இடுகைகள்

சீன ஆறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலிஃபோர்னியா காட்டுத்தீ - போபால் விஷவாயு, சீனாவில் நச்சு நீர்,

படம்
  ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுத்தும் தீமைகள்   ஆஸ்பெடாசிலுள்ள நார்கள், மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது நுரையீரலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. மூச்சு விடவே திணறுவார். நுரையீரலின் மேலுள்ள மெல்லிய அடுக்கின் பெயர், பிலுரா. இதை ஆஸ்பெடாஸ் வேதிப்பொருள் தடிமனாக்குகிறது. எனவே மூச்சுவிடுவது கடினமாகிறது. ஆஸ்பெடாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு மெசோதெலியோமா என்று பெயர். இந்த நோய் ஒருவருக்கு ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. அதாவது, மெல்ல கொல்லும் விஷம் போல. முதலில் நுரையீரலில் பரவும் புற்று பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவுகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவது கடினமாகிறது என்றால் இதயம் கடினமாக வேலை செய்யும்படி ஆகிவிடும். இதனால் இதயத் தசைகள் மெல்ல கடினமான இயல்பை பெறும். இது மார்பு வலியை உருவாக்கும்.   அமெரிக்காவின் மாண்டனாவில் உள்ளது லிபி. இங்கு ஆஸ்பெடாஸ் பல்வேறு பொருட்களில் கலந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை அகற்ற மட்டுமே அமெரிக்க அரசுக்கு அரை பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. அரசின் சூழல் பாத