதலீடு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இதில் ஜென் இசட் ஆட்கள் கில்லி என்கிறார் வலைத்தளத்தில் நிதி மேலாண்மை பற்றி எழுதி வரும் லாவண்யா மோகன். இவருக்கு எப்படி நிதிமேலாண்மை பற்றி பிறருக்கு சொல்வதில் ஆர்வம் வந்தது? என்று கேட்டோம். எங்கள் வீட்டில் செய்யும் செலவுகள், வருமானம் பற்றி சுதந்திரமாக பேசுவார்கள். இதன் அடிப்படையில்தான் நான் பொருளாதாரம் பற்றி எழுதத் தொடங்கினேன

குழந்தைகளுக்கு சரி, தவறு தெரியுமா? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
மிஸ்டர் ரோனி டிம்மர் ஸ்விட்சுகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்கின்றனவா?  திருகும் இந்த வகை ஸ்விட்சுகள் எளிதாக இயக்க முடிவது இதன் சிறப்பம்சம். ஆனால் இதனால், மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்று கூறமுடியாது. இதனை அணை நீரை சேமித்திருப்பது போல புரிந்துகொள்ளலாம். இதனால் மின்சாரம் சேமிப்பது போல தோன்றலாம். ஆனால் பிற ஸ்விட்சுகளைப் போலவே இதுவும் செயல்படுகிறது. 2 குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்பதைப் புரிந்துகொண்டு பிறக்கிறார்களா? உளவியலாளர்கள் குழந்தைகள் வளர வளர வெளிப்புறச்சூழலைப் பெற்று அறிவை வளர்த்துக்கொண்டு சரி தவறுகளைப் புரிந்துகொள்கின்றனர் என்று முடிவுக்கு வந்தனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்ற விஷயங்களை புரிந்துகொள்கிறார்கள் என்று தற்போது சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆராய்ச்சி ஒன்றை செய்தனர். இதில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தைகள் மலைத்தொடர் வடிவிலான உருவத்தை உருவாக்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சில எழுத்துகளையும் அடையாளம் கண்டுபிடிக்க முய